தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

காணாமல் போன மகனை இணையத்தில் கண்டேன்! - தாய் வழக்கு தாக்கல்

றோ தலைவரை உளவு பார்த்த குழுக்கள் றோவுக்காக ராஜபக்சவினரை உளவு பார்த்துள்ளன
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 12:03.13 PM GMT ]
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய றோ உளவு பிரிவின் முன்னாள் அதிகாரியை உளவு பார்க்க, கோத்தபாய ராஜபக்ச சில குழுக்களை நியமித்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குழுக்கள் றோ உளவு பிரிவிற்காக தமது தரப்பின் உளவு தகவல்களை திரட்டியதாகவும் இறுதியிலேயே இதனை தாம் அறிந்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் மோடியுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து பேசுவதற்காக மிரிஹானையில் வீடொன்றில் தங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சவை சிலர் சென்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோடி நல்லவன். எனினும் றோவிடம் இருந்துதான் தப்பிக்க முடியாது. இலங்கையில் இருந்த றோ அமைப்பின் பிரதானி இளங்கோவன் தான் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினான்.
அவனை உளவு பார்க்க கோத்தபாய சில குழுக்களை நியமித்திருந்தார். ஆனால், இவர்கள் றோவுக்காக எங்களை உளவு பார்த்துள்ளனர்.
இறுதியில் தான் இது புரிந்தது. அறிந்த போது ஊர்வலம் சென்று சேர்ந்து விட்டது. தாஜ் ஹொட்டலுக்கு என்னை அழைப்பித்து மோடியை சந்திக்க வைக்க வேண்டும் என்ற தேவையே இந்தியகார்களுக்கு இருந்தது. நான் அதற்கு இணங்கவில்லை.
மோடியுடன் 10 நிமிடம் தனியாக பேச வேண்டியே தேவை எனக்கு இருந்தது. இதன் காரணமாகவே நான் இந்திய தூதுவரின் இல்லத்தில் அவரை சந்தித்தேன்.
அவர்கள் எனக்கு தேவையான வகையில் வேலை செய்ய வேண்டுமேயன்றி, நான் அவர்களுக்கு தேவையான வகையில் வேலை செய்ய மாட்டேன்.
அவர்களின் தாளத்திற்கு ஆடும் ஆள் நானில்லை என இந்திய பிரதமருடனான சந்திப்பு குறித்து மகிந்த விளக்கியுள்ளார். அங்கு மேலும் பேசியுள்ள முன்னாள் ஜனாதிபதி, எனது தோல்விக்கு றோ மாத்திரம் காரணமில்லை.
சோபி, ரத்ன மட்டுமல்ல மல்வத்தை பெரியவனுக்கு நான் எவ்வளவு உதவியிருக்கிறேன் இறுதியில் அவனும் எனக்கு வேட்டு வைத்தான். இவர்கள் அனைவருக்கும் நல்லாட்சியின் சுவை தற்போது தெரிந்து விட்டது.
இவர்கள் இன்னும் கொஞ்ச நாளில் எனது காலடிக்கு வருவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு பௌத்த பிக்குகள் மீது மரியாதை இல்லை என்பதை அவரது இந்த பேச்சு காட்டுவதாக இந்த தகவல்களை வெளியிட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தற்போது நுகேகொட மிரிஹான வீதியில் உள்ள அவரது மருத்துவர் எலியந்த வைட்டுக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதியின் பயன்பாட்டுக்காக எலியந்த வைட் அந்த வீட்டை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo0G.html

சுமந்திரனுடன் போட்டி! தேர்தல் களத்தில் இறங்கிய தமிழ்மாறன்!
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 12:52.50 PM GMT ]
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் களமிறங்குவதற்கான முன்னேற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதேவேளை, சட்டத்துறை விடயங்களில் அதிக பரிச்சயம் மிக்கவரும் கொழும்புப் பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளருமான வி.ரி.தமிழ்மாறனையும் இந்தத் தடவை யாழ். மாவட்டத்தில் களத்தில் இறக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தீவிரமாக சிந்தித்து வருகின்றது எனத் தெரிகின்றது. 

கடந்த தடவை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் தீவுப் பகுதி சார்பில் இரா.சிவச்சந்திரன் போட்டியிட்டார். அவர் தேர்தலில் தெரிவாகவில்லை. அவர் வேலணைப் பகுதியைச் சேர்ந்தவர். அவரது இடத்துக்கே இம்முறை புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வி.ரி.தமிழ்மாறனைக் களமிறக்குவதற்கு ஆலோசிக்கப்படுகின்றது. இதற்கு முன்னேற்பாடாக, தீவுப் பகுதியின் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளை ஊடாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு கோரிக்கை கட்சித் தலைமைப் பீடத்திடம் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது. 

