[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 05:12.45 AM GMT ]
நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த 41 அமைச்சர்களே உள்ளார்கள். 41 அமைச்சர்கள் என்ற சிறிய குழுவை பாராளுமன்றத்தில் வைத்துக்கொண்டு ரணிலுக்கு பிரதமராக செயற்பட முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோடியின் இலங்கைக்கான பயணத்திட்டம்
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 05:13.59 AM GMT ]
இவர் எதிர்வரும் 13ம் திகதி இலங்கையை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவர் செல்லும் இடங்கள் தொடர்பான பயணத்திட்டத்தை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் அநுராதபுரத்திலுள்ள மஹா போதி புனிதஸ்தலத்துக்கு செல்லவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய நிதியுதவியில் அமைக்கப்படவுள்ள யாழ்.கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதுடன், இந்திய உதவியில் கட்டப்படவுள்ள வீடுகளை அதற்குரிய பயனாளிகளுக்கு கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாருக்கும், மதவாச்சிக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை குறிப்புணர்த்தும் வகையில் அங்கிருந்து பயணத்தை மேற்கொள்ளும் முதல் புகையிரதத்திற்கு கொடியசைத்து இந்திய பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்துவதுடன், பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்விலும் பங்கேற்று உரையாடவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன் பின்னர் கடந்த 1988ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினருக்கு, கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துவார்.
இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 15ம் திகதி இந்திய பிரதமர் மீண்டும் தமது தாய் நாட்டிற்கு திரும்பி செல்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms7D.html
ரணில் விக்ரமசிங்கவின் கருத்துக்கு மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும்: ஜீ.கே.வாசன் வலியுறுத்து
[ திங்கட்கிழமை, 09 மார்ச் 2015, 05:40.36 AM GMT ]
சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை சுடுவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வி வழங்கியிருந்தார்.
அவரின் இக்கருத்து கண்டனத்திற்குரியது எனவும், இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்திய பிரதமர் தமது கண்டனத்தையும், வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும் ஜீ.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கை, இந்திய மீனவர்களுக்கிடையில் தொடர்ந்து காணப்படும் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்ற உரிமைகள் அனைத்தும் தமிழ் மக்களுக்கும் கிடைப்பதற்கு இந்திய பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜீ.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTdSUms7F.html
Geen opmerkingen:
Een reactie posten