[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 10:05.40 AM GMT ]
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் தாயகத்தில் படைத்தரப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 3 தொலைக்காட்சி நிறுவனங்கள் தம்மிடம் நேர்காணல் வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கமையவே குறித்த தொலைக்காட்சிக்கு செவ்வி வழங்கியதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கமைவாக அவரை பாதுகாக்கும் வகையில் தாம் செயற்பட்டதாக சிங்கள ஊடகமொன்று விமர்சித்திருந்தது.
குறித்த ஊடகம் தாம் செவ்விய வழங்கிய ஊடகத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் தேர்தல் காலத்தில் குறித்த 3 ஊடகங்களுக்கு வழங்கிய வாக்குறுதியையே தேர்தலின் பின்னர் நிறைவேற்றியமையை தவறாக விமர்சிக்க வேண்டாம் என பிரதமர் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சர் கடுமையாகப் பாடுபடவேண்டும்
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 10:21.58 AM GMT ]
எனினும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படவில்லை. இதனால் தமிழ் மக்கள், யுத்தம் முடிந்தும் தங்கள் வாழ்விடங்களுக்குச் செல்ல முடியாமல் போயிற்று.
இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மீள்குடியமர்வு என்ற விடயம் வலுக்கத் தொடங்கியது.
மைத்திரியின் ஆட்சியில் தமிழ் மக்களின் வாழ்விடங்களை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.
இணக்கம் காணப்பட்ட இந்த விடயத்தை செய்விக்கின்ற முக்கியமான பொறுப்பு தமிழ் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இங்கு நோக்குதற்குரியது.
எனவே மீள்குடியேற்றம் என்ற முக்கியமான பணியை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் மிக விரைவாகச் செய்து முடிக்க வேண்டும்.
படைத்தரப்பின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள இடங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் அமைச்சர் சுவாமிநாதன் எடுக்கின்ற விரைவான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் இழந்த தங்கள் வாழ்விடங்களை மீளப்பெறுவதற்கு வழி சமைக்கும்.
அதேநேரம் மீள்குடியேற்ற அமைச்சர், மீள்குடியமர்வு சார் விடயங்களில் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் அடையும் போது அதற்கான காரணங்களை பகிரங்கப்படுத்துவதும் அவரின் கடமையாகும்.
ஏனெனில் மீள்குடியேற்ற அமைச்சுப் பொறுப்பை தமிழ் அமைச்சரிடம் வழங்கி விட்டு வேறு வழிகளில் மீள்குடியேற்றத்திற்குத் தடைசெய்ய முடியும்.
இவ்வாறு தடை செய்யும் அதேநேரம், மீள்குடியேற்ற அமைச்சை தமிழர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளோம். எனவே அவர் தமிழ்மக்களின் மீள்குடியமர்வில் கவனம் செலுத்துவார் என அரசு கூறிக் கொள்ளும்.
இவ்வாறாக தமிழ் மக்களை மீள்குடியமர்த்துகின்ற பொறுப்பை தமிழ் அமைச்சரிடம் கொடுத்திருப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தில் இருந்து இலங்கை அரசு தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
ஆகையால் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள், படைத்தரப்பால் விடுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலங்களில், உரியவர்களை மீளக்குடியமர்த்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
இந்தப் பணியை விரைவுபடுத்துவதற்கு வசதியாக, அமைச்சர் சுவாமிநாதன் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் அலுவலகத்தை திறந்து மீள்குடியமரும் மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
இப்பணியைச் செய்வதற்காக அமைச்சர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து களத்தில் இறங்கி, மீள்குடியேற்றப் பணியைக் கவனிக்கவேண்டும்.
இதைச் செய்வதில் காலதாமதம் ஏற்படுமாயின் அரசு தப்பித்துக் கொள்ளும்.
ஆனால் தமிழன் தமிழனுக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து நிற்கும் என்பதால், தமிழனுக்குக் கிடைத்த மீள்குடியேற்ற அமைச்சுப் பதவி தமிழனுக்குப் பேருதவி புரிந்தது என்பதாக நிலைமையை மாற்ற அமைச்சர் சுவாமிநாதன் முன்வரவேண்டும்.
