தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

சுவிஸில் குடியுரிமை கேட்டு விமானத்தை கடத்திய விமானி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு (வீடியோ இணைப்பு)

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை கேட்டு பயணிகள் விமானத்தை கடத்திய விமானிக்கு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த Hailemedehin Abera Tagegn(32) என்ற விமானி கடந்த பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு எத்தியோப்பிய தலைநகரான Addis Ababa-லிருந்து இத்தாலி தலைநகரான ரோம்மிற்கு பயணிகள் விமானம் ஒன்றை ஓட்டிச்சென்றுள்ளார்.
200 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானத்திலிருந்து கேப்டன் கழிவறைக்கு சென்றபோது Tagegn விமானிகளின் அறையை பூட்டிவிட்டு, விமானத்தை திசை திருப்பியுள்ளார்.
ரோம் விமான நிலையத்திற்கு செல்லாமல், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.
எத்தியோப்பிய விமானம் கடத்தப்பட்டுள்ள தகவலை பெற்ற சுவிஸ் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிசார், விமானத்திலிருந்து இறங்கிய Tagegn விமானியிடம் விசாரித்துள்ளனர்.
எத்தியோப்பிய நாட்டில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரவே விமானத்தை கடத்தி வந்துள்ளதாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.
விமானி மீதான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் விசாரணக்கு வந்தது. பயணிகள் விமானத்தை கடத்திய குற்றத்திற்காக 21 வருடங்கள் சிறை தண்டனை விதிக்க முடியும்.
இருப்பினும், விமானத்தை கடத்தியபோது விமானியிடம் ஆயுதம் எதுவும் இல்லாததால், அவருக்கு 19 வருடங்கள், 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையில், விமானியை திருப்பி அனுப்பும்படி எத்தியோப்பிய அரசு விடுத்த கோரிக்கையை சுவிட்சர்லாந்து நிராகரித்தது. குற்றவாளி இல்லாமலே, எத்தியோப்பிய நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
http://www.coolswiss.com/view.php?22eOld0bcOa0Qd4e3UMM302cBnB3ddeZBn5202egAA2e4M0asacb2lOK43

Geen opmerkingen:

Een reactie posten