தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

மோடியின் இலங்கை விஜயம் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும்: தமிழிசை

வாக்குச் சாவடிகளில் குழப்பங்களை விளைவிப்போரை சுடுவதில் பிழையில்லை: தேர்தல் ஆணையாளர்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 03:07.53 AM GMT ]
தேர்தலில் கணனி மோசடி என்பது ஓர் மாயை மட்டுமே என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சட்டக் கல்லூரி மாணவர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் கணனி மோசடி என்பதே 100 வீதமான மாயையாகும். திரட்டப்பட்ட தகவல்கள் வெளியிடங்களுக்கும் வழங்கப்படுகின்றன.
கணனியை நாம் ஓர் எண்ணிக்கைகளை கூட்டும் ஓர் கருவியாகவே பயன்படுத்துகின்றோம்.
கடந்த தேர்தலில் எதற்கும் அஞ்சாமல் மக்களின் வாக்குரிமையை உறுதி செய்ய நான் செயற்பட்டேன். நாட்டில் தேர்தல்கள் சுயாதீனமாக நடைபெறவில்லை என்ற நிலைப்பாடு காணப்பட்டது.
யார் வெற்றியீட்டினாலும் தோற்றாலும் மக்கள் சுயாதீனமாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அண்மையில் பிரதமர் ஓர் கருத்தை வெளியிட்டிருந்தார்.
வீட்டுக்கு அத்துமீறி பிரவேசிக்கும் ஒருவரை சுட முடியும் எனவும் தற்பாதுகாப்பு நோக்கில் சுட்டுக் கொலை செய்ய முடியும் எனவும்.
சட்டங்கள் எங்கு இயற்றப்படுகின்றன? நாடாளுமன்றில். நாடாளுமன்றம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது, தேர்தல் ஊடாகவே நாடாளுமன்றம் உருவாக்கப்படுகின்றது.
எனவே வாக்குச் சாவடிகளில் குழப்பங்களை விளைவிப்போரை சுட்டால் ஒன்றும் பிழையில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மோசடிக்காரர்களை கைது செய்வதில் தாமதம் ஏன்?: சுஜுவ சேனசிங்க விளக்கம்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 04:53.10 AM GMT ]
கடந்த அரசாங்கத்தில் மோசடிகளில் ஈடுபட்டபட்டவர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டமைக்கான காரணம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளே காணரம் என பிரதி நீதி அமைச்சர் சுஜிவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் 100 நாட்களுக்குள் அவர்களை கைது செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் ஏதாவது முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தவர்களை எதிர்வரும் 2, 3 நாட்களில் கைது செய்யப்படவுள்ளனர். எனினும் அவ்வாறான ஒரு நிலமை இன்னமும் இலங்கையில் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

மோடியின் இலங்கை விஜயம் தமிழர்களின் நல்வாழ்வுக்கு வழி வகுக்கும்: தமிழிசை
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 04:31.33 AM GMT ]
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையானது, ஈழத்தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்லாது உலக தமிழர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழக பாரதிய ஜனதாக கட்சி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்கள் ஆட்சி அதிகாரத்துடன் கூடிய நல்வாழ்வை பெற்று கொள்வதற்கும், மீள்குடியமர்வதற்கும், அவர்களுக்கென கட்டப்பட்ட வீடுகளில் குடியேறவும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் வழிவகுக்கும்.
மேலும் சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து இலங்கையை மீட்டு சமூக, பொருளாதார ரீதியில் இலங்கையுடன் இணைந்து செயற்படவும், இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வையும் இந்திய பிரதமர் பெற்று கொடுப்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தினால் தமிழர்களின் வாழ்க்கை மறுமலர்ச்சி பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw3A.html

Geen opmerkingen:

Een reactie posten