தேர்தல் முறை மாற்றம் எங்கள் பிரதிநிதித்துவத்தை பாதிக்க இடம் கொடுக்க முடியாது!- மனோ கணேசன்
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 09:56.44 AM GMT ]
தேர்தல் முறை மாற்றம் கொண்டு வரப்பட்டால், அந்த திருத்தங்கள் சிறுபான்மை மக்களின் நியாயமான பிரதிநிதித்துவங்களுக்கு ஊறு விளைவிக்க கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய நிறைவேற்று சபையில் எமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதி காப்பாற்றப்படும் என நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் வேளைகளில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள், பெரிய கட்சிகளுக்கு தேவைப்படுகின்றன. அதனால் எமக்கு பேரம் பேசும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
ஆகவே நீண்ட காலமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை ஆதரிக்கவில்லை. ஆனால், பிற்காலத்தில் நாட்டின் போக்குடன் ஒத்துப்போவதற்காக நாம் இதற்கு ஒத்துழைத்தோம்.
எனினும் இன்று எமது அந்த ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு, தேர்தல் முறை மாற்றம் என்ற பெயரில் எமது பிரதிநிதித்துவங்களை குறைத்து எமது தலையிலேயே கையை வைக்க சிலர் முயற்சிக்கின்றார்கள். அதற்கு நாம் இணங்க முடியாது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன அறிக்கையை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே அதை அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது. இந்த நிலைப்பாட்டிலேயே இந்நாட்டின் பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன என நான் நம்புகிறேன்.
இந்த நாட்டு ஜனத்தொகை 2 கோடியே 4 லட்சம் ஆகும். நமது பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது ஏறக்குறைய 90,000 பேருக்கு ஒரு எம்பி இருக்கின்றார்.
இந்த நாட்டில் 31 லட்சம் தமிழர்களும், ஏறக்குறைய 19 லட்சம் முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். எனவே குறைந்தபட்சம் 34 தமிழ் எம்பிக்களும், 21 முஸ்லிம் எம்பிக்களும் இருக்க வேண்டும்.
எனது மாவட்டமான கொழும்பில் சுமார் 270,000 தமிழர்களும், 260,000 முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். இதன்படி கொழும்பில் ஏறக்குறைய மூன்று தமிழ் எம்பிக்களும், மூன்று முஸ்லிம் எம்பிக்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.
இதற்கு இன்றைய விகிதாசார முறைமையிலேயே முழுமையாக வழியில்லை. இந்நிலையில், நீங்கள் கொண்டு வர நினைக்கும் புதிய முறையில் இப்போது இருக்கும் இந்த பிரதிநிதித்துவங்களும் இல்லாமல் போகும் சாத்தியமே அதிகம்.
பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடும் போது, ஒரு ஒத்துழைப்பின் அடிப்படையில் சிறிது விட்டுக்கொடுப்போம் என்றால், அது கடைசியில் எங்கள் தலையிலேயே வந்து இடியாய் விழுகிறது.
பெரும்பான்மை இன வேட்பாளர்களின் விருப்பு வாக்கு போட்டிகளின் காரணமாக நமக்கு உரிய சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுகின்றன. தமிழரின் வாக்கு வேண்டும், ஆனால் தமிழருக்கு சீட்டு கிடையாது என்ற நிலைமை நிலவுகிறது.
எங்கள் இனத்து பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள எங்களுடன் ஒத்துழைத்து இணைங்க மறுப்பவர்களுடன் ஒத்துழைப்பது எமக்கு கடினமானது.
எனவே இந்த விருப்பு வாக்கு முறைமையை மாற்ற நாமும் விரும்புகிறோம். ஆனால், அந்த மாற்றத்துடன் தமிழ் பேசும் மக்களுக்கு இனரீதியான ஒதுக்கீடுகளை செய்து விடுங்கள்.
பாராளுமன்றத்தில், எங்கள் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்புகள் எங்களுக்கு அவசியம். இந்த நாட்டில் எந்த மூலையிலும் எங்கள் இனம் துன்பங்களை எதிர்கொள்ளும் வேளைகளில் அவை எங்களுக்குத்தான் வலிக்கும். தேர்தல் நேரத்தில் மாத்திரம் வந்து வாக்குகளை வாங்கி போகின்றவர்களுக்கு அவை வலிக்காது.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp2C.html
Geen opmerkingen:
Een reactie posten