தீவுப் பகுதியின் சார்பில் இம்முறை வி.ரி.தமிழ்மாறனை களமிறக்கக் கோரும் இக்கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்றுறைக் கிளைத் தலைவர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரனே ஒப்பமிட்டுள்ளார் எனவும் தெரிகின்றது. 

அரசமைப்புச் சட்ட விடயங்களில் வி.ரி.தமிழ்மாறன் நன்கு பரிச்சயம் உள்ளவர் என்பதால் அவரது பங்களிப்பு நன்கு உதவும் என இரா.சம்பந்தன் கருதுகின்றார் எனத் தெரிகின்றது. 

வி.ரி.தமிழ்மாறனின் மூத்த சகோதரர் அமரர் நாவேந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கியவர். உச்ச நெருக்கடி காலத்தில் கட்சியை விட்டுக் கொடுக்காது பணியாற்றியவர் நாவேந்தன். பல தரப்பினாலும் உயிர் அச்சுறுத்தல் விடப்பட்ட சமயத்திலும் கட்சியின் சார்பில் யாழ். பிரதி மேயராகப் பணியாற்றியவர். 

இதேவேளை எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வடமராட்சி கிழக்கை மையமாக வைத்து தேர்தலில் களமிறங்கும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். அப்பகுதியைச் சேர்ந்த கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அவருக்கான களப்பணியை முன்னெடுத்து வருகின்றனர். என்றும் தெரிகின்றது. 

இதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் யாழ். மாவட்ட எம்.பி.க்கள் அனைவருக்குமே அடுத்த தேர்தலில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கருதுகின்றார். இவர்களுள் விநாயகமூர்த்தி எம்.பி. சற்று நோய் வாய்ப்பட்டுள்ளார். எனினும் அடுத்த தேர்தலிலும் தமக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகின்றார் எனவும், அந்த விருப்பம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கப்பட்டிருகின்றது என்றும் அறிய வருகின்றது. 

இதேசமயம், கடந்த முறை யாழ். தேர்தலில் போட்டியிட்ட சீ.வி.கே.சிவஞானம் இப்போது வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவராக உள்ளார். அதேபோல பொ.ஐங்கரநேசன் மாகாண அமைச்சராகவுள்ளார். இவர்களுக்கு இடமளிப்பதில் கூட்டமைப்புத் தலைமை அதிக விருப்பம் காட்டவில்லை எனத் தெரிகின்றது. இதேசமயம், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்தான் நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பொதுத் தேர்தலில் இடமளிப்பதிலும் கூட்டமைப்புத் தலைமைக்கு அதிக விருப்பம் இல்லை என்று தெரிகின்றது. புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் வடக்கு மாகாண சபை உறுப்பினராக உள்ளார். அவரும் மற்றொரு மாகாண சபை உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரனும் இம்முறை பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் களமிறங்கும் இலக்கைக் கொண்டுள்ளனர் எனத் தெரிகின்றது. இவர்களுள் சித்தார்த்தன், கூட்டமைப்பில் தமது புளொட் கட்சிக்கு உரிய 'கோட்டா' மூலம் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற முயலக்கூடும். ஆனால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குத் பொதுத் தேர்தலில் இடமளிப்பதில்லை, அந்தப் பதவியில் அவர்களின் சேவை தொடரட்டும் என்ற காரணத்தைக் காட்டி அனந்திக்கு இடமளிக்காமல் இலங்கைத் தமிழரசுக் கட்சி அவரை வெட்டிவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அப்படி ஒரு தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுக்குமானால் வன்னி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலக்கை வைத்து காய் நகர்த்தி வரும் வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்துக்கு அது பெரும் இக்கட்டாய்ப் போய்விடும். "அவரைப் பொதுத் தேர்தலில் களமிறக்கினால் நல்ல ஒரு சுகாதார அமைச்சரை வடக்கு மாகாண சபை இழந்துவிடுமே...!" - என்று கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறினார் எனவும் அறியவந்தது. 
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo1A.html


