"றொமேனியர்கள் வருகிறார்கள்" என்ற தலைபில் கடந்த செவ்வாய் அன்று ஒரு நிகழ்சியை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதில் உண்மையான விடையங்கள் ஆனால் கசப்பான விடையங்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. உதாரணமாக இலங்கையர் அல்லது இந்தியர்களை எடுத்துக்கொண்டால். அவர்கள் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக குடி வந்தாலும் , சில வருடங்களில் எல்லாம் தம்மை ஒரு நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். பணத்தை சேமித்து வீடுகளை வாங்கி வியாபார ஸ்தலங்கை நிறுவி முன்னேறி விடுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய நாடான றொமேனியவில் இருந்து இலவசமாக எந்த விசாவும் இல்லாமல் லண்டன் வரும் றொமேனியர்கள் அப்படி அல்ல.
பிரித்தானியாவில் முதன் முதலாக வீதிகளில் பிச்சை எடுக்க ஆரம்பித்தவர்கள் இவர்கள் தான். என்ன தான் அரசாங்கம் ஒரு வீட்டைக் கொடுத்தாலும் அவர்கள் அங்கே தங்குவது இல்லை. வீதி ஓரத்தில் தூங்குவது , நன்றாக தண்ணி அடிப்பது என்று ஏதோ காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்வார்கள். இவர்கள் அருகில் சென்றாலே நாறும். அந்த அளவுக்கு குளிப்பு முழுக்கு கூட இல்லை என்று சொல்லலாம். இவர்களின் வாழ்கை முறையை தான் சனல் 4 படமாக்கி வெளியிட்டு மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளது. குறித்த ஆவணப் படத்தை பார்த்த பிரித்தானியாவுக்கான றொமேனிய தூதுவர் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். லண்டனில் உள்ளவர்கள் எல்லோரும் திருடர்கள். மற்றும் குழந்தைகளை கற்பழிப்பவர்கள் என்று நாமும் ஒரு படத்தை எடுத்து றொமேனிய TV இல் விட்டால் எப்படி இருக்கும் ?
என்று அவர் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். இது இவ்வாறு இருக்க 10,000 பேர் கையெழுத்து இட்ட கண்டனக் கடிதமும் சனல் 4 TV க்கு எதிராக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கனக்கான றொமேனியர்கள் திரண்டு சனல் 4 தொலைக்காட்சி நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இருப்பினும் தொடர்ந்தும் நாம் இதுபோன்ற உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என்று காலம் மக் ரே அவர்கள் அதிர்வு இணையத்திற்கும் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten