[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 07:46.51 AM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு திருத்தம் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் தமது கட்சி அதற்கு எதிராக கடுமையான தீர்வை எடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
19வது அரசியலமைப்பை ஸ்ரீ.சு.க ஆதரிக்கும்: சுசில்
19வது அரசலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கும் என கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறைமை உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டால் மாத்திரமே குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என சுசில் பிரேமஜயந்த நிபந்தனையொன்றையும் முன்வைத்துள்ளார்.
எமது நோக்கம் உமது உரிமையை பெற்றுக்கொள்வதே- கிழக்கில் 3 இனங்களும் பாதிக்கப்படாத வகையில் கல்வி அமைச்சரின் செயற்பாடுகள் அமையும்: யோகேஸ்வரன்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 07:59.23 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மகிளூர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரவித்தார்.
வித்தியாலய அதிபர் எஸ்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, ஞா.கிருஸ்ணபிள்ளை, எஸ்.கலையரசன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.புள்ளைநாயகம், மட்டக்களப்பு காந்தி சேகா சங்க தலைவர் அ.செல்வேந்திரன், சக பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கடந்த காலங்களில் நாம் பாரிய பின்னடைவை சந்தித்தோம். அது மாத்திரம் அல்ல வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வின் கீழ் தான் நாம் வாழ விரும்பிக் கொண்டிருக்கின்றோம்.
இருப்பினும் கிழக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை செயற்படுகின்றமை கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது தேர்தலில் நாம் போட்டியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
அத்தோடு அந்த கிழக்கு மாகாண சபையில் தொடர்ந்து கல்வியமைச்சைராக எமது இனம் சாராதவர்கள் இருந்தமையால் கிழக்கு மாகாணத்தில் எமது கல்லி தேவைகள் பல நிறைவேற்றப்படாத நிலைமைகளை நாம் அவதானித்தோம். கடந்த காலத்தில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சியாகவே இருந்தோம் அங்கிருந்து நாம் எமது சமூகத்தின் கல்வி நிலையினை உயர்த்த வேண்டும் என பல முறை குரல் கொடுத்தோம்.
ஆனால் அவை ஐந்தில் கேட்டு ஐயாயிரத்தில் கைவிட்டார்கள். அவை கவனத்தில் கொள்ளப்பட்டது மிகக்குறைவு. இந்த நிலையிலேயே ஒரு ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர் எங்கள் வரலாற்றில் பாராளுமன்றத்தில் மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தோம். அது போன்று கிழக்கு மாகாண சபையிலும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இம்முறை ஆதரித்தோம்.
ஏனெனில் எமது மக்கள் பல துறைகளில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எமது நோக்கம் எமது உரிமைகளைப் பெற்று வாழ்வதே இருப்பினும் எமது மக்கள் பல துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையினால், வாழ்வாதாரத்தையும் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் தான் பாராளுமன்ற, மாகாண சபை வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவினைக் கொடுத்தோம்.
கிழக்கு மாகாண சபையில் முன்னர் நாம் கோரியது முதலமைச்சர் பதவி அதற்காக நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் ஆனால் முதலமைச்சர் பதவி எம்மை விட்டு கைநழுவிய பின்னர் எங்களுக்கான இரண்டு அமைச்சுக்கள் தருவதாகவும் அதில் ஒன்று கல்வியமைச்சாகவும் தருவதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே நாம் கல்வியமைச்சைப் பெற்றுக் கொண்டு அதன் மூலம் எமது சமூகத்தினைக் கல்வி ரீதியில் உயர்த்தி எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சித்தோம். ஆனால் திட்டமிட்ட வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திட்டமிட்ட சதியினால் எமது கல்வியமைச்சு தடுக்கப்பட்டது.
எங்களுக்கு அமைச்சு பதவி கொடுத்தால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றதாக அறிவித்ததன் பின்னர் எமது கல்வி அமைச்சு எம் கையில் வந்திருக்கின்றது. இந்தக் கல்வியமைச்சை வைத்து நாம் எமது மாணவர்களின், பாடசாலைகளின் இயன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையில் இருக்கின்றோம்.
சிலர் கேட்கின்றார்கள் மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வேண்டாம் என்றவர்கள். ஏன் இந்த மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்காக சென்றார்கள் என்று. மத்திய அரசாங்கத்தில் நாம் 100 நாள் திட்டத்தில் தான் அமைச்சுப் பதவிக்குத்தான் அழைக்கப்பட்டோம் அதற்காக அந்த அமைச்சுப் பதவியினால் எமது மக்களுக்கு என்ன செய்ய முடியும்.
தற்போது இருக்கின்ற அமைச்சர்கள் கூட அந்த அமைச்சுக்களால் மக்களுக்கு சேவை செய்ய போதிய நிதி வசதி இல்லாமல் இருக்கின்றார்கள். எனவே 100 நாளில் ஒரு அமைச்சராக இயங்கி எமது மக்களை நாம் ஏமாற்ற விரும்பவில்லை.
எனவே எதிர்காலத்தில் எமக்கு மத்திய அரசில் அமைச்சுப் பதவி எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் எமது அடிப்படை உரிமை விடயத்தில் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொண்டுதான் அதற்கான சாதகமான நிலை ஏற்படும் பட்சத்தில் தான் நாம் எதிர்காலத்தில் அது பற்றி சிந்திக்கக்கூடிய நிலை ஏற்படும். ஆனாலும் மாகாண சபை என்பது எமக்கு உரியது.
