ஜேனி டெர்ஜெஸ்(Jane Derges) என்பவர் சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள ''போருக்கு பிந்திய இலங்கையின் மதச்சடங்கு மற்றும் மீட்பு யுத்திகள்'' என்ற புத்தகத்தில்.......
யாழ்ப்பாண மக்களின் மதச்சடங்குகள் மற்றும் சம்பிரதாய நிகழ்ச்சிகள் குறித்தும் யுத்தத்தால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மக்கள் எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பதை குறித்தும் விரிவாக அலசப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்து மதத்தில் நடைமுறையில் உள்ளதுபோல் பக்தர்கள் தங்களது முதுகிலும், கால்களிலும் இரும்பு கொக்கிகளை குத்தி, தூக்கு காவடிகளை சுமந்து செல்வதை பற்றி விளக்கியுள்ளார்.
இந்த வழிப்பாட்டு நடைமுறையின் மூலம் பக்தர்கள் தங்களுக்கு ஏற்படும் அரசியல் ரீதியான அடக்கு முறைகள், சமூகத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எவ்வாறு எதிர்கொண்டனர் என்றும் யுத்த வன்முறைகளால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தும் வகையில் இந்த தூக்கு காவடி வழிமுறை இருப்பதாக டெர்ஜெஸ் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்ட 2002-2006 ஆண்டுகளுக்கு இடையில் இந்த ஆய்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2013 ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது.
நான்கு பகுதிகளை உள்ளடக்கியுள்ள இந்த புத்தகத்தில் இந்து மத திருவிழா காலங்களில் யாழ்ப்பாண பக்தர்களின் மனம் மற்றும் உடல் ரீதியான வழிப்பாட்டு செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறப்படுகிறது. ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகையில் டெர்ஜெஸ் ஒரு விடயத்தை நன்றாக புரிந்துக்கொண்டார். அதாவது, போருக்கு பின் யாழ்ப்பாண மக்கள் ஆழமான அமைதியை ஒரு பாதுகாப்பான ஆயுதமாக கடைபிடித்து வந்துள்ளனர்.
மேலும், தங்களை வருத்திக்கொண்டு பின்பற்றிய வழிபாட்டு முறைகள் மூலம் பக்தியை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அதையும் தாண்டி அமைதியான முறையில் போரால் விளைந்த கொடுமைகளுக்கு எதிராக தங்களது எதிர்ப்பையும் காட்டியுள்ளனர் என்பதை டெர்ஜெஸ் புரிந்துக்கொண்டார்.
யாழ்ப்பாண மக்கள் தங்களையே வருத்திக்கொண்டு செய்யும் மதச்சடங்குகள் மூலம் போரினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தும் ஒரு மருந்தாக அவர்கள் பின்பற்றியுள்ளனர். அமைதியான முறையில் எதிர்ப்புகள், போராளிகள் அல்லது போராட்டங்கள் இல்லாத கூட்டங்களை நடத்துவதன் மூலம் தங்களுக்குள்ளே கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சுயாட்சி வளையத்தை அவர்கள் பின்பற்றியுள்ளதாக இந்த புத்தகம் மூலம் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த புத்தகம் மூலமாக நேரடியான ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது தான் சந்தித்த சவால்களையும் அவர் விரிவாக எடுத்து கூறியுள்ளார். ஆய்வு பணியில் ஈடுப்பட்டபோது, தங்களுக்குள்ளே ஒரு வெளிப்படையான அமைதி நிலவியதை அவர் கூர்ந்து கவனித்துள்ளார். அதேபோல், ஆய்வில் ஈடுபட்டவர்கள் தங்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் அதிகளவில் நம்பிக்கொள்ளாத சூழ்நிலைகள் நிலவியதையும் அவர் கவனித்துள்ளார்.
