[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 09:11.52 AM GMT ]
இந்தோனேசியாவில் வைத்து 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 24 வயதில், போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மயூரன் சிவகுமாரன் கைது செய்யப்பட்டார்.
2006ம் ஆண்டு மரணதண்டனை இவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. அதற்கெதிராக கொடுக்கப்பட்ட கருணைக் கோரிக்கை மனு இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நிராகரிக்கப்பட்டிருந்தது.
மயூரனின் கருணை மனுவை நிராகரித்த இந்தோனேசிய ஜனாதிபதி, தற்போது போதைப்பொருள் கடத்தல்களுக்காக கடந்த காலங்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 64 பேருக்கும் தண்டனையை நிறைவேற்றுமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசிய நடைமுறைப்படி மரணதண்டனை கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். 12 பேர் கொண்ட குழு ஒவ்வொரு கைதிக்கும் நியமிக்கப்படும். மூன்று காவலர்களின் துப்பாக்கிகளில் சத்தம் மாத்திரம் வருகின்ற சன்னங்களும் இருக்கும்.
அனைவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொள்வார்கள். உண்மையான சன்னங்கள் எந்தத் துப்பாக்கியில் இருந்து சென்றன என்பது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்பவர்களுக்கு தெரியாது. இது ஒரு கொடுரமான மரணதண்டனை முறையாகக் கருதப்படுகின்றது.
இந்தநிலையில், அவுஸ்திரேலியா அதீத அழுத்தத்தைப் பிரயோகிக்காதவிடத்து இந்த வார இறுதிக்குள் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றுப்பட்டுவிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர், மரண தண்டனை தொடர்பில் தங்களது அரசு தங்களினாலான அழுத்தத்தைக் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
நுசாகம்பங்கனொன் என்ற தீவிலியே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது. அந்தத் தீவிற்கு இன்று மாற்றப்படும் இவர்களிற்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 72 மணித்தியாலங்களிற்கு முதலே இதுதொடர்பாக தெரிவிக்கப்படும்.
இந்தத் தீவிற்கு புறப்படுவதற்கு தயாராகிவிட்ட மயூரன் சிவகுமாரன் தனது ஆடைகள் மற்றும் உபயோகித்த பொருட்களை ஏனைய சிறைக்கைதிகளிற்கு பகிர்ந்தளித்துள்ளார். அத்துடன், நன்றாக நடவுங்கள், அவதானமாக இருங்கள் என அறிவுரை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலி-9” என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் ஒன்பது பேரடங்கிய குழுவில் ஒருவராக இருந்த மயூரன் சிவகுமாரன் சிறையில் இருந்த போது அங்கே பல மாறுதல்களைக் கொண்டு வந்திருந்தார்.
தான் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகமொன்றில் கலைப்பட்டதாரியாகச் சிறப்புத் தேர்வு பெற்றதோடு, சிறைச்சாலையில் ஆங்கிலம், கணனி, கணனி வரைகலை, கணக்கியல் போன்ற பாடங்களை கற்பித்ததோடு தானிருந்த சிறைப் பகுதிக்கான தலைமை சிறைக்கைதியாக ஏனையவரை வழிநடத்தும் பொறுப்பையும் மேற்கொண்டு வந்தார்.
அத்தோடு தங்களது சித்திரங்கள், வரைகலைகள் விற்பதற்கான வியாபார நிறுவனமொன்றையும் ஆரம்பித்து, அதனூடே தங்களது தயாரிப்புக்களை விற்பனை செய்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் விடுதலைக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் மெழுகுவர்த்திப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp1J.html
பிரசன்னவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால் சாகும் வரை உண்ணாவிரதம்!
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 09:55.03 AM GMT ]
கூட்டணியின் மேல் மாகாணசபை பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
மேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை சுகாதார அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவிற்கு வழங்குவதற்கு ஆயத்தமாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக மேல் மாகாணசபை உறுப்பினர் லலித் எல்லாவல குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நுகேகொடையில் இடம்பெற்ற பேரணியில் பிரசன்ன ரணதுங்க கலந்து கொண்டதாகவும் உள்ளூர் அதிகாரிகளின் பெரும்பாலான நம்பிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ள பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்
அதேவேளை, சுகாதார அமைச்சர் பதவியை கூட ஒழுங்கான முறையில் வகிக்க முடியாத ரஞ்சித் சோமவன்சவிற்கு முதலமைச்சர் பதவியை வழங்க கூடாதென தலைவர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால பிரச்சினைகளை இலங்கை தீர்க்க வேண்டும்: ஐ.நாவின் அரசியல் விவகார செயலாளர்
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 09:49.25 AM GMT ]
இதனால், பொது எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்த கால பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கையே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த 4 தினங்களில் இலங்கையில் சாதகமான, பலன் தரும் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிந்தது.
ஜனநாயக தேர்தல், அமைதியின் முன்னேற்றம் என்பன சர்வதேச கவனத்திற்கு உள்ளாகியது.
இலங்கையில் இருந்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடிந்தது.
மோதல் நடந்த காலத்தில் இலங்கையர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கினர் என்பதை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொள்கிறது.
இலங்கையில், பல ஆணைக்குழுக்கள் செயற்பட்ட போதிலும் துன்பங்கள், தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.
காணி, தடுத்து வைத்தல், சிவில் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னம் போன்ற பிரச்சினைகளை குறுகிய காலத்தில் தீரக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரச தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
ஐக்கிய நாடுகளின் 70வது ஆண்டு நிறைவின் போது இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்று 60 வருடம் பூர்த்தியாகிறது. அதனை கொண்டாடும் போது புதிதான தொடர்புகளுக்கான எதிர்பார்ப்புக்கு ஆசிகளை வழங்குவதாகவும் ஜெப்ரி பெஃல்டிமன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp2A.html
Geen opmerkingen:
Een reactie posten