தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 4 maart 2015

100 அடி பள்ளத்தில் வான் பாய்ந்து விபத்து!- 14 ரே் படுகாயம்



நல்ல செய்தி வர வேண்டும்! - கச்சதீவில் நெகிழ வைத்த வேண்டுதல்!!
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 10:47.21 AM GMT ]
கச்சதீவு அந்தோனியார் கோயில் திருவிழா இந்த ஆண்டு களைகட்டியது. இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பேரும் இலங்கையில் இருந்து 2 ஆயிரம் பேரும் கலந்துகொண்டனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு நடக்கும் திருவிழா என்பதால் கூட்டம் அதிகமானது.
நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் தான் கச்சதீவு திருவிழாவுக்கு வருவது வழக்கம்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தலைமன்னார், கோட்டைமன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் வந்திருந்தனர்.
எப்போதும் கெடுபிடியாக நடந்து கொள்ளும் இலங்கை கடற்படையினரின் அணுகுமுறையில் இந்த முறை மாற்றம் தெரிந்தது. அவர்கள், இலங்கைத் தமிழ் மக்களுடன் இணக்கமாக நடந்துகொண்டனர்.
ஆனால், இந்தியாவில் இருந்து சென்றவர்களின் நிலைதான் பரிதாபம். இங்கிருந்து சென்றவர்களை காவல்துறை, வருவாய்த் துறை, புலனாய்வுப் பிரிவுகள், சுங்கத் துறை என பலருடைய சோதனைகளைக் கடந்து படகுகளில் மக்களை ஏற்றினர்.
இந்திய கடல் பகுதியைக் கடக்கும் முன் 6 இடங்களில் படகுகளை சோதனை செய்தனர். ஒவ்வொரு கடல் மைல் தூரத்துக்கும் இடையே படகுகளை நிறுத்தி சோதனை என்ற பெயரில் அலைக்கழித்தனர்.
கச்சதீவில் இரு நாட்டு மக்களும் உற்சாகத்துடன் சந்தித்துக் கொண்டனர். அவர்களுக்கு இடையே பண்டமாற்று நடைபெற்றது. இலங்கைத் தமிழர்கள் சோப்பு வகைகள், எண்ணெய் போன்ற பொருட்களையும் இந்தியத் தமிழர்கள் கடலை மிட்டாய், பாசி போன்ற பொருட்களையும் கொண்டு வந்தனர்.
அவற்றை அவர்கள் பண்டமாற்றம் செய்து கொண்டனர். இலங்கை ரூபாயை மாற்றுவதற்கு அங்கு தற்காலிகமாக வங்கிக்கிளை ஒன்றையும் திறந்து இருந்தனர். ஆனால், இந்திய தரப்பில் அப்படியொரு ஏற்பாடு இல்லை.
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சதீவு, 1974-ம் ஆண்டு இலங்கை அரசுக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஆனாலும், கச்சதீவுப் பகுதிக்கு செல்லவும் அங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்கவும் இந்திய மீனவர்கள் மற்றும் பக்தர்களுக்கு உரிமை வழங்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் நடந்த இனக்கலவரத்தைக் காரணம் காட்டி, இந்த உரிமைகளை இலங்கை அரசு முடக்கி வைத்திருந்தது. 2009-ல் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாகக் கச்சதீவுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.


