தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 maart 2015

மக்கள் திருக்கேதீஸ்வர பகுதியில் மீள்குடியமர இடைக்கால தடை விதிப்பு



கொக்கட்டிச்சோலை வைத்தியசாலையின் நிலைமையை கண்டு அதிர்ந்து போனேன்: முதலமைச்சர் நசீர் அஹமட்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 09:50.40 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல வைத்தியசாலையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹஸன் அலி மற்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட நிகழ்வு நேற்று காலை 8.30 தொடக்கம் மாலை 7 மணிவரை இடம்பெற்றது.
காலை 10 மணியளவில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் உள்ள வைத்திய சாலையை பார்வையிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நசீர் அஹமட் வைத்தியசாலையில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்துகையில்,
இந்த கொக்கட்டிச்சோலை வைத்தியசாலை ஏன் இவ்வாறு சும்மா விடப்பட்டுள்ளது. பழிவாங்கல் ஏதும் இடம்பெற்றுள்ளதா..? எனக்கு சந்தேகமாக இருக்கிறது.!
இந்த காலத்தில் நோயளர்களை தரையில் தங்க வைப்பது கவலையளிக்கிறது. உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
உத்தரவிடுகிறேன். என்று குறிப்பிட்டார்.
இன்றய நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரயம்பதி, காத்தான்குடி, மட்டக்களாப்பு, கரடியனாறு, செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏராவூர், மீராகேணி ஆகிய வைத்தியசாலைகளின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எமது மாகாணசபையும் மத்திய அரசின் சுகாதார அமைச்சும் ஆயத்தமாக உள்ளது என்றும் முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmtzD.html


மக்கள் திருக்கேதீஸ்வர பகுதியில் மீள்குடியமர இடைக்கால தடை விதிப்பு
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 09:56.27 AM GMT ]
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் மக்கள் மீள்குடியேற வேண்டாம் என புதைபொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் எதிர்வரும் 25ம் திகதி வரை தற்காலிகமாக மீள்குடியேற வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதி மக்கள் அவர்களது சொந்த காணிகளை துப்பரவு செய்து குடியேற நேற்று நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த மக்களை குடியேறவேண்டாம் என பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
தமது பூர்வீக காணிகளே அவை என்று மக்கள் தெரிவித்தபோதும் குறித்த காணிகள் புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துக்குரியவை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து புதைபொருள் ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் இன்று இந்த இடத்தை பார்வையிட்டதுடன், மக்களுடன் கலந்துரையாடி தற்காலிகமாக இந்நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 25ம் திகதி தமது காணிகளில் குடியேற அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
1960ம் ஆண்டு இப்பகுதியில் குடியேறிய மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில் யுத்தம் நிறைவுற்று 2010ம் ஆண்டு அப்பகுதிக்கு மீள்குடியேற வந்தபோது தொல்பொருள் வலயம் என தெரிவித்து தம்மை மீளக்குடியமர அனுமதிக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmtzE.html

Geen opmerkingen:

Een reactie posten