[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 08:24.12 AM GMT ]
பெரியபண்டி விரிச்சான், பெரிய மயிலங்குளம், 14வது மைல்கல் ஆகிய பிரதேசங்களில் இராணுவ துருப்புக்களினால் நேற்று தேடுதல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தேடுதல் செயற்பாடுகளில் மேலதிகமாக 12 மோட்டார் குண்டுகள், 27 கண்ணி வெடிகள் மற்றும் 60 ரக மோட்டார் குண்டுகள் 02 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்ணிவெடி அகற்றும் குழுவினால் கட்டையடம்பன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை மூலம் 84 மிதிவெடிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதியின் கவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 08:25.05 AM GMT ]
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அதற்காக மக்களின் ஆணையை பெற்று பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைப்பதற்காகவே தேர்தலுக்கு செல்வது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்தால், 58 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழப்பர். இதன் மூலம் பெருந்தொகை பணத்தை அரசாங்கம் மீதப்படுத்த முடியும் என திறைசேரி சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்றம் ஏப்ரல் 23ம் திகதிக்கு முன்னர் கலைக்கப்பட்டால், நாமல் ராஜபக்ச, திலும் அமுனுகம, உதித்த லொக்குபண்டார, தயாஸ்ரீத திசேரா, லொஹான் தளுவத்த, சனத் ஜயசூரிய, திலங்க சுமதிபால உட்பட முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழப்பார்கள்.
இங்கிலாந்து சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதும், இது சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, தூய்மையான நாளை அமைப்பின் ஸ்தாபகர் அத்துரலியே ரத்ன தேரர், மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதன் மாத்திரமே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய 62 லட்சம் மக்கள் வழங்கிய வாக்குகளை முழுமையாக பயன்படுத்த முடியும்.
இதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருந்தால், புதிய ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக பொதுத் தேர்தலுக்கு சென்று பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசாங்கத்தை அமைப்பதே ஒரே மாற்று வழி என சட்ட ஆலேசாகர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நியாயமான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் தூய்மையான நாளை அமைப்பு ஆகியவற்றின் யோசனைகளை அடிப்படையாக கொண்டு நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மக்கள் ஆணையை பொதுத் தேர்தல் மூலம் பெற, பொதுக் கட்சி ஒன்றின் ஊடாக புதிய மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms0I.html
19வது அரசியலமைப்பில் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பலாம்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 08:17.19 AM GMT ]
ஜனாதிபதிக்கான அரசியலமைப்பு தொடர்பான ஆலோசகர் ஜெயம்பதி விக்ரமரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளதுடன்,
புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்னிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து எவராலும் கேள்வியெழுப்ப முடியாது.
எனினும் 19ம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்புவதற்கான வழி செய்யப்பட்டுள்ளது.
ஆட்சி மாறியும் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு குறைவில்லை- பா.அரியநேத்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2015, 08:10.40 AM GMT ]
புதிய ஐனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பதவியேற்றபின் வடகிழக்கு தமிழ்மக்களுக்கு நிம்மதி ஏற்படும் என எதிர்பார்த்த போதும் அது எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காகவும்,புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் சுதந்திரமாக கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக பயணிக்கமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றவர்களும் ஐரோப்பியநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களும் கடந்ந மகிந்த அரசுபோல் மைத்திரி அரசாலும் கைதுசெய்யப்பட்டு குற்றப்புலனாய்வாளர்களால் விசாரணை செய்யப்பட்டு 4ம் மாடியிலும் ஏனைய சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் மத்தியகிழக்கு நாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்று விடுமுறையில் நாடுதிரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களும,யாழ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுமாக ஏறக்குறைய ஒன்பது இளைஞர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து தமது உறவினர்களை கிளிநொச்சியில் பார்வையிட்டு செல்லும்போது 41வயதான முருகேசு பகிரதி எனும் தாயும் அவரின் 8 வயதுடைய சிறுமியும் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் மீண்டும் பிரான்ஸ் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கு இலங்கை அரசு கூறும் காரணம் அந்த தாயார் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் கடற்படையில் இருந்ததாகவும் அதற்காக விசாரிப்பதற்காகவும் கைது செய்ததாக கூறுகின்றனர், உண்மையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டபின் தமக்கு ஏதும் நடக்காது என்ற நம்பிக்கையில் இவ்வாறு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருபவர்களை திட்டமிட்டு அவசரகாலசட்டத்தை வைத்துக்கொண்டு கைதுசெய்வதானது கண்டிக்கதக்க விடயமாகும்.
தொடர்ந்தும் நாட்டில் அவசரகாலச்சட்டத்தை வைத்துக்கொண்டு நல்லாட்சியைப்பற்றியும், இணக்க அரசியல் பற்றியும்,தேசிய ஆட்சியைப்பற்றியும், கூட்டாச்சியைப்பற்றியும், பேசுவது முழு உலகத்தையே ஏமாற்றும் செயலாகும். இதைவிட வவுனியாவில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் இப்படியான சம்பவங்களை பார்க்கும்போது தொடர்ந்தும் அவசரகாலசட்டத்தை வைத்துக்கொள்வதற்காக இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்துக்கு காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல் ஹுசெய்ன் அவர்கள் கடந்த 28வது அமர்வில் உரையாற்றும்போது இலங்கை அரசு கடந்த காலங்களில் விட்ட தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். ஆனால் இலங்கை அரசு அரசுத்தலைவர் மாறினாலும் தமிழ்மக்கள்மீதான அடக்குமுறைகள் மாறவில்லை என்பதை இந்தசம்பவங்கள் கோடிட்டுக்காட்டியுள்ளன.
எனவே புலம்பெயர் எமது சமூகம் எப்படி இலங்கைக்கு வருகைதந்து முதலீடுகள் செய்யமுடியும். இதை சர்வதேச நாட்டின் தலைவர்களும் இராஜதந்திரிகளும் புரிந்துகொண்டு இலங்கை அரசுக்கு இவ்வாறான நிலைமைகள் தமிழர்களுக்கு ஏற்படாவண்ணம் அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் மேலும் கேட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTcSUms0F.html
Geen opmerkingen:
Een reactie posten