இதுபோன்ற சந்தேகத்திற்குரிய, ஒருவித அச்சம் நிறைந்த சூழ்நிலைகள் பாரம்பரிய முறைகள், ஆய்வில் ஈடுபட்டவர்களின் கவனம், பேட்டிகள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் யுத்திகள் தொடர்பாக அவருக்கு சில கேள்விகள் எழுந்தது. இதற்கு பதிலாக, ஆய்வில் ஈடுபட்டவர்களிடம் பொதுவான முறையில், சாதரணமாக பழகியதால் அவர்கள் குறித்த விரிவான நேர்மையான தகவல்களை சேகரிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிமுகமில்லாத ஒரு நபர் மீது மக்களுக்கு எழும்பியுள்ள ஒரு சந்தேக பார்வையையும் தாண்டி சில வழிமுறைகளை பின்பற்றியதன் மூலம் அவர்களிடமிருந்து தகவல்களை பெற முடிந்துள்ளது. ஆய்வு பணிகளை பேருந்துகள், படகுகள் சில நேரங்களில் நடந்துக்கொண்டே மேற்கொண்டதில் பல உபயோகமான, மறக்க முடியாத தகவல்களை சேகரிக்க உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேர்த்தியான, திட்டமிடப்பட்ட வழிமுறைகள், வார்த்தைகள் மூலமாகவும், சைகைகள் மூலமாகவும் எந்தவித இடையூறும் இல்லாமல் முக்கியமான தகவல்களை பெறுவதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். மக்களிடம் உயர் அதிகாரிகள் போல பேட்டிகளை காண்பது, கண்டிப்பான முறையில் தகவல்களை பெற முயற்சிப்பது முடியாத காரியம் என்பதை அவர் நன்கு புரிந்துள்ளார்.
இதையெல்லாம் தவிர்த்து, மக்களோட மக்களாக கலந்து அவர்களில் ஒருவராகவே மாறி பழகியதால் மட்டுமே அவர்களின் உண்மையான பழக்க வழக்கங்கள், போரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த நேர்மையான தகவல்களை பெற்று இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எழுத்தாளர் எந்தெந்த கருத்துக்களை முன்வைக்கிறார் என்பதை இப்போது சுருக்கமாக பார்ப்போம். புத்தகத்தின் முதல் பகுதியில் சிறிலங்காவில் நடைபெற்ற போரை பற்றி கூறியுள்ளார். இதில், தமிழ் மக்களின் குறைகளுக்கான ஆரம்ப காரணங்களை பற்றியும், அவர்களின் போர்க்குணத்தின் எழுச்சிகளை பற்றியும், காலனித்துவ ஆட்சி மற்றும் காலனித்துவ ஆட்சிக்கு பின்னரான அரசியலும், தேசிய மொழியும் ஆயுத போராளிகள் ஒரு தனியான சுதேசிய இனத்தை உருவாக்கினார்கள். இதன் மூலம், இலங்கையின் தேசிய பிரஜைகளை விட, தமிழர்கள் மிக முக்கிய அந்தஸ்த்துடன், தேசிய அடையாளத்தை பெற்றவர்களாக கருதப்பட்டார்கள். மேலும், வடக்கு இலங்கையில் உள்ளவர்கள் போரினால் ஏற்பட்ட கொடுமைகள் மற்றும் அவற்றால் விளைந்த பாதிப்புகளை பல்வேறு யுத்திகள் மூலம் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
போருக்கு பின்னால் இருந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் தங்களின் எதிர்ப்புகளை அமைதியான முறையிலேயே வெளிப்படுத்தியுள்ளனர்.
புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் போருக்கு பின்னால் சமூகத்தில் உள்ள யதார்த்தமான சூழ்நிலைகள் எவ்வாறு புது மாற்றம் கொண்டது என்பதை விளக்கியுள்ளார்.
அதாவது, சமகாலத்தில் இருந்த பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் யாழ்ப்பாணத்தில் எவ்வாறு படிப்படியாக மாற்றம் அடைந்தது என்பதை குறிப்பிட்டுள்ளார். இதில், தமிழ் குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாறியது, பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், பெண்களுக்கான பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், திருமணம் ஆகாமல் கர்ப்பமாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சாதி பிரச்சனைகள் உள்ளிட்ட பல விடயங்களை அலசியுள்ளார்.
