தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

சரத் பொன்சேகா பீல்ட் மார்சலாகும் நிகழ்வில் மேற்கத்தைய நாடுகள் பங்கேற்காது?

அரசியல் தலையீடுகள் காரணமாக நாடு அழிவடைந்துள்ளது: சோபித தேரர்
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 06:26.50 AM GMT ]
நாடு அழிவடைவதற்கு முதல் காரணம் அனைத்து விடயங்களிலும் அரசியல் தலையீடுகளே என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பொது நிர்வாகங்களுக்கு பொருத்தமற்றவர்களை நியமித்தமையே பொது நிர்வாகம் சீரழிந்தமைக்கு காரணம்.
இதேவேளை பொலிஸாரும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் மக்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டதனால் தான் நாட்டில் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்தார்கள். அவ்வாறான மாற்றங்கள் தற்பொழுது இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமை எனவும் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

மோடியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இல்லை: இந்தியா மறுப்பு
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 07:08.38 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தவேளையில் அங்கு அவரின் பாதுகாப்பு நடவடிக்கையில் குறைபாடுகள் இருந்ததாக கூறப்படுவதை இந்தியா மறுத்துள்ளது.
இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பரூதீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இந்திய பிரதமருடன் கைக்குலுக்க முற்பட்டார் என்று இந்திய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது. இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாண விஜயத்தின்போது சுமார் 25 கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அவரின் நிகழ்வுகள் யாவும் படமாக்கப்பட்டன, இதன்போது யாரும் அவரின் அருகில் வந்தமை தொடர்பில் எந்த ஆதாரங்களும் இருக்கவில்லை. எனவே இந்த செய்தியில் உண்மையில்லை என்று அக்பரூதீன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னதாக வெளியிட்ட தகவல் ஒன்றின்படி, மோடியின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பில் இந்தியாவின் புலனாய்வுப்பிரிவும், வெளியுறவுத்துறை அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

போதைவஸ்து கடத்தல் தொடர்பில் பல முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படவுள்ளனர்: ஜோன் அமரதுங்க
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 07:21.35 AM GMT ]
போதைவஸ்து கடத்தல்காரர், வெலே சுதாவின் தகவல்களின் அடிப்படையில் முன்னாள் அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
இந்த தகவலை பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த முக்கியஸ்தர்கள் தொடர்பில் வெலே சுதா பல தகவல்களை வெளியிட்டுள்ளார், எனவே பலர் கைது செய்யப்படவுள்ளார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
வெலேசுதாவிடம் இருந்த முக்கிய ஆவணம் ஒன்று காணாமல் போனமை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் சாந்த பண்டார கேள்வி ஒன்றை முன்வைத்த போது,
அதற்கு பதிலளித்த அமைச்சர், சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை சுதா கூறியுள்ளார். இது உண்மையாக இருக்குமானால் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் 1.2 மில்லியன் ரூபாய்களை வெலே சுதாவிடம் இருந்து பெற்றுள்ளமை உறுதியாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 07:22.52 AM GMT ]
நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் வைத்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியமையினாலேயே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இதுவரை 8 வாரங்களை கடந்துள்ளது என அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாத காரணத்தினால் எதிர்வரும் செவ்வாய்கிழமை அரசாங்க வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் அரச வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சரத் பொன்சேகா பீல்ட் மார்சலாகும் நிகழ்வில் மேற்கத்தைய நாடுகள் பங்கேற்காது?
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 07:36.49 AM GMT ]
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாளை பீல்ட் மார்சலாக தரமுயர்த்தப்படும் நிகழ்வில் பல முக்கிய தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த நிகழ்வை புறக்கணிக்கவுள்ளனர்.
சரத் பொன்சேகா பீல்ட் மார்சலாக தரம் உயர்த்தப்படும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் நிகழ்வில் பங்கேற்காமைக்கும் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதுவர்களும் அதிகாரிகளும் வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளமையே நிகழ்வில் பங்கேற்காமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr2B.html

Geen opmerkingen:

Een reactie posten