வடக்கில் ஒரு மாகாண சபை முற்று முழுதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் அபிவிருத்தி நிலையை அடையும் போது கிழக்கு மாகாணத்தில் நாம் எதிர்க்கட்சியில் இருந்து எமது மக்களின் தொழில் வாய்ப்புகள் உட்பட சகல அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒரு நிலை இருந்தமையால் எமது மக்களின் மனங்களில் வேதனையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தவே இந்த மாகாண சபை ஆட்சியில் இணைந்தோம். இந்த ஆட்சியில் நாம் கல்வி, கலாசாரம், விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கால்நடை, உணவு பாதுகாப்பு போன்ற பல விடயங்கள் சார்ந்த அமைச்சுக்களைப் பெற்றிருக்கின்றோம்.
இதன் மூலம் இயன்ற வரை சேவையாற்ற இருக்கின்றோம். சிலர் நினைக்கலாம் வாபஸ் பெற்று வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து முதலமைச்சர் பதவியைப் பெற்றிருக்கலாமே என்று. ஆனால் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தால் பல காலம் ஒதுக்கப்பட்டவர்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 12 பேர் சேர்ந்தே நாங்கள் முதலமைச்சராவதை தடுத்து முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டனர். எங்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படுவதை எதிர்த்தே அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றனர். பின்னர் எங்களை ஏமாற்றவே எங்கள் பெரும் தலைவர் சம்பந்தன் ஐயாவிடம் சென்று ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளனர்.
இந்த மாகாண சபையிலும் நாம் திட்டமிட்டு அவர்களால் ஒதுக்கப்பட்டோம். எனவே தான் அவர்களுடன் இணைந்து நாம் முதலைமைச்சர் எடுத்து அந்த அரசாங்கத்தினை அமைத்திருந்தால் அவர்கள் இடையில் கூட எமக்கு துரோகம் செய்து வெளியேறியிருப்பார்கள். எனவே அவர்களின் கபட நாடகத்தில் சிக்கி விடக் கூடாது என்பதற்காகவே நாம் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்கவில்லை.
கிழக்கில் 3 இனங்களும் பாதிக்கப்படாத வகையில் கல்வி அமைச்சரின் செயற்பாடுகள் அமையும்: யோகேஸ்வரன்
கடந்த காலங்களில் கல்வியமைச்சினைப் பொருத்த மட்டில் பல பாரபட்சங்கள் இடம்பெற்றன. அந்தவகையில் பல விதத்தில் நாம் ஒதுக்கப்பட்டோம் பாதிக்கப்பட்டோம். நாம் உரிமைக்காக போராடுகின்ற இனம் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மூன்று இனங்களினதும் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் எமது அமைச்சரின் செயற்பாடுகள் அமையும்.
எம்மைப் போல் மற்றவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை கல்வியமைச்சின் அமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எஸ்.தண்டாயுதபாணியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்தில் முழுமையாக ஆட்சியைக் கைப்பற்றி ஆளும் நிலையில் நாங்கள் கிழக்கு மாகாண சபையில் ஏனைய தேசிய இனங்களோடு இணைந்து நாம் ஒரு தேசிய இனம் சிறுபான்மை இனம் அல்ல. எனவே எங்களோடு இருக்கின்ற சகோதர தேசிய இனத்தோடு இணைந்து இன்று கிழக்கு மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தி தற்போது அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
கடந்த காலங்களில் கல்வியமைச்சைப் பொருத்தமட்டில் பல பாரபட்சங்கள் இடம்பெற்றன பல உயர் அதிகாரிகள் கூட அரசியல்வாதிகளாக மாறியிருந்த நிலை காணப்பட்டது. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை உத்தரவின்றி பாடசாலைக்கு அழைக்கக் கூடாது என்ற உத்தரவும் கல்வியமைச்சில் இருந்து சென்றிருந்தது.
ஆனால் தற்போது இறைவனின் சித்தத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பாடசாலைக்கு அழைக்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்த அதே கல்வியமைச்சின் அமைச்சராக இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி பெற்றிருப்பது இறைவன் தர்மத்தின் வழி நீதியை நிலை நாட்டியிருக்கின்றார்.
அதேவேளை எமது கல்வியமைச்சர் மிகவும் நிதானமானவரும், நேர்மையானவரும் உள்ளொன்று வைத்து வெளியொன்று காட்டுகின்ற தன்மையற்றவரும் ஆவார்.அவர் இந்தப் பதவியில் கூட பெரும்பாலும் ஆசை கொண்டிருக்கவில்லை.
அவருக்கு எமது தலைவர் தான் இந்தப் பதவியைக் கொடுத்தார். ஏனெனில் இருக்கின்றவர்களில் இந்தக் கல்வியமைச்சில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற கல்வியமைச்சின் முன்னாள் உதவிச் செயலாளரே இவர். எனவே அவர்தான் பொருத்தமானவர் என்ற வகையில் தான் எங்களது தலைவரும், நாமும் அவரைத் தெரிவு செய்துள்ளோம்.
நாம் உரிமைக்காக போராடுகின்ற இனம் என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மூன்று இனங்கள் இருக்கின்றன. அவற்றின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படாத வகையில் தான் அவரது நடவடிக்கைகள் இருக்கும். மற்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போது அவர் தயங்காது குரல் கொடுப்பார்.
ஏனெனில் நாம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள். எம்மைப் போல் மற்றவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம். எனவே நாம் சகல இன மக்களையும் இணைத்து அவர்களின் கல்விசார் அடிப்படைத் தேவைகளை அறிந்து நியாயமாக, நீதியாக தர்மத்தின் வழி அவரது கல்விச் சேவையை ஆற்ற வேண்டும் என வேண்டுகின்றேன் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2J.html
Geen opmerkingen:
Een reactie posten