தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் இலங்கை, ஐ.நா விசாரணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன்?



பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டு தமிழக-இலங்கை மீனவர்கள் 11ம் திகதி பேச்சுவார்த்தை
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:27.21 AM GMT ]
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை எதிர்வரும் 11-ந் திகதி நடைபெறுகிறது. 
இந்திய-இலங்கை இடையே உள்ள கடல் பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பாக, தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதுடன், மீன்வளத்தை முற்றிலுமாக அழித்து வருவதாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
சிறிசேன ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழக மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அந்தவகையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 86 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 10 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, 13-ந் திகதி இலங்கைக்கு செல்கிறார். அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அவரது பயணத்துக்கு முன்பாக தமிழக-இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதன்படி, இலங்கைக்கான இந்திய தூதர் வை.கே.சின்கா நேற்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கேல் பெரேராவை சந்தித்தார்.
அப்போது, பிரதமரின் வருகைக்கு முன்பாக, 12-ந் திகதியளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை ஏற்றுக்கொண்ட இலங்கை அமைச்சர், இதுதொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், வடக்கு மாகாண மத தலைவர்களையும் சந்தித்து பேசுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, தமிழக- இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளிடையே 11-ந் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் இணைப்பு
கச்சத்தீவு அருகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 2 ஆயிரம் ராமேஸ்வர மீனவர்களைின் மீன்பிடி நடவடிக்கைகளை இலங்கை கடற்படையினர் தடுத்துள்ளனர்.
கடற்படையினர் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் போத்தல்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், மீனவர்களின் 600 படகுகள் மீது மோதி, வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்ததால், மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரைக்கு திரும்பிய நிலையில் கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இந்திய, இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை, மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதினால் எதிர்வரும் 12ம் திகதி இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன், இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மத தலைவர்களை சந்ததித்து பேசுமாறு அமைச்சர் இந்திய தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.


மகிந்தவின் யாழ். மாளிகையை வடமாகாணசபைக்கு தருமாறு கோரிய முதலமைச்சர்!
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:42.36 AM GMT ]
வடபகுதிக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையை நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவினால் 460 ஏக்கர் பரப்பில் மிகவும் நவீன வசதிகளுடன் 20 பில்லியன் ரூபா செலவில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இதன்போது சென்றிருந்தார்கள்.
வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மாளிகையை வடமாகாணத்துக்கு வருமானத்தை ஈட்டித்தரத்தக்க வகையில் சுற்றுலா விடுதியாகப் பயன்படுத்தும் வகையில் வடமாகாண சபைக்கு தருமாறு இதன் போது ஜனாதிபதியிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையிட்டு தான் பரிசீலிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் அதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தப்படும்!
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:32.41 AM GMT ]
நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தப்படும் என ஜே.வி.பி.யின் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு நாடாளுமன்றம் கலைக்கப்படாவிட்டால் மக்களை அணி திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
தேர்தலில் வெற்றியீட்டி 100 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைப்பதாகவே அரசாங்கம் முன்னதாக தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தது.
100 நாள் திட்டம் வெற்றியீட்டினாலும் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் மக்களினால் உணரக் கூடிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வெளிப்படைத்தன்மை பற்றி பேசும் இலங்கை, ஐ.நா விசாரணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன்?
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 11:51.01 PM GMT ]
அனைத்துலக அரங்கில் வெளிப்படைத்தன்மை பற்றிப்பேசும் இலங்கை, ஐ.நா விசாiணையாளர்களை நாட்டிற்குள் உள்நுழைய மறுப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ள தமிழர் தரப்பு, அனைத்துலகத்தினை தவறாக திசைதிருப்பும் முனைப்பில்  இலங்கை ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில்  இலங்கையின் வெளிவிவகாரதுறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை தொடர்பில் கருத்துரைக்கும் பொழுதே ஜெனீவாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழின அழிப்பின் தனது இரத்தம் தோய்ந்த கரங்களை மறைத்தவாறு புதிய ஆட்சி புதிய அரசாங்கம் என்ற ஒப்பனையுடன் அனைத்துலகத்தினை மீண்டுமொருதடவை ஏமாற்ற இலங்கை முனைந்துள்ளது.
இலங்கை தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்தி வைத்தமைக்கு ஐ.நா ஆணையாளர் முன்வைத்திருந்த காரணமும், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் வியாக்கியானமும் முரண்பட்டதாக உள்ளது. இது  இலங்கை தொடர்பில் அனைத்துலகத்தினை தவறான திசைக்கு இட்டுச் செல்கின்ற முனைப்பு.
முக்கியமாக விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் உள்நாட்டு விசாரணை மற்றும் நீதிக்கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படும் என்பது அனைத்துலக விசாரணையினை இல்லாதொழிக்கின்ற தந்திரோபாயமாகும்.
இவ்வாறான இலங்கையின் தந்திரோபாய வியூகங்களை முறியடிக்கும் வகையில் தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பொருட்டு ஒரு மில்லியன் ஒப்பங்களைப் பெறும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது என அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTXSUmo7D.html

Geen opmerkingen:

Een reactie posten