தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

12 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் கருத்துக் கூறமுடியாது.

பேராசிரியர் இராமு.மணிவண்ணன் பிரான்ஸ் வருகை: தமிழின அழிப்பு ஆவண நூல் அறிமுக நிகழ்வு
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 04:15.15 PM GMT ]
இலங்கைத் தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANT எனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது.
சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும் பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. 
சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் 900 பக்கங்களுக்கு மேல் கொண்டுள்ளது.
பிரான்சில் இடம்பெறவுள்ள நிகழ்வரங்கில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் நேரடியாக வருகைதர இருப்பதோடு, தமிழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் எனும் கருப்பொருளில் கருத்தாடலொன்றினையும் நடாத்துகின்றார்.
இந்நிகழ்வு தலைநகர் பாரிசில் மார்ச் 22ம் நாள், 363bis Rue des Pyrenes, 75020 Paris / Metro : Jourdain - Ligne : 11 எனும் இடத்தில் மாலை 16h00 மணிக்கு இடம்பெறுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr5C.html


தலாய் லாமா பௌத்த வழிபாட்டாளராக மாத்திரம் இலங்கை வர வேண்டும்: பந்துல ஜெயசேகர
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 04:14.39 PM GMT ]
இலங்கைக்கு தலாய் லாமா விஜயம் செய்வாராக இருந்தால் அவர் ஒரு பௌத்த மத வழிபாட்டாளராக மாத்திரம் கருதப்பட வேண்டும். இதனை விடுத்து அரசியல் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று சிட்னியின் முன்னாள் கொன்சோல் ஜெனரல் பந்துல ஜெயசேகர, ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகை மற்றும் அனுதாரபுரம் ஆகிய இடங்களுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், உடனடியாகவே இலங்கையில் இருந்து அனுப்பப்பட வேண்டும் என்றும் ஜெயசேகர வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே தலாய்லாமா இலங்கைக்கு வருகைத் தரவிருந்த போதும் சீனாவின் அழுத்தம் காரணமாக அது கைவிடப்பட்டது.
திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா சீனாவின் எதிரியாக கருதப்படுகிறார். இதனையடுத்தே அவர் இந்தியாவில் அஞ்ஞாதவாசம் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் அவரை இலங்கைக்கு அழைப்பதற்காக இரண்டு பௌத்த பிக்குகள் இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையிலேயே பந்துல ஜெயசேகரவின் கருத்து வெளியாகியுள்ளது.


12 ஆயிரம் முன்னாள் போராளிகள் தொடர்பில் கருத்துக் கூறமுடியாது.
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 03:48.16 PM GMT ]
இலங்கையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 12ஆயிரம் பேர் தொடர்பில் தமக்கு தெரியாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது சுமார் 49 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களே புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தமது புனர்வாழ்வை முடித்துக் கொண்டதும் அவர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனினும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட 12ஆயிரம் பேர் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சிடமே கேட்க வேண்டும் என்று அமைச்சர் கொழும்பின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr5A.html

Geen opmerkingen:

Een reactie posten