[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 01:48.54 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பின் நான்கு கட்சிகளினால் இந்த கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி கண்டியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இவ்வாறு கூட்டாக இணைந்து இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
கண்டியில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு சுதந்திரக் கட்சியின் பெரும் எண்ணிக்கையிலான சிரேஸ்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் தொடரின் முதலாம் கூட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி நுகோகொடையில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்சித் தலைமையின் அனுமதியின்றி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வேறும் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாத என தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்டி கூட்டத்தில் பங்கேற்குமாறு மஹிந்தவிற்கும் அழைப்பு
கண்டியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய வேண்டுமெனக் கோரி கண்டியில் எதிர்வரும் 6ம் திகதி பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை நடத்த உள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் தலைவராக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
கண்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது என நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmpyD.html
மூன்று தலைவர்களை இணைக்க வைப்பது வேடிக்கையானது- ரணில்
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:47.11 AM GMT ]
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இந்த மூன்று தலைவர்களையும் இணைக்கும் வைக்கும் முயற்சிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நகைச்சுவையாக கூறினார்.
இதன்போது நாடாளுமன்றத்தில் சிரிப்பொலியை கேட்கமுடிந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தற்போது மைத்திரிபால விளங்குகிறார். ஆலோசனையாளர்களாக சந்திரிகாவும் மஹிந்தவும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்!- வடக்கு முதல்வர் நம்பிக்கை
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:09.02 AM GMT ]
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், 1948லிருந்து தொடரும் தேசிய பிரச்சினைக்கு உங்கள் தலைமையிலான அரசாங்கம் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
எமது மாகாணத்திற்கு வருகை தந்துள்ள உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
தேசிய பிரச்சினைக்கு மூளையின் மூலமன்றி இதயத்திலிருந்தே தீர்வு காண முடியும். மனங்களில் மாற்றமேற்பட்டு சிந்தனை மாற்றம் ஏற்படுதல் இதற்குமிக அவசியமாகும்.
பெளத்த மதத்தின் முக்கியமான பெரியார்கள் வாழ்ந்த பொலன்னறுவையில் வாழும் உங்களுக்கு அன்றைய மதப்பெரியார்களைப் போன்றே மக்களின் மனங்களில் மாற்றமேற்படுத்துவது இலகுவானது. உங்களால் அது முடியும்.
நான் எனது சிறுபராயத்தில் அநுராதபுரம் மகா போதிக்கருகில் வாழ்ந்தவன். எமது இந்து மக்களும் மஹா போதிக்கு பெரும் கெளரவமளித்து வருகின்றனர். மஹா போதியானது அன்பு கருணை போன்றவற்றை மனதிற்கு வழங்குகின்றது. இதனால் அதனை அண்டி வாழ்ந்த எமக்கும் அன்பும் கருணையும் எப்போதும் எமது மனதில் நிலைத்துள்ளது.
எமது தேசிய பிரச்சினையைப் பொறுத்த வரை 1948 லிருந்து தொடர்கிறது. சில காலங்களில் சிலர் இதனூடே இனவாதத்தைக் கிளப்பினர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட பல விடயங்கள் பல்வேறு சந்தேகங்களுக்கே வழி வகுத்தன.
13வது திருத்தம் ரணசிங்க பிரேமதாச காலத்திலும் அதற்கு பின்னரான நீதிமன்ற தீர்ப்பிலும் பலமிழந்திருந்தது.
18வது திருத்தம் மற்றும் ‘திவிநெகும’ சட்டம் மூலமும் இது பலமற்றதாக்கப்பட்டதை சகலரும் உணர்வர்.
1987 காலங்களில் தலைவர் அமிர்தலிங்கமும, ஆர். சம்பந்தனும் 13வது திருத்தம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மார்க்கமல்ல என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் மத்திய அரசின் கருத்தை மாகாண அரசு ஏற்கவேண்டும் என்ற விதத்திலேயே செயற்பட்டார்.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை இரண்டு மாகாணங்களாக இவை இருந்தபோதும் பாரதூரமான ஒரேவிதமான பிரச்சினைகளைக் கொண்ட மாகாணங்களாகவே இருந்தன.
இரண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற ரீதியில் இவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்தி செயற்படுவது முக்கியமாகும்.
மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சினை பற்றி ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். வழக்குத் தொடரப்படாதவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
அரச துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் சுன்னாகம் குடிநீர் பிரச்சினை போன்றவை தொடர்பில் ஜனாதிபதி தமது மேலான கவனத்தை செலுத்தி தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmo7E.html
Geen opmerkingen:
Een reactie posten