[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 08:31.02 AM GMT ]
நாளை மறுதினம் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு நிபுணர் கமார் ஆகா (Qamar Agha) குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு இன்று காலை வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவைச் சுற்றிவளைக்கும் நோக்கிலான சீனாவின் முயற்சி ஒருபுறமிருக்க தேசிய பாதுகாப்பில் இந்தியா மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையை இராணுவத் தளமாக பயன்படுத்த எண்ணியுள்ள சீனா, அங்கு துறைமுகம், அணைகள், உள்ளிட்ட பலவற்றை நிர்மாணிக்க திட்டமிட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனினும் இலங்கையில் தற்போதைய அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எப்படியிருப்பினும் இந்தியாவிற்கு எதிராக இலங்கையை பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கதம் உறுதியளித்திருப்பதாக இந்திய பாதுகாப்பு நிபுணர் கமார் ஆகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி மீட்பு
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 08:52.58 AM GMT ]
காத்தான்குடியில் சுகாதார திணைக்களம் நிர்மாணிக்கவுள்ள கட்டிடமொன்றிற்காக அத்திவாரம் தோண்டிக் கொண்டிருந்தபோதே குறித்த துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் பாரிய நீர்க்குழாய் ஒன்றினுள் போட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
300 அரசியல் கைதிகள் சிறைகளில்.. சாடுகின்றார் சுமந்திரன்! மறுக்கின்றார் சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 09:08.10 AM GMT ]
போருக்கு பின்னர் அரசாங்கம் 11 ஆயிரத்து 900 விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கியது. எனினும் புலிகளுக்கு சோற்று பொதி மற்றும் தண்ணீர் கொடுத்து உதவியவர்கள் வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களும் அரசியல் கைதிகள் என சுமந்திரன் கூறியுள்ளார்.
எனினும் இலங்கையில் அரசியல் கைதிகள் எவருமில்லை என சொலிஸ்டர் ஜெனரல் சுஹத கம்லத் தெரிவிக்கின்றார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அல்லது கைதிகளை எவரேனும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்துவார்களாயின் அது முற்றிலும் தவறானது எனவும் கம்லத் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தில் சுஹத கம்லத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கள் குறித்து பதிலளிக்கும் போதே கம்லத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு எதிர்வரும் 16 ஆம் திகதி கூடுகிறது. இந்த குழுவை அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட குழு என சமூகமயப்படுத்துவது தவறானது. சட்டரீதியாக கைது செய்யப்பட்டு தடுத்து வைத்துள்ளவர்கள், வழக்கு விசாரணைகள் தாமதமாகியுள்ளவர்கள் மற்றும் வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் கைதிகள் குறித்து ஆராய்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளும்.
கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பதா, வழக்கு தாக்கல் செய்வதா அல்லது விடுதலை செய்வதா என்பது குறித்து அந்த குழு தீர்மானிக்கும் எனவும் சுஹத கம்லத் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu3I.html
Geen opmerkingen:
Een reactie posten