தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 maart 2015

பிரதமர் மோடியே இலங்கைப் பயணத்தை இரத்து செய்க! சென்னையில் ஆர்ப்பாட்டம்.



வடக்கின் போர். யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி வெற்றி
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 07:07.53 PM GMT ]
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர்கள் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை சமப்படுத்த வேண்டும் என்ற முடிவுடன் எடுத்த நடவடிக்கைகள் யாவற்றையும் தமது வியூகத்தினால் முறியடித்த யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் 109-வது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடை பெற்று மூன்றாவது நாளான இன்று சனிக்கிழமை பகல் போட்டி ஆரம்பமாகியதும் துடுப் பெடுத்தாடிய சென்ஜோன்ஸ் கல்லூரி மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.
மொத்தமாக 09 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
வெற்றிக்காக 273 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய மத்திய கல்லூரி 188 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இதில் ஆரம்ப வீரராக களமிறங்கிய நிரோசன் பொருமையாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 276 பந்துகளில் 8 நான்குகள், 3 ஆறுகளுடன், 72 ஓட்டங்களையும், கார்த்தீபன் 7 நான்குகள், அடங்கலாக 35 ஓட்டங்களையும், கௌதமன் 4 நான்குகள் அடங்கலாக 26 ஓட்டடங்களையும், நிரோஜன் 17 ஓட்டங்களையும், கிருபாகரன் 14 ஒட்டங்களையும் பெற்றனர்.
சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் கபில்ராஜ் 17.1 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 40 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், கிசாந்திகன் 12 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்களையும், துவாரகசீலன், கஜீபன், ஜதுசன், லோகதீஸ்வரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
109 வது போட்டியில் சாதனையாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு துடுப்பாட்ட மட்டைகள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்கள் வருமாறு:
சிறந்த துடுப்பாட்டவீரர் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஜெனிபிளமிங், சிறந்த பந்துவீச்சாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் கிசாந்திகன், சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கௌதமன், சிறந்த சகல துறை வீரராக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் திரேசன், சிறந்த விக்கெட் காப்பாளராக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் கபில்ராஜ், ஆட்டநாயகனாக சென்.ஜோன்ஸ் கல்லூரியின் ஜெனிபிளமிங் ஆகியோர் தெரிவாகினர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr6I.html


பிரதமர் மோடியே இலங்கைப் பயணத்தை இரத்து செய்க! சென்னையில் ஆர்ப்பாட்டம்.
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 07:28.52 PM GMT ]
இனக்கொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரனைக் குழு தள்ளிப்போடப் பட்டுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் மோடி ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசுடன் நல்லுறவு பேணவும் வரும் மார்ச்சு 13 அன்று இலங்கை செல்ல உள்ளார்...
பிரதமர் மோடி இனப்படுகொலை செய்த இலங்கையை புறக்கணித்து இலங்கை பயணத்தை இரத்து செய்க என வலியுறுத்தி இளந்தமிழகம் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது .
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr6J.html

Geen opmerkingen:

Een reactie posten