[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 05:17.56 PM GMT ]
நாளை உண்ணாவிரதப்போராட்டம் முன்னெடுக்கப்படும் நல்லூரினை அது வந்தடையுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்கின்றது நல்லூரில் உண்ணாவிரதம்!
கடத்தப்பட்டும் சரணடைந்தும் காணாமல் போனவர்களின் உண்மை நிலையை வெளியிட வலியுறுத்தியும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் நல்லூரில் இன்று தொடர்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr6H.html
இலங்கை பிரதமரின் பேச்சு திட்டமிட்டு பெரிதுபடுத்தப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 04:51.26 PM GMT ]
சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.
''எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளுவோம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இலங்கை பிரதமரின் பேச்சு திட்டமிட்டு பெரிதுபடுத்தப்படுகிறது.
பிரதமர் மோடியின் பயணம் குறித்து ஆலோசனை நடத்த இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், 13-ம் திகதி சுற்றுப் பயணம் செல்ல உள்ள பிரதமர் மோடி ஆகிய இருவரும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு முடிவு காண்பார்கள்.
எனவே, இடைப்பட்ட பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பேச்சுவார்த்தைக்குப் பிறகு வரும் முடிவுக்கு முக்கியத்துவம் தருவோம்.'' என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்க மாட்டோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க கூறியிருந்தார்.
ரணில் பேச்சுக்கு பல தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேச்சு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr6G.html
Geen opmerkingen:
Een reactie posten