போரால் பல ஆண்கள்(கணவர்கள்) கொல்லப்பட்டதால் யாழ்ப்பாண பகுதிகளில் குடும்ப பொறுப்புகளை பெண்களே தலைமை ஏற்று நடத்தி செய்வது மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், பெண்கள் மறு திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழும் சூழ்நிலை உருவாகியது. மேலும், இந்த சூழ்நிலைகளால், பெண்கள் மத்தியில் மது அருந்தும் பழக்கமும் அதிகரித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். போருக்கு பின்னால், பெண்கள் பெருமளவில் பாலியல் தொல்லைகளுக்கும், பலாத்காரங்களுக்கும் உள்ளானர்கள். இளைஞர்களால் பெண்கள் பாலியல் தொல்லைகள் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளானாலும் கூட இளைஞர்கள் பொலிஸ் தண்டனையிலிருந்து தப்பி விடும் சூழ்நிலையே நிலவியது.
மேலும், போருக்கு பின்னால், யாழ்பாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பொலிசார் சரியான விதத்தில் செயல்படுவதில்லை என்ற ஒரு பரந்த கருத்தும் மக்களிடையே நிலவி வருகிறது. இதுபோன்ற வேளைகளில் விடுதலை புலிகள் அமைப்பு மூலம் பெண்களுக்கு கிடைத்த பாதுகாப்பை இன்றும் மக்கள் நினைவு கொள்கின்றனர் என இந்த புத்தகத்தில் டெர்ஜெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாண மக்களிடையே நிலவிய சண்டையும் இல்லை, சமாதானமும் இல்லை என்ற பொது கருத்தை தனது ஆய்வு தகவல்கள் மூலம் எழுத்தாளர் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
இலங்கை போர் மற்றும் அரசியல் வன்முறைகளால் யாழ்பாண இளைஞர்களுக்கு ஏற்பட்ட எதிர்மறை தாக்கங்களை குறித்து அவர் விவரித்துள்ளார்.
அதிகாரமற்ற யாழ்ப்பாண இளைஞர்கள் தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்த அமைதியான கூட்டங்களையும், பேச்சு திறமையையும் மட்டுமே பின்பற்றியுள்ளனர்.
இதுபோன்ற எதிர்ப்பை தெரிவிக்கும் கூட்டங்கள் அல்லது சொற்பொழிவுகள் மிக அதிகமாக நகைச்சுவை வடிவங்களில், மக்களிடையே பரவும் கிசுகிசுக்கள், தெரு நாடகங்கள் மூலமாக அமைதியான முறையில் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
இந்த முறைகளில், தூக்கு காவடி என்ற சம்பிரதாயம், யாழ்ப்பாண மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்முறை மற்றும் கொடுமைகளை எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ளது. தூக்கு காவடி நிகழ்ச்சியை பின்வருமாறு விளக்குகிறார்:
தூக்குகாவடி மிகவும் கடுமையான கிரியை. இளம் தமிழர்கள் கலந்து கொள்ளும் இது மதம் சார்ந்த பக்தி மாத்திரமல்ல, வன்முறை மற்றும் சித்திரவதைகளின் அனுபவங்களில் இருந்து தமது உடல் வலியின் பலத்தை மறு உற்பத்தி செய்து கொள்ளவும் வலிமை மற்றும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி கொடுக்கின்றது.
அவர்களுக்கு எதிரான வன்முறை செயல்களில் வலிகளில் இருந்து விடுப்பட்டு, உடல் வலிமையும் கட்டுப்பாட்டையும் கொடுப்பது மட்டுமல்லால், பலத்தையும் தமது உணர்வுகளை கட்டுப்படுத்தும் சக்தியை கொடுக்கிறது.
