[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 11:29.19 AM GMT ]
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளர் நாமல் ராஜபக்ச என்ற சட்டத்தரணி தனக்கு எதிராக செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தன்னிடம் இன்று விசாரணை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.30 அளவில் வீரவன்ஸவிடம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் மதிய உணவுக்காக விசாரணைகள் நிறுத்தப்பட்டன.
இதன் போது ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு முன்னால் குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே வீரவன்ஸ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மதிய உணவுக்காக விசாரணை நிறுத்தப்பட்ட போது வீரவன்ஸவிடம் மூன்று மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மேலும் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தும் தேவை இருப்பதாக அதிகாரிகள் கூறினர் எனவும் முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால், மதிய உணவுக்கு பின்னர் மீண்டும் விசாரணையில் கலந்து கொள்ள உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் முறைபாடுகளுக்கமைய விமலிடம் பல மணிநேர விசாரணை!
சதிகாரர்கள் தனக்கெதிராக முன்வைத்த முறைபாடுகளுக்கமைய தன்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டு பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி நாமல் ராஜபக்சவின் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கையில் ஈடுபடும் நபரே இவ்வாறு தனக்கெதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று மாத்திரம் நான் 5 மணித்தியாலங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் என முன்னாள் அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
லண்டனில் ஜனாதிபதி உட்பட தூதுக்குழுவினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:03.28 PM GMT ]
ஜனாதிபதி தங்கியிருக்கும் ஹொட்டல், பொதுநலவாய நாடுகளின் செயலகம், மல்பரோ மாளிகை, டவுனின் வீதி, பிலங்கேஷ்டர் ஹொட்டல் அருகில் இலங்கை பிரதிநிதிகள் சம்பந்தப்பட்டுள்ள இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃலேன் லண்டன் பார்க் ஹில்டன் ஹொட்டலுக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்தார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் பிரித்தானியாவுக்கான பதில் தூதுவர் சானக்க தல்பஹோவ ஆகியோர் உடனிருந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது பாரியாரும் வெஸ்மினிஸ்டர் தேவாலயத்தில் இன்று மாலை நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியரின் அழைப்புக்கு அமைய பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt0G.html
தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது இலகுவானதல்ல: லண்டனில் ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:14.06 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தானிய கிளையில் மைத்திரி ஆதரவு அணியினர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் போதும், 2009 ஆம் ஆண்டு போர் வெற்றியின் பின்னரும், 2015 ஆம் ஆண்டு பொது வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னரும் இலங்கையில் ஐக்கியப்படுத்தி மீளகட்டியெழுப்பு சந்தர்ப்பம் கிடைத்தது.
முதலில் கிடைத்த இரண்டு சந்தர்ப்பத்தை நாம் இழந்து போனோம். தற்போது இறுதியான சந்தர்ப்பமே எம்மிடம் எஞ்சியிருக்கின்றது.
பிளவுபட்டு போன நாட்டை ஒன்றுபடுத்தவும் வீழ்ந்து போயுள்ள பொருளாதாரத்தை முன்னேற்றவும் 2015 ஆம் ஆண்டு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வடக்கிலும் தெற்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் அவதூறு அரசியலை நிறுத்த வேண்டும். அவர்களின் சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் கைவிடவில்லை என்றால், இன்னும் 10 வருடங்களில் மற்றுமொரு யுத்தம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
அதேவேளை இலங்கையின் ராஜதந்திர சேவையில் ஏற்பட்டுள்ள தோல்வி மற்றும் அவமானத்தை மாற்றி, அதன் புகழையும் சிறப்பையும் மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
தூதுவர் பதவிகளும் ராஜதந்திர பதவிகளும், நண்பர்கள், உறவினர்கள்,பந்தம் பிடிப்போர், ஆடம்பரம் தேடிச் செல்வோர் மற்றும் பிள்ளைகளை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்க்கும் நபர்களுக்கும் வழங்கப்படக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt0H.html
இந்திய வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகளை நீக்குமாறு ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:30.17 PM GMT ]
யுத்தத்தினால் பாதிப்புற்று பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்து, அழுத்தங்களின் மூலம் மீளக் குடியேறிய மக்களுக்கு தமது காணிகளில் சொந்தவீடு கட்டிக்கொண்டு வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக இந்திய அரசு 50,000 வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்தது.
ஆரம்பத்தில் இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மெனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கே அந்த வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், முந்தைய அரசு தனது இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் அதனை நாடு முழுவதிலுமுள்ள பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்க இந்திய அரசை இணங்க வைத்தது.
இதன் மூலம் இலங்கை அரசு வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்ட சேதத்தைக் குறைத்துக் காட்ட முயற்சித்தது. அவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமல் அரசியல் தலையீடுகளின் மூலம் தடையேற்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளையும் அநீதிகளையும் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கக் கோரியும் எதிர்வரும் 11.03.2015 புதன் கிழமையன்று காலை 9.00 மணிக்கு மீளக்குடியமர்ந்தோர் நலன்பேணும் அமைப்பும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும் இணைந்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினூடாக மகஜர் ஒன்றைக் கையளிக்க உள்ளனர்.
தமிழர்களுக்கான நீதியை வழங்கக்கோரியும் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்கும், பாதிப்புற்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மேற்கொள்ளப்படுகின்ற இந்நிகழ்வில் வீட்டுத் திட்டம் கிடைக்காத அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறும், தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீங்கும் சாத்தியம்!
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 12:19.38 PM GMT ]
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்த ஜான் செஹ்ராடி கடந்த வாரம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றிலேயே இதனை வெளிப்படுத்தினார்.
இச்சந்திப்பில் செஹ்ராடி மேலும் தெரிவித்தாவது:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் உண்மையான செயல்பாடு உலகிற்கான ஜனநாயக வழிமுறைக்கு ஒரு சரியான உதாரணம்.
இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீங்ப்படுவதற்கான இலங்கையின் புதிய அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகள் கவனத்திற் கொண்டுள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் சிறந்த தீர்வொன்றை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளது.
இலங்கை- ஐரோப்பிய ஒன்றிய இருதரப்பு வர்த்தகம் சார்ந்த இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடைவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில், மீன்வள ஏற்றுமதி மீதான மீட்பு உட்பட இதர நடைவடிக்கைகளுக்கு இலங்கையின் அக்கறையுடனான, மாத முன்னேற்ற அறிக்கைகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வர்த்தக வரலாற்றில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் தடைகளை தாண்டி முதல் முறையாக் 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது.
மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில், இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் இங்கு கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை எங்களது 500,000 வலுவான மீன்பிடித் துறை வாழ்வாதாரங்களை பாதிப்படையச்செய்துள்ளது. அத்தடன் எங்கள் மத்தியில் இருக்கின்ற சில வர்த்தக பிரச்சினைகளை தீர்க்க முழு ஒத்துழைப்பும் தேவை.
ஐரோப்பிய ஒன்றியத்துடனாக வருடாந்த எங்கள் மொத்த இருதரப்பு உற்பத்திக்கு கடற்றொழிலானது முக்கிய பங்கினை வகிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்வள தடை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் நியமிக்கபட்டுள்ள குழுவொன்று வாராந்தம் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
அறிக்கைகளினை பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள கடல் சார்ந்த விவகாரங்கள் மற்றும் மீன்பிடித்துறை பணிய ஜெனரலுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUmt0I.html
Geen opmerkingen:
Een reactie posten