இளைஞர்களது புஜபல பராக்கிரமங்களை வேறு வடிவில் பயன்படுத்த வேண்டும்: துரைராஜசிங்கம்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 01:00.45 PM GMT ]
இளைஞர்களது புஜபல பராக்கிரமங்களை வேறு வடிவில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக கிரேக்க நாட்டில் உள்ள அறிஞர்கள் சிந்தித்தார்கள் அவர்கள் சிந்தித்ததன் விளைவே இன்று விளையாட்டுப்போட்டியாக மாற்ற மடைந்திருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டுப்போட்டியானது பாடசாலை அதிபர் சா.பரமானந்தம் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரைராஜசிங்கம், உறுப்பினர்களான மா.நடராசா. பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மற்றும் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.புள்ளைநாயகம், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜீ.சுகுணன், வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலையின் முன்னால் அதிபர்கள். அபிவிருத்தி குழு உறுப்பினர்கள். பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
போர்க்களத்திலே பயன்படுத்தப்பட்ட ஈட்டி மைதானத்தில் ஈட்டி எறிதலாக பயன்படுத்தப்பட்டது பின்னர் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட தண்டாயுதம், தடாயுதம் என்பன இங்கு குண்டு போடுதலாக பயன்படுத்தப்படுகின்றது போர்களத்திலே வந்தவர்களை துரத்தி ஓடி வெட்டி வீழ்த்திய நிகழ்வு தற்போது ஓட்டப்போட்டியாக நடைபெறுகின்றது இவ்வாராக போர்க்களத்திலே நிகழ்ந்த சம்பவங்கள் பின்னர் விளையாட்டாக பரினமித்தது.
அதன்பின்னர் ஏதேன்சும், பாட்டாவும் ஒலிம்பிக் மலையருகில் விளையாட்டில் ஒன்றுபட்டது அதன்காரணமாக இளைஞர்களது புயபல பாராக்கிரமம் அனைத்து போரில் இருந்து பாதுகாக்கப்பட்டு ஆக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது.
மாணவர்களது உடல்வளத்தை சீர்செய்வதோடு அறிவு, தறன் மனப்பாங்குகளையும் மாணவர் மத்தியில் வளர்ப்பதற்கு விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன அதனடிப்படையில் இன்று இந்த மைதானத்தில் ஐந்து வளையங்களையும் மையப்படுத்தி ஒலிம்பிக் வலயங்களைச்செய்து ஒளியூட்டிய நிகழ்வானது மிகவும் சிறப்பம்சம் வாய்ந்த ஒருநிகழ்வாகும் இதனை ஆக்கிய விளையாட்டுத்துறை ஆசரியர் பாராட்டப்படவேண்டியவர்.
சீனாவிலே வயோதிபர்களை காணமுடியாது அங்கு இளைஞர்களைத்தான் காணமுடியும் காரணம் எமது நாட்டைப்பொறுத்தவரையில் 40 வயதானதும் நாமெல்லாம் கிளவர்களாகி விடுகின்றோம் ஆனால் சீனாவை பொறுத்தவரையில் 80, 90 வயதானாலும் இளைஞர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றாரகள். காலையில் அனைவரும் 15 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள் ஈடுபட்ட பின்னரே அவர்களது வேலைகளை ஆரம்பிப்பார்கள் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo1B.html

காணாமல் போன மகனை இணையத்தில் கண்டேன்! - தாய் வழக்கு தாக்கல்
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 01:19.46 PM GMT ]
ஏழு வருடங்களுக்கு முன் இனந்தெரியாத நபர்களால் அழைத்து செல்லப்பட்டு காணாமற் போயிருந்த தனது மகனின் புகைப்படம் இணையத்தளத்தில் வெளியானது என தெரிவித்து தாயொருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை மீட்டுத்தருமாறு சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 11.09.2008 அன்று மன்னார் பள்ளிமுனையை சேர்ந்த அன்ரன் சனிஸ்ரன் பிகிராடோ (வயது 24) என்பவர் தனது உறவினர் வீட்டில் இருந்தபோது இனந்தெரியாத நபர்களால் அழைத்து செல்லப்பட்டார் என்றும், அவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த இளைஞரின் தாயார் பல இடங்களிலும் முறைப்பாடு செய்து மகனைக் கண்டுபிடித்து தருமாறு கோரி வந்திருந்தார். 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி பொங்கல் தினத்தன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் குறித்த இளைஞனும் கலந்துகொண்ட படம் இணையதளத்தில் வெளியாகியது. இதைப் பார்த்த தாயார் தனது மகனை அடையாளம் கண்டு கொண்டுள்ளார். 

இதனையடுத்து அந்தத் தாய் இன்று திங்கட்கிழமை சட்டத்தரணி கே.எஸ்.ரெட்ணவேல் ஊடாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்ட மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிவான் அலெக்ஸராஜா ஆசீர்வாதம் கிறேசியன், விசாரணையை மேற் கொண்டதுடன், காணாமற்போன இளைஞன் வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பாரானால் அவர் எதற்காக கைதுசெய்யப்பட்டார், தடுத்துவைக்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன? போன்ற விவரங்களை பெற்று மன்றில் சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் இவ்வழக்கை மீண்டும் ஏப்ரல் 27ஆம் திகதி வரை விசாரணைக்காக ஒத்திவைத்தார். 
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo1D.html

Geen opmerkingen:

Een reactie posten