ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரையேனும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதில்!- ராஜித
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:55.50 AM GMT ]
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வது தொடர்பில் காட்டுச் சட்டங்களை அமுல்படுத்த முடியாது.
கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற அரசாங்க பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் 65ம் ஆண்டு பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் நிதானமான முறையில் நுட்பமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
100 நாள் திட்டத்தில் பல முக்கியமான விடயங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் சம்பளங்களை உயர்த்துமாறு கோரப்பட்டது.
எனினும், தற்போது மக்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கோருகின்றனர்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாகத் தெரிவித்தே நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டோம்.
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட இதுவரையில் கைது செய்யவில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான பெறுபேறுகளை இன்னும் இரண்டு வாரங்களில் பார்க்க முடியும்.
காட்டுச் சட்டத்தின் ஊடாக எவரையும் கைது செய்து விசாரணை செய்ய முடியாது.
சுகாதாரத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms5G.html
இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடை விரைவில் நீக்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 01:18.59 AM GMT ]
ஐரோப்பிய நாடாளுமன்ற அதிகாரி ஒருவரைக்கோடிட்டு இணைத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தகக்குழு உதவித்தலைவர் ஜான் செஹ்ராடி, இதற்கான பரிந்துரையை செய்துள்ளார்
சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியை தடுக்க முயலாமையை அடுத்தே இலங்கையின் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி தடையை ஏற்படுத்தியது.
எனினும் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கையின் புதிய அரசாங்கம் உடன்பட்டமையை அடுத்து தடை நீக்கம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து 2014ஆம் ஆண்டில் மாத்திரம் 5.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மீன் ஏற்றுமதி வர்த்தகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பெண் ஊடகவியாளர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர்! ஆய்வில் தகவல்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 02:04.06 AM GMT ]
சர்வதேச ஊடவிலாளர்கள் சம்மேளனத்தின் ஆய்வில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
டீல்ரூக்சி ஹந்துன்நெந்தி என்ற ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி 45 பெண்களில் 28.8 பெண்கள் தாம் வேலைத்தளங்களில் தொந்தரவுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இந்த விடயம் குறித்து முறைப்பாடுகள் எவையும் செய்யப்படுவதில்லை.
பத்திரிகை நிறுவனங்கள் குறித்த முறைப்பாடுகளை, அசட்டை செய்தன் காரணமாகவே பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடுகளை செய்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms6C.html
Geen opmerkingen:
Een reactie posten