தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 maart 2015

தமிழ் பிரதேசங்களில் இருந்து உடனடி படைக்குறைப்புக்கு வாய்ப்பில்லை: ரணில்

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 03:46.40 PM GMT ]
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை இரவு 8 மணிக்கு சென்றடையும் போது திட்டமிடாத ஒரு ஆர்ப்பாட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போராட்டத்துக்கு ஆதரவை காட்டும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒன்றுகூடவுள்ளனர்.
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற போது அதற்கு மைத்திரிபாலவும் காரணமாக இருந்தார் என்ற அடிப்படையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr6C.html

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் முன்கூட்டியே இடம்பெற்றிருக்க வேண்டும்: சரத் பொன்சேகா
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 03:52.38 PM GMT ]
இந்திய பிரதமர் ஒருவரின் இலங்கை விஜயம் முன்கூட்டியே இடம்பெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
இந்தியா, இலங்கைக்கு தொடர்ந்தும் உதவியளித்து வந்துள்ளது. இந்தநிலையில் மோடியின் விஜயம் வரவேற்கத்தக்கது.
28 வருடங்களாக இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யாமையானது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் தற்போது அது நிகழ்வது நிறைவை அளிக்கிறது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது இந்திய இராணுவ உதவிகளை வழங்காமை குறித்து சரத் பொன்சேகாவிடம் கேட்டபோது, தமிழகத்தின் எதிர்ப்பு இதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பதை இலங்கை புரிந்துக்கொண்டது. எனினும் இலங்கைக்கு இந்தியா தார்மீக ஆதரவை வழங்கியது என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

கொழும்பு போட் சிற்றி நிர்மாணப் பணிகளை சீனா இடைநிறுத்தியது
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 04:14.06 PM GMT ]
கொழும்பு போட் சிற்றி திட்டத்தை இடைநிறுத்துவதாக அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனமான, சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுக நகர நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தும், இலங்கை அமைச்சரவை முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி, தமக்கு துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளதாகவும், சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த திட்டத்தை ஆரம்பிக்க முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட முன் அனுமதிகளை சமர்ப்பிக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதாகவும், சீன நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பான எல்லா ஆவணங்களும் இலங்கை அரசாங்கத்துக்கு கையளிக்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் சீன நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர கட்டுமானப் பணிகளை உடனடியாக இடைநிறுத்தும் முடிவு,  இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பின்னரும், நிர்மாணப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பிரதேசங்களில் இருந்து உடனடி படைக்குறைப்புக்கு வாய்ப்பில்லை: ரணில்
[ சனிக்கிழமை, 07 மார்ச் 2015, 04:39.00 PM GMT ]
நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்படும் வரையில் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து உடனடியான இராணுவ குறைப்புக்கு வாய்ப்பில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் தமிழர் பிரதேசங்களில் எதிர் பார்க்கும் முன்னேற்றங்கள் என்ன என்பது தொடர்பில் அவர் தகவல்களை வெளியிடவில்லை.  அரச கட்டுப்பாட்டில் இருந்த பல காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் படையினர் முகாமிட்டுள்ளனர்.
இந்தநிலையில் இராணுவத்தினர் சில மாவட்டங்களில் இருந்து ஏன் விலகிச்செல்ல வேண்டும் என்பதற்கான காரணத்தை தாம் அறியமுடியவில்லை.
இலங்கையின் இராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையானது இந்தியாவை அடிப்படையாக கொண்டதே என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வடக்கில் பொதுமக்களின் விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் படையினர் எண்ணிக்கை அதிகம் என்பதை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர், எனினும் பொலிஸ் அதிகாரத்தை முதலமைச்சரிடம் வழங்கினால் பொலிஸ் அதிகாரம் தனிப்பட்ட இராணுவப் பிரிவாக மாறிவிடும் அச்சம் உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் இரண்டு மாகாண சபைகளும் தீர்மானம் நிறைவேற்றினால் இலங்கை அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTbSUmr6F.html

Geen opmerkingen:

Een reactie posten