தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

பொதுத் தேர்தலின் பின் 100 நாள் வேலை திட்டம் குப்பையில் வீசப்படும்: மஹிந்தானந்த அளுத்கமகே



போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும்!- மஹிந்த ராஜபக்ச
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 01:16.18 AM GMT ]
போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் நபர்களின் உள்ளங்களில் கருணை உண்டாகட்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாபஹூவ ரஜமஹா விஹாரையில் நேற்று நடைபெற்ற சமய வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசீர்வாத போதிபூஜையில் பங்கேற்கக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
போதி பூஜையின் ஊடாக நாட்டுக்கும் படைவீரர்களுக்கும் நல்லாசி வேண்டுகின்றோம்.
ஆட்சியாளர்களின் மனங்களிலிருந்து குரோதம், பொறாமை, பழிவாங்கும் எண்ணங்கள் இல்லாமல் போக வேண்டும் என வேண்டுகின்றோம்.
தொழில்களிலிருந்து நீக்கப்படும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மீளவும் தொழில் வழங்க இந்த ஆட்சியாளர்களுக்கு மனம் வர வேண்டும்.
எமக்கு வாக்களித்த 58 லட்ச மக்களின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படுவதனை நான் விரும்பவில்லை: ஜோன் செனவிரட்ன
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 01:57.47 AM GMT ]
தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படுவதனை தாமும் விரும்பவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
சில காரணங்களுக்காக இவ்வாறு தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதனை விரும்பவில்லை.
நாடு ஸ்திரமற்ற நிலைமைகளை எதிர்நோக்கினால் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும்.
தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது.
தேசிய அரசாங்கம் பற்றிய எனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது.
இது குறித்து விரைவில் கட்சிக்கு அறிவிப்பேன் என ஜோன் செனவிரட்ன சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தீர்மானத்திற்கு முரணான வகையில் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மீனவர்களின் படகுகள் பாரிய சேதங்களுடன் திருப்பி ஒப்படைக்கப்படவுள்ளன
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 03:59.45 AM GMT ]
இந்தியப் பிரதமரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை புனர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய பிரதமர் இலங்கை வருவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையிலேயே இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் இலங்கையின் திருகோணமலை, காரைநகர், தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80 படகுகளில் 30 படகுகள் மாத்திரமே உடனடியாக பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன.
ஏனைய பகுதியளவிலோ முழுமையாகவோ சேதமடைந்துள்ளன. வேறு பணிகள் காரணமாக இலங்கை கடற்படை குறித்த படகுகளை பராமரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த படகுகளை கையேற்றாலும் பாரிய சேத புனரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களை அனுப்ப எதிர்பார்க்கவில்லை: அஜித் பி பெரேரா
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 04:46.37 AM GMT ]
இலங்கை பெண்களை வீட்டுப் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்கு தொடர்ந்தும் அனுப்ப எதிர்பார்க்கவில்லை என பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு வீட்டு பணிப்பெண்களாக செல்லும் அநேக இலங்கை பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனாலேயே எதிர்வரும் காலங்களில் இலங்கை பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க போவதில்லை என பதில்  வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கூடிய முறை குறித்த அடிப்படை கொள்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

பொதுத் தேர்தலின் பின் 100 நாள் வேலை திட்டம் குப்பையில் வீசப்படும்: மஹிந்தானந்த அளுத்கமகே
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 05:13.40 AM GMT ]
தற்போதைய அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டம் எதிர்வரும் பொது தேர்தலுக்கு பின்னர் குப்பை தொட்டியில் வீசப்படும் என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்வொன்றில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த 100 நாள் வேலை திட்டம் மக்கள் மத்தியில் பல எதிர்ப்பார்ப்புக்களை ஏற்படுத்திவிட்டாலும் 100 நாள் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது போன்று நடைமுறைபடுத்தபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதற்கு முன்னர் என்றுமில்லாதவாறு விளையாட்டுத்துறை அரசியலாகியுள்ளதெனவும் முன்னாள் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu1C.html

Geen opmerkingen:

Een reactie posten