புத்தகத்தின் மூன்றாவது பகுதியில் மதச்சடங்கு நிகழ்ச்சிகளில் தங்களின் உடல்களை வருத்துவதின் மூலம் வெளிப்படுத்தும் எதிர்ப்புகளை அவர் விவரித்துள்ளார். யாழ்ப்பாண மக்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை மறப்பதற்கும், அதற்கு அமையான முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் மற்றும் போரினால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த இந்த வழிமுறைகள் மிகவும் பயனுள்ளதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இதுபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு அளிக்கப்படும் மேற்கத்திய சிகிச்சைகளான மருத்துவ ஆலோசனை வழங்குவது, அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) மற்றும் விவரணை வெளிப்பாடு சிகிச்சை உள்ளிட்டவைகள் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
மேலும், போர் தாக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள பல வழிமுறைகளை யாழ்ப்பாண மக்கள் பின்பற்றியுள்ளனர். வாக்கு சொல்லுதல், கைரேகை பார்த்தல், துக்கு காவடி, பிரதட்டை, தீமிதித்தல், பரவசம் உள்ளிட்ட சம்பரதாயங்களை அவர்கள் பின்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாண பகுதிகளில் சிறிலங்கா ராணுவத்தின் வருகைக்கு பின்னரும், தமிழர்களை கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கியபோது மக்கள் மத்தியில் நடைமுறையில் இருந்த மதச்சடங்கு நிகழ்ச்சிகள் மேலும் அதிகரித்ததாக எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்கள் இதுபோன்ற வழிபாட்டு நடைமுறைகளில் அவர்கள் பெரும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். போரால் ஏற்பட்ட தாக்கங்கள், சிறிலங்க ராணுவத்தின் கைது நடவடிக்கைகள், தமிழர்களை சித்ரவதை செய்யும் முயற்சிகள் உள்ளிட்டவைகளிலிருந்து தப்பிக்க பெரும்பாலான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இதுபோன்ற மதசம்பர்தாய நிகழ்ச்சிகளில் அதிக அளவில் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டினர்.
இந்த ஒட்டுமொத்த சம்பிரதாயங்களில் யாழ்ப்பாண மக்கள் எவ்வாறு ஈடுபடுகின்றனர், அவர்களுக்கு இருக்கும் ஆதரவு மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி விரிவான ஆவணங்களையும் எழுத்தாளர் சேகரித்துள்ளார்.
புத்தகத்தின் நான்காவது பகுதியில் ஆய்வு குறித்து எழுத்தாளரின் முடிவுகளை விவரித்துள்ளார். எழுத்தாளர் மேற்கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் இரண்டு முக்கிய கருப்பொருள்களை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
முதல் கருப்பொருளானது, யாழ்பாண மக்களின் அடையாளம் மற்றும் அடிமைத்தனத்தை பற்றியும், இரண்டாவதாக, வாழ்வாதார போராட்டம் மற்றும் மறுசீரமைத்தல் பற்றியும் விளக்குகிறது. மதச்சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை யாழ்ப்பாண மக்கள் எவ்வாறு பின்பற்றுகின்றனர், அவற்றின் காரணங்கள் மற்றும் தாக்கங்களை எழுத்தாளர் நன்கு கூர்ந்து கவனித்துள்ளார்.
டெர்ஜெஸ் மேற்கொண்ட ஆய்வில் சிறிது குறைபாடுகளும் காணப்படுகின்றன. அதாவது, தற்போது உள்ள யாழ்பாண மக்களின் முரண்பட்ட விடயங்களை பற்றி புத்தக வாசகர்கள் தெரிந்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பது குறைபாடாக உள்ளது.
முதலில், மதச்சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை தங்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு அம்சங்களாக யாழ்பாண மக்கள் பயன்படுத்தினர் என எழுத்தாளர் கூறுவது முற்றிலும் உண்மை. சிறிலங்க அரசிற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, சிறிலங்க ராணுவத்தினர் யாழ்ப்பாண பகுதிகளில் இருந்துள்ளனர்.
