தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 maart 2015

யாழ் முஸ்லிம்களின் வரலாற்றுப் பார்வை நூல் வெளியீடு

திஸ்ஸ மீதான விசாரணைகள் பெருமளவு நிறைவு
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 08:03.24 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீதான விசாரணைகளில் பெரும்பகுதி நிறைவு பெற்றுள்ளது.
இவர் மீதான வழக்கு இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற போது மகிந்தவிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக போலி ஆவணங்களை தயாரித்து வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பிலான விசாரணைகளின் பெரும்பகுதியே தற்போது நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன்,
விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அன்றைய தினம் நீதிமன்றத்தில் தெரியபடுத்துமாறும் கோட்டை நீதவான் திலிணகமகே தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் நிலை அதிகரிப்பு
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 08:04.09 AM GMT ]
இலங்கையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவது 5 மடங்காக அதிகரித்துள்ளதாக பாலியல் சார்ந்த நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாவது 2005 ஆம் ஆண்டை விட 2014 ஆம் ஆண்டு 5 மடங்காக அதிகரித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆயிரம் பெண்களில் இருவருக்கே எச்.ஐ.வி தொற்று காணப்பட்டது. எனினும் 2014 ஆம் ஆண்டில் இது 10 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இரண்டாயிரத்து 74 எயிட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு 229 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள். 40 வீதமானவர்கள் ஆண்கள்.
தாயின் கருவில் இருக்கும் போது எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான 71 குழந்தைகள் உள்ளனர்.
நாடு முழுவதும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 75 வீதமான பெண்கள் கொழும்பு மாவட்டத்திலேயே உள்ளனர் எனவும் மருத்துவர் சிசிர லியனகே குறிப்பிட்டுள்ளார்.

யாழ் முஸ்லிம்களின் வரலாற்றுப் பார்வை நூல் வெளியீடு
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 08:06.11 AM GMT ]
யாழ் முஸ்லிம்களின் வரலாற்றுப் பார்வை என்ற நூல் கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
யாழ் முஸ்லிம்களது கல்வி, பண்பாடு இலக்கிய பங்களிப்பு, தொழில், அரசியல், அவர்கள் சந்தித்த அனர்த்தங்கள், இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் சிதறுண்டு வாழும் நிலை, மீளவும் யாழ் செல்ல முடியுமா எனும் ஏக்கம், 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால யாழ்ப்பாணத்து முஸ்லிம்களின் நிலை போன்றவை தொடர்பாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
இன்றுள்ள யாழ் முஸ்லிம்களும் எதிர்கால சந்ததியினரும் ஏனைய சகோதர மக்களும் வரலாற்றுப் பார்வையை அறிந்து கொள்ள கூடியவாறு இந் நூல் காலத்தின் தேவை கருதி வெளிவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சிய இயக்கத்தின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ் ஏ.எம் முஹ்தார் தலைமையில் இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வின் பேராசிரியர் அனஸ் உரையாற்றுகையில்,
இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன் யாழ் மண்ணில் இருந்து விரட்டப்படும்போது, இம்மக்கள் கையில் 500 ரூபா, ஒரு சொப்பிங் பேக்கில் தனது உடுப்பையும் எடுத்துக் கொண்டு புத்தளம் பகுதிக்கு வந்தார்கள்.
ஆனால் இன்று அவர்கள் பரந்துபட்டு சர்வதேச மட்டத்தில் கல்வித்துறை, வியாபாரத்துறை, அரச துறைகளில் முன்னேறி இந்த 1500 ருபா புத்தகத்தையே இலவசமாக விநியோகிக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளார்கள் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu3C.html


Geen opmerkingen:

Een reactie posten