[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:54.32 AM GMT ]
இதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான விசா வழங்கப்படுவதற்கு முன்னர், அவர்கள் தமது சொந்த நாட்டிலிருந்து தாம் குற்றச்செயல் எதிலும் ஈடுபடவில்லை என்பதை அத்தாட்சிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக் கையளிப்பது அவசியமாகும்.
பிரித்தானியாவில் தற்போதுள்ள எல்லைப் பாதுகாப்பு விதிகளை இவ்வாறு மேலும் கடுமையாக்குவதன் மூலம் மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பதை தடுக்க முடியும் என அந்நாட்டு அமைச்சர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.
விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த நடைமுறையின் கீழ், பிரித்தானியாவுக்கு செல்ல விரும்பும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள், தமக்கு எதிரான கடந்த 10 வருட காலப் பகுதியில் குற்றவியல் பதிவுகள் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் சான்றிதழை தத்தமது நாட்டு அதிகாரிகளிடமிருந்து பெறவேண்டியுள்ளது.
ஆனால் இந்த புதிய நடைமுறைக்கு 18 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள், புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதற்கு சாத்தியமற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் விதிவிலக்குப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmo7J.html
சுவிஸ் வங்கிகளில் இலங்கையர் வைப்பு செய்துள்ள பணம் குறித்து விசாரணை!- நிதியமைச்சர் ரவி
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 01:23.55 AM GMT ]
சுவிட்சர்லாந்து வங்கிகளில் 90 பேருக்கு கணக்குகள் காணப்படுகின்றன.
சுமார் 129 வங்கிக் கணக்குகளில் 85 மில்லியன் சுவிஸ் பிரான்க் பணம் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், மாடல் அழகிகள் போன்றவர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நாட்டின் நிதிச் சட்டங்களுக்கு அமைவாக இந்தப் பணம் சம்பாதிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இதுவரையில் முறைப்பாடு செய்யப்படவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுமா நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
டுபாய் தேசிய வங்கியில் இரு இலங்கையருக்கு சொந்தமான வங்கி கணக்கில் 720 மில்லியன் டொலர்கள்! – நிதியமைச்சர் தகவல்
உக்ரைன், டுபாய், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ள இலங்கையர்களின் வங்கி கணக்குகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு இலங்கையர்களுக்கு சொந்தமான 720 மில்லியன் டொலர்களும் மேலும் 14 இலங்கையர்களுக்கு சொந்தமான 26 மில்லியன் டொலர்கள் டுபாய் தேசிய வங்கியில் வைப்பிலிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
129 இலங்கையர்கள் சுவிஸ் வங்கிகளில் 92 வங்கி கணக்குகளை பேணி வருவதுடன் அவற்றில் 85 மில்லியன் பிராங்குகள் வைப்பிலிடப்பட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தி குறித்து ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சுவிஸ் வங்கிகளில் பணத்தை வைப்பிலிட்டுள்ளவர்களில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் நடிகைகள் அடங்குவதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைது தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்: சபாநாயகர் கடும் உத்தரவு
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 01:46.45 AM GMT ]
பிரதிநீதித்துறை அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் கேள்வி ஒன்றின் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.
1953 இன் 21 சரத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்ற அமர்வுக்கு வரும் போதோ அல்லது நாடாளுமன்றத்தில் இருந்து செல்லும் போதே கைது செய்யப்படலாகாது.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்திருந்தால் அவரை, சபாநாயகருக்கு அறிவித்த பின்னரே கைது செய்ய முடியும் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே 1958, 1960, 1961ஆம் ஆண்டுகளில் இந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டுள்ளன.
எனினும் 1971ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமல் இடம்பெற்ற கைது ஒன்று தொடர்பில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும். 1958இல் எஸ்டபில்யு ஆர் டி பண்டாரநாயக்கவும் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியமையை சபாநாயகர் சமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் வரப்பிரசாதங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த வழமை கடந்த காலங்களில் அமல்படுத்தப்பட்டது. எதிர்காலத்திலும் இந்த மரபு பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்ட போது, சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா முறைப்பாடு செய்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால் அது குறித்து சபாநாயகருக்கு அறிவுறுத்தப்பட வேண்டுமா, இல்லையா என்பத குறித்து அண்மையில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
சிவில் வழக்கு ஒன்று தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்வதில் சில வரையறைகள் காணப்படுகின்றன.
எவ்வாறெனினும், குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுவது தொடுhபில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்ட போது அறிவிக்கப்படாமை குறித்து நாடாளுமன்றில் நேற்று விசேட அறிவிப்ப ஒன்றை விடுத்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmpyC.html
Geen opmerkingen:
Een reactie posten