அதே சமயம், இரு பிரிவினர்களையும் இரகசியமாக உளவு பார்த்த உளவாளிகள் அந்த கால கட்டத்தில் இருந்ததாக மக்களிடம் பொதுவான ஒரு வதந்தி இருந்துள்ளது. இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் மக்களிடையே நெருங்கி பழகியதாலும், பல இடங்களுக்கு சென்று வந்ததால், இலங்கை அரசிற்கு அவர் உளவு பார்க்கிறார் என எழுத்தாளர் மீதே குற்றம் சாட்டப்பட்டது.
சாதரண மக்கள் கூட ஒரு அறிமுகமில்லாத நபரிடம் எதை பேசுவது, யாரை நம்புவது என குழப்பத்தில் இருந்ததால், இதையெல்லாம் தவிர்க்க பொதுவாக அமைதியை கடைபிடித்து வந்துள்ளனர். இருப்பினும், உள்நாட்டு யுத்தம் முடிவடையும் சமயங்களில் அரசியலை சேர்ந்தவர்கள், ஊடகத்துறையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த அமைதியை உடைத்தெறிந்து சில நேரங்களில் அநீதிக்கு எதிரான குரல்களையும் எழுப்பியுள்ளனர்.
இவ்வாறு குரல் எழுப்பியவர்கள், வன்முறை நிகழ்ந்த சமயங்களில் காணாமல்போன தங்களது உறவினர்கள் எங்கு இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல், அத்துமீறல்களால் தங்களது இடங்களையும் சொத்துக்களையும் கைப்பற்றி இருப்பதை திரும்ப தங்களிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அது மட்டுமில்லாமல், ஊடகத்துறையில் சிறிலங்கா அரசு மற்றும் ராணுவத்தின் தலையீடு இருக்க கூடாது என்றும் அவர்கள் போராடியுள்ளனர்.
யுத்தம் ஒரு மோசமான முடிவுக்கு வந்த பிறகும் மக்கள் மத்தியில் என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது? ஒட்டு மொத்த யாழ்ப்பாண மக்களின் கோரிக்கைகளை. துன்பங்களை கேட்க உள்நாட்டு அரசுக்கு அக்கறை இல்லாததால், தங்களது பிரச்சனைகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துக்கூற மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
உதாரணத்திற்கு, பிரித்தானிய பிரதமாரான டேவிட் கேமரூன் கடந்த நவம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தபோது, நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது உறவினர்களை காணவில்லை என்றும் இதற்கான காரணத்தை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் குதித்தனர்.
பாலேந்திரன் ஜெயகுமாரி, அவருடைய 13 வயது மகளான விபூசிகா என்பவருடன் பல போராட்டங்களை நடத்தி தனது உறவினர்களை குறித்து கேள்வி எழுப்பியதற்கு கடந்த மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டேவிட் கேமருனை வரவேற்று நடத்திய போராட்டத்தில் ஜெயகுமாரி தான் தலைமை தாங்கினார்.
சிறிலங்கா அரசிற்கு எதிர்க்கட்சிகளும், சர்வதேச அமைப்புகளும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் ஒரு வருடத்திற்கு பின்னர் ஜெயகுமாரியை உள்ளூர் காவல் துறை அலுவலகத்தில் மாதந்தோறும் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தைனையுடன் ஜாமீனில் அரசு விடுதலை செய்தது.
மேலும், ஜெயக்குமாரியின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுடன், அனுமதி இன்றி அவரது மாவட்டத்தை விட்டு வெளியேற கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இரண்டாவதாக, மக்களின் சம்பிரதாய நிகழ்ச்சிகள் மீண்டும் தலை தூக்கியுள்ளது மட்டுமில்லாமல், அதனுடைய பலன் கூடியும் மக்களிடம் பெரும் ஒற்றுமையும் இருப்பதை எழுத்தாளர் நன்கு கவனித்துள்ளார். இருப்பினும், சாதி பிரிவினைகளால் இந்த மதச்சடங்குகளை ஒட்டுமொத்த மக்களிடமும் கொண்டு செல்ல முடியவில்லை.
