தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 maart 2015

நிறைவேற்று அதிகாரத்திற்கு இணையாக விருப்பு வாக்குமுறை உள்ளது: ஜனாதிபதி



ஐ.நா முன்றலில் நீதி கேட்டு திரண்ட பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்!
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 01:49.10 PM GMT ]
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் அணி திரண்டு போராட்டம் நடத்துள்ளனர்.
தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் உரிமை முழக்கத்துடன் ஒன்று கூடினர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை கட்டி இழுத்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், “ we want tamil eealam” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.
ஐ.நா முன்றலில் கூட்டம் நடைபெறும் போது பாதுகாப்பு சாதாரணமாக இருப்பது வழமை. இம்முறை வழமைக்கு மாறாக பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்ததுடன், ஜெனிவா காவல்துறையினர் அதி உச்ச பாதுகாப்பு வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஊர்வலம் ஆரம்பமான இடத்திலிருந்து கூட்டம் நடைபெறவிருந்த இடம் வரை காவல் துறையினரின் வாகனம் பாதுகாப்பு வழங்கியதுடன், வீதியின் இரு மருங்கிலும் பொலிசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
ஐ.நா பிரதான நுழைவாயிலின் முன்னால் சிவப்பு, வெள்ளை நிற கயிறுகளால் மறிக்கப்பட்டதுடன் முன்பக்கமும் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo1F.html


நிறைவேற்று அதிகாரத்திற்கு இணையாக விருப்பு வாக்குமுறை உள்ளது: ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 16 மார்ச் 2015, 02:15.21 PM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதீதமான அதிகாரங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள மக்களின் எதிர்ப்புக்கு இணையாக விருப்பு வாக்கு தேர்தல் முறை இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே தனது தனிப்பட்ட விருப்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வது தொடர்பாக இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்குள் வழங்கிய வாக்குறுதியின் படி தேர்தல் முறையில் மாற்றங்களை செய்யும் அடிப்படை பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விருப்பு வாக்கு முறைக்கு மாறான, நாட்டுக்கு பொருத்தமான மற்றும் தகுதியான தேர்தல் முறை தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளும் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்ததாகவும் தினேஷ் குணவர்தன குழுவின் அறிக்கை தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புதிய தேர்தல் முறையை உருவாக்க தேவையெனில் துணைக்குழு ஒன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பண பலத்தில் அரசியலுக்குள் பிரவேசித்து விருப்பு வாக்கு முறையை பிரயோசனப்படுத்துவதனால், அரசியல்வாதிகளுக்கு இருந்த கௌரவமும் குணதிசயமும் சீர்கெட்டு போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்களும், செயலாளர்களும் கலந்து கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
விருப்பு வாக்கு தேர்தல் முறைமை மாற்றப்படுவதனை விரும்புகின்றேன் - ஜனாதிபதி
விருப்பு வாக்கு தேர்தல் முறைமை மாற்றப்படுவதனை விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமை ஒன்றை அமைப்பது குறித்து கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதீத அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும். விருப்பு வாக்கு தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பண பலத்தினால் அரசியலுக்கு வந்து விருப்பு வாக்கு முறைமையை பயன்படுத்திக் கொள்வதனால், அரசியல்வாதியின் ஆளுமையும் பண்புசார் நலன்களும் சிதைக்கப்படுகின்றன.
புதிய தேர்தல் முறைமை ஒன்றை அமைப்பதற்கு தேவையென்றால் உப குழுவொன்றையும் அமைத்துக்கொள்ள முடியும்.
தேர்தல் ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSaSUlo1G.html

Geen opmerkingen:

Een reactie posten