தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள்! புலம்பெயர் மக்களிடம் சுமந்திரன் எம்.பி. வேண்டுகோள்



ஹக்கீம் அமைச்சரானது ஏன்? கூட்டமைப்பின் உறவை தடுத்தது யார்? ஆதாரங்களுடன் கிழக்கு முதலமைச்சர்!
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:50.03 AM GMT ]
கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் கூட்டமைப்பின் உறவை தடுத்ததில் பலர் பிரயத்தனம் செய்தனர். அவர்கள் யார்? விபரிக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்.
நாம் கடந்த அரசில் விரும்பி இணையவில்லை. அப்படியாயின் ஏன் இணைந்தீர்கள்? எம்மை மிரட்டினார்கள்?
மிரட்டியவர்கள் யார்? ஆதாரங்களுடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் தெரிவிக்கிறார்

http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms5F.html

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்குமா இல்லையா இன்று தீர்மானிக்கப்படும்?
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:34.00 AM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை மீளவும் கிடைக்குமா இல்லையா என்பது குறித்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. 
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப் பெற்றுத் தருமாறு கோரி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இராணுவ நீதிமன்றில் தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால், சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் வெற்றிடத்திற்கு கட்சியின் துணைத் தலைவராக கடமையாற்றிய ஜயந்த கெட்டகொட புரிந்துணர்வு அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்.
எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இறுதி நேரத்தில் ஜயந்த கெட்டகொட மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதன் பின்னர், சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.
தண்டனை விதிக்கப்பட்ட தினம் முதல் இந்த பொது மன்னிப்பு அமுலாகும் வரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவித்திருந்தார்.
இதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபடாத தமக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை மீளப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சரத் பொன்சேகா நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் சடத்தின் 64ம் சரத்தின் அடிப்படையில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்து, மீளவும் உறுப்பினர் பதவியை வழங்குமாறு சரத் பொன்சேகா கோரியுள்ளர்.
இந்த மனு தொடர்பிலான சட்ட மா அதிபரின் நிலைப்பாடு இன்று நீதிமன்றிற்கு அறிவிக்கப்படவுள்ளது.
சரத் பொன்சேகாவின் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா (முன்னாள் இராஜாங்க அமைச்சர்) மற்றும் உபுல் ஜயசூரிய (முதலீட்டுச் சபையின் தலைவர்) ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.
ஜயந்த கெட்டகொட சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சிறினாத் பெரேரா முன்னிலையாகவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms5E.html

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள்! புலம்பெயர் மக்களிடம் சுமந்திரன் எம்.பி. வேண்டுகோள்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:05.01 AM GMT ]
தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடுமாறு மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள்! (காணொளி)
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms4J.html





Geen opmerkingen:

Een reactie posten