தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

ஒரு மில்லியனில் நீங்களும் ஒருவர்: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்துவதில் மக்கள் ஆர்வம்!

வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளைக்கு அச்சுறுத்தல்
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 01:25.41 PM GMT ]
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளைக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவிலிருந்து தொலைபேசி அழைப்பின் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இருந்து திலகரட்ணா என்பவர் 0212283707 என்ற இலக்க தொலைபேசி இலக்கத்தினூடாக அழைப்பினை எடுத்துள்ளார்.
மாலை 4 மணி மற்றும் 7 மணி ஆகிய நேரங்களில் அழைப்பினை எடுத்த குறித்த நபர், கிளிநொச்சி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள வருமாறு கடும்தொனியில் அச்சுறுத்தி அழைத்துள்ளார்.
வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்கு அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் இந்த விசாரணைக்கு செல்லவில்லை என தெரியவருகின்றது.
ஆட்சி மாற்றத்தின் பின்பும் மக்கள் பிரதிநிதிகள் மீதும், மக்கள் மீதும் புலனாய்வு துறையினரின் அச்சுறுத்தல்கள் கண்காணிப்புக்கள் தொடர்ந்து வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr4G.html

நாடாளுமன்ற பெரும்பான்மையை இலக்கு வைக்கும் ஐ.ம.சு.முன்னணி
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 02:06.41 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பாட்டு ரீதியான அரசியல் குறித்து தீர்மானம் ஒன்றை எடுத்தால், அதற்காக முன்னணியில் வாய்ப்பை வழங்குவது குறித்து எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன் உறுப்பினரான சுசில் பிரேம ஜயந்த இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒருங்கிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் இலக்கை முன்வைத்து அரசியல் செயற்பாடுகளை மாவட்டம் மற்றும் தொகுதி மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிக்கு அந்த வாய்ப்பை வழங்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.
அத்துடன் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளில் நேரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மகிந்த ராஜபக்சவுக்கு அப்படியான வாய்பை வழங்க விரும்ப மாட்டார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr4I.html


ஒரு மில்லியனில் நீங்களும் ஒருவர்: சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்துவதில் மக்கள் ஆர்வம்!
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 03:34.09 PM GMT ]
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு ஐ.நாவைக்கு கோரும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்தினை இலக்கு வைத்து தொடங்கப்பட்டுள்ள வேட்டையிலேயே ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் மக்கள் தங்களது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org குறித்த இந்த இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக் கொள்ளலாம்.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னால் படைத் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார் என்பதும், புதிய ஜனாதிபதி சிறிசேனாவின் உள்ளார்ந்த குற்றத்தன்மை நீதி வழங்கப்படுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதும் எந்த விதத்திலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவது தவிர வேறு வழியில்லை எனபதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr4J.html

Geen opmerkingen:

Een reactie posten