[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:22.25 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை உதவி செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன் ஐக்கிய நாடுகள் சபைக்கு திரும்பிய பின்னர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் முழுமையாக உதவிகளை வழங்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
ஜனவரி 8 ஆம் திகதியன்று இடம்பெற்ற தேர்தலில் பொதுமக்கள் நாட்டின் நலன்கருதி தமது பங்களிப்பை செய்துள்ளதாக பெல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
தாம் இலங்கையில் அரசாங்கத் தரப்பினரை சந்தித்த போது சிறந்த பெறுபேறுக்கான சாத்தியங்கள் உள்ளமையை அவதானிக்க முடிந்தது.
போரினால் வடக்கில் அனைத்து சமூகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பெல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
எனவே உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாம் அரசாங்க தரப்பினரை கோரியுள்ளதாக பெல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu1D.html
மோடியின் வருகையால் எமக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையில்லை: வடமாகாண மீனவர்கள்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:46.01 AM GMT ]
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவித்த போதே சங்கத்தின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் இந்திய பிரதமரின் வருகையினால் தீர்வு கிடைக்கும் என நிச்சயமில்லை,
அவரின் இலங்கை விஜயத்தினால் அரசியல் மற்றும் அரசியல் சார்ந்த வரையறைகளுக்குள்ளேயே இருக்கும் என மீனவ தலைவர் என்.எம்.எம்.ஆலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்திய பிரதமரின் ஒரேயொரு விஜயத்தின் ஊடாக அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu1F.html
Geen opmerkingen:
Een reactie posten