தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 maart 2015

ஆஸி. புகலிடக்கோரிக்கையாளர்கள் கம்போடியாவில் விரைவில் குடியமர்த்தப்படுவர்! அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர்

இந்தியாவும் இலங்கையும் நாணயத்தின் இரு பக்கங்கள்-பிரதமர் ரணில்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 01:55.19 AM GMT ]
இந்தியாவும் இலங்கையும் நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. மொழி கலாசாரம், சட்டம், பாராளுமன்ற முறை, கிரிக்கெட் ஊடாக இருநாடுகளும் இணைந்துள்ளன. என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் பாராளுமன்ற உரையை தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
வெஸ்ட் மினிஸ்ட் முறை அமுல்படுத்தப்பட்ட நீண்ட வரலாறு எமக்கிருக்கிறது. மீண்டும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை அமுல்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
பழமை வாய்ந்த ஜனநாயக முறை இலங்கையில் காணப்படுகிறது. 1835ல் அரசியலமைப்பு சபை இருந்தது.
இந்தியாவுக்கும் எமக்கும் மொழி, கலாசாரம் என்பவற்றுக்கிடையில் நெருக்கம் காணப்படுகிறது. மன்னர் ஆட்சிக்காலம் முதல் பல்வேறு தொடர்புகள் இருந்து வருகிறது.
நாமும் இந்த வரலாற்றில் பங்காளராக இருக்கிறோம். மொழி கலாசாரம், சட்டம், பாராளுமன்ற முறை, கிரிக்கெட் ஊடாக இருநாடுகளும் இணைந்துள்ளன.
இரு நாடுகளும் நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளன. எமது மக்களுக்கு சமாதானத்தையும் சுபீட்சத்தையும் வழங்குவதே எமது நோக்கமாக உள்ளது எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw2C.html
கோத்தபாயவை கைது செய்ய வேண்டுமென தீர்மானிக்கவில்லை!– அனுரகுமார திஸாநாயக்க
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 01:12.16 AM GMT ]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய வேண்டுமென தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாருடைய தலையில் தோன்றும் கற்பனைகளை தேசிய நிறைவேற்றுப் பேரவையின் தீர்மானங்களாக அறிவிப்பது மிகவும் மோசமான குற்றமாகும்.
கோத்தபாய ராஜபக்ச அல்லது வேறும் யாரையும் கைது செய்ய வேண்டுமென தேசிய நிறைவேற்றுப் பேரவையில் தீர்மானிக்கவில்லை.
தேசிய நிறைவேற்றுப் பேரவை ஓர் அரசியல் அமைப்பாகும்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மட்டுமன்றி சாதாரண பிரஜை ஒருவரை கைது செய்யுமாறு தீர்மானிக்கும் சட்ட ரீதியான அதிகாரம் கூட தேசிய நிறைவேற்றுப் பேரவைக்கு கிடையாது.
அவ்வாறான கைதுகள் கடந்த காலங்களில் நடைபெற்ற போதிலும், தற்போதைய ஆட்சியில் அவ்வாறான கைதுகள் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது.
அரசியல் அமைப்பு ரீதியான நிறுவனங்களின் ஊடாகவே கைதுகள்  மேற்கொள்ளப்பட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோத்தபாய கைது தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று தொலைபேசி மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையில் விசேட கூட்டம்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 01:16.10 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கவுள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நிலவி வரும் உள்ளகப் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால தேர்தல்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.




ஆஸி. புகலிடக்கோரிக்கையாளர்கள் கம்போடியாவில் விரைவில் குடியமர்த்தப்படுவர்! அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர்
[ சனிக்கிழமை, 14 மார்ச் 2015, 12:16.33 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புகலிடம் கோரி வந்தவர்களில் ஒரு பகுதியினரை கம்போடியாவில் மீளக்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகள் ஒரு சில வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் டத்தொன் தெரிவித்தார்.
கம்போடியா தலைநகரான புனொம் பென்னில் அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து உரையாடியதை தொடர்ந்து பீற்றர் டத்தொன் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் பிரகாரம் அவுஸ்திரேலியாவானது கம்போடியாவுடன் 40 மில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கையை கடந்த செப்டெம்பர் மாதம் கைச்சாத்திட்டிருந்தது.
நவுறுவிலிருந்து கம்போடியாவில் மீளக் குடியமர்த்தப்படவுள்ள 5 க்கும் அதிகமான புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான வாழ்க்கை செலவுகள், வீட்டு வசதி மற்றும் கல்விக்கான செலவை அவுஸ்திரேலியா செலுத்தவுள்ளது.
மீள் குடியமர்த்தலை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் செய்வதற்கான கம்போடிய தலைமைத்துவத்தின் உறுதிப்பாட்டிற்கு வரவேற்பளிக்கிறேன்'' என பீற்றர் டத்தொன் கூறினார்.
5 புகலிடக்கோரிக்கையாளர்களை மீளக் குடியமர்த்துவதற்காக 40 மில்லியன் டொலரை வழங்குகின்றமை வேடிக்கையான ஒன்றாகவுள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த றிச்சர்ட் மார்லெஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் மேற்படி மீள்குடியேற்ற திட்டம் வெற்றி பெறுவதை பொறுத்து அதனை விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கிறீன்ஸ் கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினர் சாரா ஹன்ஸன் - யங் விபரிக்கையில், கம்போடியா தனது சொந்த மக்களது உரிமைகள் குறித்து கவனம் செலுத்தாத அதேசமயம் அகதிகள் துஷ்பிரயோகங்கள் தொடர்பான பதிவுகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmw1I.html

Geen opmerkingen:

Een reactie posten