இதுபோன்ற பிரச்சனைகளால் ஒரே இனத்தில் சில பிரிவினைகளும் தோன்ற தொடங்கின. மேலும், சாதி வாரியாக இந்து கோயில்களை மீண்டும் கட்டியதால், மக்களிடையே இருந்த பிரிவினை இன்னும் அதிகரித்தது. அதேபோல், இந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் மக்கள் கூட்டம் நிறைந்த நகர் புறத்தில் தங்கி ஆய்வை மேற்கொண்டதால், அவரால் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று அவர்களின் மதச்சடங்குகளை விரிவாக கண்டு ஆய்வு செய்யும் வாய்ப்பை அவர் பெறவில்லை.
மூன்றாவதாக, சாதி மற்றும் வகுப்புகளை பற்றி விவாதிக்கும்போது யாழ்ப்பாண கிராமங்களின் நடைமுறையில் உள்ள சாதி வாரியான பாரப்பட்ச நடவடிக்கைகள் குறித்து எழுத தவறியது ஒரு குறைபாடாகும்.
எழுத்தாளரை பொறுத்தவரை, யுத்தத்திற்கு பிறகு மக்கள் கூட்டமாக ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டதால் அவர்களிடையே சாதி பிரிவினை பெரிதாக காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், நன்கு கவனித்து பார்த்தால், அகதிகள் முகாம்களில் நீண்ட மாதங்களாக தங்க வைக்கப்படுவதால் அங்கேயும் சாதி பிரிவினையும், வகுப்பு ரீதியான பாரபட்ச நடவடிக்கைகளும் இருந்துள்ளது.
அகதிகள் முகாம்களில் நீண்ட காலம் தங்கியதால், பழைய சாதி ரீதியான பழக்கவழக்கங்களையும் மக்களிடையே காட்ட முடிந்தது. நீடித்த யுத்தத்தால் சாதி பிரிவினைகளும் வகுப்பு வாத பாரபட்ச நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழும்பியவாறு உள்ளது. தமிர்களுக்கான தனி நாடு கேட்டு நடத்தப்படும் போராட்டத்தை விட சாதி பிரச்சனைகளுக்கு எதிராக நடத்திய போராட்டமே நீண்ட வரலாறு பெற்றது.
நான்காவதாக, யுத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட நில அமைப்பு மாற்றங்களால் சாதி குறித்த விடயங்களில் தலைகீழான மாற்றங்கள் சமுதாயத்தில், குறிப்பாக வேலை செய்யும் அலுவலகங்களில், இருப்பதாக எழுத்தாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் சாதியை சேர்ந்தவர்கள் கூட அலுவலகங்களில் அடிமட்ட பதவிகளை வகிக்க நேர்ந்தது. முன்பு இல்லாத வகையில், யாழ்ப்பாணத்தில் பின் தங்கிய சாதி பிரிவை சேர்ந்தவர்கள் மேல் படிப்பை முடிப்பதுடன் அரசு வேலைகளிலும் சேர்வது கண்கூடாக பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்த முக்கிய நிகழ்வாக, யாழ்ப்பாணத்தை சேர்ந்த உயர் மற்றும் நடுத்தர சாதியான வெள்ளாளர் பிரிவினர் யுத்தம் காரணமாக தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டனர்.
1999 ஆம் ஆண்டு மெக்டொவல் நடத்திய ஆய்வில் 1983 மற்றும் 1991 காலகட்டங்களில் சிறிலங்காவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு இடம்பெயர்ந்தவர்களை பற்றி புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார். அதில், 63 சதவிகித மக்கள் வெள்ளாள சாதியை சேர்ந்தவர்கள் என்றும் 13 சதவிகித மக்கள் கரையார் எனப்படும் மீனவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆய்வின் மூலம், 1990 ஆண்டுகள் மத்தியில் இடம்பெயர்ந்தவர்களில் அனைத்து விதமான சாதியனர் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
1950 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் தொகையில் 50 வீதமானவர்கள் வெள்ளாளர்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள மல்லாகம் என்ற கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு 31 வீதமான வெள்ளாளர்கள் இருந்துள்ளனர். ஆய்வாளர் உள்ளூராட்சி அதிகாரிகள்,கிராம வாசிகளின் உதவியுடன் கிராமத்தில் மேற்கொண்ட ஜாதி ரீதியான ஆய்வில், ஜாதி ரீதியிலான அடிப்படையிலான சனத் தொகையில் கிட்டத்தட்ட வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததை காணமுடிந்துள்ளது.
