தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 maart 2015

அழுத்தங்கள் வந்தாலும் செப்டெம்பரில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்: மனித உரிமைகள் ஆணையாளர்



வட பகுதிக்கு நாளை விஜயம் செய்யும் மைத்திரி, ரணில், சந்திரிகா
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 12:17.56 AM GMT ]
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர். 
25 வருடங்களின் பின்னர் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்ட வளலாய் பகுதியை உத்தியோகபூர்வமாக அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அரசாங்கம் அமையப்பெற்றதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்படும் என கூறப்பட்டது. அத்துடன் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பில் 1100 ஏக்கர் பரப்பளவுடைய நிலப்பரப்பு பொதுமக்களிடத்தில் விரைவில் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் தனது யாழ். விஜயத்தின் போது உறுதியளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த இப்பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களை இழந்திருந்தனர். அவற்றை பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம சேவகர் பிரிவிலுள்ள 232ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்பட்டதுடன் வலி. வடக்கில் அச்சுவேலி வயாவிளான் பகுதியும் மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிலப்பரப்பினை பூர்வீகமாகக் கொண்ட மக்களிடத்தில் அவர்களின் நிலங்களை நாளையதினம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனின் தகவல்படி, வடமாகாணத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 1100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனினும் இதுவரை 65 நாட்களுக்குள் 233 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாளை யாழ் வருகை தருகின்றார் மைத்திரி! தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் மக்களுக்கு பதில் சொல்வாரா?
யாழ்ப்பாணத்திற்கு நாளை வருகை தருகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்பாதுகாப்பு வலயங்களில் விடுவிக்கப்படாதுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட வலி.கிழக்கு வளலாய் கிராமத்தின் ஒருபகுதியினை இன்றைய தினம் பார்வையிட்டு, மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாதிருந்த தமது சொந்த நிலங்கள் விடுவிக்கப்படுவதாக அறிந்தவுடன், ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் தமது காணிகளை பார்வையிட வந்த மக்கள் காணிகள் தொடர்ந்தும் இராணுவ வசம் உள்ளதனை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்புக்களோடு வந்த மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதனால் அவர்கள் விரக்தியடைந்த நிலையில் உள்ளனர்.
புதிய அரசு படிப்படியாக எமக்கு வழங்கி வரும் நன்மைகளினை நாம் வரவேற்கும் அதேவேளை எமது மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் புதிய அரசு தொடர்ந்தும் முன்னெடுத்தால் அரசிற்கு எதிராக போராடவும் தயங்க மாட்டோம்.
வளலாயில் ஒரு பகுதி நிலங்கள் விடுவிக்கப்படாது உள்ளதோடு, அவற்றில் தொடர்ந்தும் இராணுவம் நிலைகொண்டேயுள்ளது. இதே போல் வசாவிளான் ஒட்டகப்புலத்தினை நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் சொந்த இடமாக கொண்டுள்ள போதிலும், இருபத்தியிரண்டு குடும்பங்களே அங்கு ஜனாதிபதியால் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இதே போன்ற நிலைமை தான் ஏனைய பகுதிகளிலும் உள்ளது.
இதுதவிர தற்போது மீள்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்ட மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையிலே பற்றைகள் சூழ்ந்த தமது காணிகளை துப்பரவு செய்து வருக்கின்றனர்.
இம்மக்களிற்கு அடிப்படை வசதிகளினை யாழ்.வரும் ஜனாதிபதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மேலும் இம்மக்கள் தொடர்பில் நாமும் விசேட கவனம் செலுத்தி உதவிகளை பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.
தமது நலன்களுக்காக மக்கள் ஏமாற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு தொடர்ந்தும் எமது மக்களினை புதிய அரசும் தொடந்தும் ஏமாற்றுமானால் அதனை நாம் பார்த்து கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
வளலாய் மக்களினை பார்வையிட்டு கலந்துரையாடிய பின்னர் வசாவிளான் மக்களினையும் சென்று பார்வையிட்டிருந்தார்.
வசாவிளான் மக்களினை சென்று பார்வையிட்ட போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உட்பட பலர் உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்களின் போது மக்கள் மீள்குடியேறுவதில் உள்ள பிரச்சினைகள், காணிகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தன.
இச்சந்திப்புக்களின் போது இராணுவம் உள்ள இடங்களில் இராணுவத்தோடு சேர்ந்து வாழ முடியாது எனவும்
இராணுவத்தினை தமது இடங்களை விட்டு அப்புறப்படுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr5H.html

சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 12:35.40 AM GMT ]
சர்வதேச சமூகம் புதிய அரசாங்கம் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மக்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலய நாடுகளை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளினதும் நம்பிக்கையை இலங்கை வென்றெடுத்துள்ளது.
கடந்த அரசாங்கத்தை விடவும் பாரியளவில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.
புதிய தொழில்நுட்ப வர்த்தக சமூகத்துடன் முன்னோக்கிப் பயணிக்க, சர்வதேச சமூகத்தின் சகல ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளினது ஆதரவும் இலங்கைக்கு: ஜனாதிபதி
பிராந்திய நாடுகள் மாத்திரமன்றி, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நாடுகள் புதிய அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை, நாட்டு மக்களின் அபிவிருத்திக்காக பயன்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் சர்வதேச நாடுகளுக்கிடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரிவினையை, புதிய அரசாங்கம் நிறைவு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, உலக நாடுகள் சில, கடந்த காலங்களில் ஆதரவுகளை வழங்கி வந்ததாகவும் இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று மாலை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், புதிய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நலன் வேண்டி பூஜை ஒன்று மஹியங்கனை புனித பூமியில் இடம் பெற்றுள்ளது. அங்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr5I.html

அழுத்தங்கள் வந்தாலும் செப்டெம்பரில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படும்: மனித உரிமைகள் ஆணையாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015, 01:07.04 AM GMT ]
எத்தகைய அழுத்தங்கள் தரப்பட்டாலும் தாம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியிடப்போவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
ஜெனீவாவில் அரசசார்பற்ற அமைப்புக்களுடன் இடம்பெற்ற மூடிய அறை சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையானது, செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.வி.கிருபாகரன் கேட்ட கேள்வி ஒன்றுக்கே செய்ட் ராட் ஹூசைன் இந்த பதிலை வழங்கினார்.
ஏற்கனவே மார்ச் மாதத்தில் வெளியிடப்படவிருந்த இந்த அறிக்கையை இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கோரிக்கைகையின் அடிப்படையில், மேற்கத்தைய நாடுகளின் அழுத்தங்களின் கீழ் பிற்போடப்பட்டமை குறிப்பிட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUlr5J.html

Geen opmerkingen:

Een reactie posten