தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

புதிய அரசாங்கத்தின் மாற்றத்துக்கு உதவுங்கள்! தடம்புரள செய்ய வேண்டாம்: கூட்டமைப்பினருக்கு மோடி அறிவுரை

மோடி விஜயத்தின் போது முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படாமை குறித்து மங்கள விளக்கம்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 02:48.18 AM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகை, 27 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவரின் வருகை என்ற அடிப்படையில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இவ்விஜயத்தின் போது சம்பூர் அனல் மின்நிலையம், மீனவர் பிரச்சினை போன்றவை தொடர்பில் முக்கிய உடன்படிக்கைகள் எவையும் செய்து கொள்ளப்படவில்லை.
எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவுகள் வலுப்பெற்று வருகின்றன என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மோடியின் விஜயம் ஒரு பாரம்பரிய விஜயம் என்ற அடிப்படையிலேயே நடைபெற்றது, அதனால் பாரிய பிரச்சினை தொடர்பில் உடன்படிக்கைகள் எவையும் செய்துக்கொள்ளப்படவில்லை.
எனினும் சம்பூர் அனல் மின் நிலையம், இந்திய மீனவர் பிரச்சினை, இந்திய இலங்கை வர்த்தக உடன்படிக்கை போன்றவை தொடர்பில் தீர்வுகள் எட்டப்படும் என்றும் சமரவீர தெ ஹிந்துவுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் சுடப்படுவார்கள் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வெறுமனே உள்ளூர் மீனவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு அச்சுறுத்தலாக மாத்திரமே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13வது அரசியலமைப்பு முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் வலியுறுத்தியமை தொடர்பில் கருத்துரைத்த மங்கள சமரவீர, இலங்கையின் புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நல்லிணகத்துக்கான பணிகளை அந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேன பிரித்தானியாவில் உறுதியளித்தப்பட்டி ஒரு மாதக்காலப்பகுதியில் போர்க்குற்றம் தொடர்பான உள்ளூர் விசாரணை பொறிமுறை அமைக்கப்படும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணரால் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது குற்றம் சுமத்தப்படுவோர் மீது உரிய விசாரணைகளை உள்ளூர் பொறிமுறை முன்னெடுக்கும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு எவ்வித தடைகளும் இல்லை. எனினும் அவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அவர் திருடிய சொத்துக்கள் சர்வதேச அளவில் வியாபித்துள்ளன. அதனை தேடி அரசாங்கம் செயற்படுகிறது என வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களை விசாரிக்க சர்வதேசத்தின் உதவியை நாடும் இலங்கை!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
மகிந்த மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் குறித்த விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு தமது அரசாங்கத்திற்கு உள்ளது, என த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக தாம் ஏற்கனவே உலக வங்கியின் உதவியை நாடியுள்ளோம். ராஜபக்சவினால் கையூட்டல் செய்யப்பட்ட சொத்துக்களில் அதிகமானவை வெளிநாடுகளிலேயே முடக்கப்பட்டுள்ளது.
அதனால் ராஜபக்ச குடும்பம் கொள்ளையிட்ட சொத்துக்களை மீட்பதற்கு எமக்கு பல சர்வதேச அமைப்புக்களின் உதவி தேவையாகவுள்ளது. அதன் அடிப்படையிலேயே தான் நாங்கள் இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் உதவியை நாடவுள்ளோம்.
அதேவேளை கொள்ளையிடப்பட்டுள்ள சொத்துக்களில் சில மில்லியன் சொத்துக்களை இதுவரை நாம் மீட்டுள்ளோம் என இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw2E.html


புதிய அரசாங்கத்தின் மாற்றத்துக்கு உதவுங்கள்! தடம்புரள செய்ய வேண்டாம்: கூட்டமைப்பினருக்கு மோடி அறிவுரை
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 02:55.03 AM GMT ]
இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் மாற்றத்துக்கான ஆரம்பத்துக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உதவியளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் மாற்றத்துக்கு உதவியளிக்க வேண்டும்.அதனைவிடுத்து அது தடம்புரள அனுமதிக்கக்கூடாது என்று மோடி, கூட்டமைப்பினரிடம் கேட்டுக்கொண்டார்.
நேற்று கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தபோது இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
எப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின கருத்துக்கள் ஒரே குரலாக வெளியிடப்படுவதை கூட்டமைப்பு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் மோடி கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மோடி இலங்கையின் நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரை காத்திரமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டுறவு சமஸ்டியில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டதையும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw2F.html

Geen opmerkingen:

Een reactie posten