யாழ்ப்பாண சனத் தொகையில், ஜாதி அடிப்படையிலான துல்லியமான அதிகாரபூர்வ தரவுகளை பெறுவதும் மிகவும் சிரமமானது.
குறிப்பாக வெள்ளாளர் ஜாதியினர் மேற்குலக நாடுகளை நோக்கி இடம்பெயர்ந்து சென்றதன் காரணமாக யாழ்ப்பாண சமூக, பொருளாதார, மத மற்றும் பாரம்பரிய மக்கள் தொகையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண மக்கள் தொகையில் மாற்ற ஏற்பட்டிருந்தாலும் வெள்ளாளர் சமூக ஆதிக்க வரலாற்றில் (அரசரட்ணம் உபவேந்தர் 1981) அது எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. யாழ்ப்பாணத்தின் அரசியல், உயர்கல்வி நிறுவனங்களின் உயர் பதவிகள் மற்றும் மதத்துறையிலும் அவர்கள் இன்னும் கவனமாக தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.
இறுதியாக, வேறுபட்ட சாதியினர் வெளிநாடுகளில் குடியேறி அந்த வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதும், அதிகமாக சொத்துக்களை சேர்ப்பதால், அவர்களுடைய சாதி மற்றும் வகுப்பு வாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக எழுத்தாளர் மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், வெளிநாட்டிற்கு சென்ற ஒடுக்கப்பட்ட சாதியினருக்குள்ளே எவ்வாறு இவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டது என்பதை விரிவாக விவரிக்க எழுத்தாளர் தவறியுள்ளார். ஏனெனில் இனவரைவியல் குறித்து ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தற்போதைய சமூக பொருளாதார மாற்றங்களை குறித்து தெரிந்துகொள்ள இது மிக முக்கிய அம்சங்களாகும்.
இந்த மறுஆய்வின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருப்பது போல, இந்த ஆய்வுகளும் மிக குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டு, 2013 ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஆய்வு மேற்கொள்வதிலிருந்து புத்தகமாக வெளியீடு செய்தது வரை சுமார் 8 வருடங்கள் இடைவெளி இருந்துள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை நிகழ்ந்த முக்கிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை இந்த புத்தகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களானது A9 நெடுஞ்சாலைகளை மீண்டும் தொடங்கப்பட்டு நாட்டின் முக்கிய பகுதியுடன் இணைத்தது மற்றும் உள்நாட்டு வர்த்தக மற்றும் உள் தொழிலாளர் குடியேற்றம் உள்ளிட்டவைகளின் முன்னேற்றங்களும் அடங்கும்.
2015 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலால் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், சிறிலங்க சமூக, பொருளாதார மற்றும் அரசியலில் ஜனநாயகத்தை உட்புகுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் சமூக மீட்பு மற்றும் மாற்றங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இந்த குறைபாடுகளை தவிர்த்து பார்த்தால், யுத்தத்தால் பல அரசியல் கொடுமைகளையும் வன்முறைகளையும் அனுபவிக்கும் யாழ்ப்பாண மக்களின் சமூக யதார்த்தங்களையும், மதச்சடங்கு சம்பிரதாயங்களையும் விரிவாக காட்டுவதாக அமைந்துள்ளது.
உள்நாட்டு புதிய இந்து மத சம்பிரதாயங்கள் மற்றும் மதச்சடங்கு நிகழ்ச்சிகளை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு மிகச்சிறந்த பங்களிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என எழுத்தாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr5F.html
Geen opmerkingen:
Een reactie posten