திருவிழாவுக்கு வந்திருந்த சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு அமல்ராஜிடம் பேசினோம். 'இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த தாக்குதல்கள் முடிவுக்கு வந்தபின், கடந்த 5 ஆண்டுகளாக கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நடந்து வருகிறது.
இந்த 5 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத மகிழ்ச்சியை இந்த முறை இலங்கையில் இருந்து வந்திருந்த தமிழ் மக்களிடையே காண முடிந்தது. 30 ஆண்டுகளாக தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களினால் தங்கள் உறவுகளை இழந்து, உடைமைகளைப் பறிகொடுத்து, உடல் உறுப்புகளை இழந்து முடமாகிப் போய்க் கிடந்தது தமிழ்ச் சமூகம்.
இன்று வரை பல ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்று தெரியாத நிலை நீடிக்கிறது. இத்தகைய வேதனையான ஓர் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்த கொடுங்கோல் அரசை தங்களது ஜனநாயக உரிமையின் மூலம் வீழ்த்திய மகிழ்ச்சியை, இப்போது கச்சதீவு திருவிழாவுக்கு வந்திருந்த இலங்கைத் தமிழ் மக்களிடம் காண முடிந்தது.
காணாமல் போயிருக்கும் தங்கள் உறவுகளைப் பற்றிய நல்ல செய்திகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதை, திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிலுவைப்பாட்டின்போது நடந்த பிரார்த்தனைகளில் அந்த மக்கள் வேண்டுதல்களாக வைத்தனர்.
அது மட்டுமில்லாமல் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற திருவிழா திருப்பலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுமே இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிகளுக்கு மத்தியில்தான் நடந்தது. இந்த மேடையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதைக்கூட இலங்கைக் கடற்படையினரே தீர்மானிக்கும் நிலை இருந்து வந்தது.
 அதுபோன்ற எந்த நெருக்கடிகளும் இந்த ஆண்டு இல்லை. எனவே, வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கூடுதலாக கச்சதீவுக்கு வந்துள்ளனர். இலங்கை அரசின் நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் புதிய நம்பிக்கையைத் தரும் வேளையில் இந்திய அரசும் இந்தத் திருவிழாவுக்கான கெடுபிடிகளைத் தளர்த்த முன்வர வேண்டும்.
இந்திய இலங்கைத் தமிழர்கள் தங்கள் உறவுகளை சந்திக்கும், புதுப்பிக்கும் தளமாக கச்சதீவு விளங்கி வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் இனி வரும் காலங்களில் கச்சதீவு திருவிழாவை தமிழர்களின் கலாசார திருவிழாவாக நடத்த வேண்டும்.
மேலும், இருநாடுகளின் பக்தர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையிலும், குறிப்பாக இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ள தமிழர்களையும் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
அதன் மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து கிடக்கும் தங்கள் உறவுகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும் என்று சொன்னார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்தார், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் சகாதேவன். 'ராஜபக்‌ச அரசு தங்களுக்கு எதிராக செயல்பட்ட கருணாவுக்கும், குமரன் பத்மநாபனுக்கும் மன்னிப்பு வழங்கி தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைத்தது.
அதேவேளையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் இன்றும் இலங்கைச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை விடுவிப்பதற்கு என்ன வழி என்று தெரியாத நிலை உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விதவைகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கணவனை இழந்த பல பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனால் யுத்தத்தால் ஏற்பட்ட காயங்களுடனும் மனக்காயங்களுடனும் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் காயங்களுக்கு மருந்து போடும் விதமாக, யுத்தத்தின் போது இறந்து போன மக்களின் நினைவு தினத்தைக் கொண்டாட அனுமதிப்பதுடன் அவர்கள் நினைவாக நினைவிடம் ஒன்றும் அமைக்க அனுமதிக்க வேண்டும். புலம்பெயர்ந்து போனவர்கள் குறித்த சர்வே முழுமையாக எடுக்கப்படவில்லை.
யாழ் முகாம்களில் 6 ஆயிரம் குடும்பங்கள் இன்றும் அகதிகளாக தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு முழுமையான வசதிகளோ, தொழில் வாய்ப்புகளோ ஏற்படுத்தித் தரப்படவில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது சரியாக இருக்காது. அதேவேளையில் தமிழர்கள் இலங்கை இராணுவத்திடம் இழந்த காணிகளைத் திரும்பப் பெறவும், தமிழர்களின் விகிதாசாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவும் இது பயன்படும்.
இலங்கை அதிபரின் இந்திய வருகையின் போது எங்கள் பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால், எங்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட பிரதமர் மோடி பேசவில்லை. இது, எங்களுக்கு வருத்தத்தைத் தருகிறது. இலங்கையில் பயணம் மேற்கொள்ளும் போதாவது எங்களுக்காக அவர் பேசவேண்டும்.
அப்போதுதான், நாங்கள் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும்'' என்றார்.
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை  பிரதமர் மோடி கவனிக்க வேண்டும்!
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp2J.html

மகிந்தவை மீண்டும் கொண்டு வருவோம்! ரணிலை விரட்டுவோம்!– ரோஷான் ரணசிங்க
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 11:25.04 AM GMT ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணிலை விரட்டிவிட்டு மகிந்தவை பிரதமராக்குவோம் என பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 100 நாள் வேலை திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாகவும் ரோஷான் ரணசிங்க நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த கனவாக இருப்பது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து பிரதமராக செயற்படுவதே ஆனால் ஒரு காலமும் அவரது கனவு நனவாக இடமளிக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு மகிந்தவை மீண்டும் கொண்டு வருவோம். கொண்டு வருவது மட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசிர்வாதத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


100 அடி பள்ளத்தில் வான் பாய்ந்து விபத்து!- 14 ரே் படுகாயம்
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 11:32.08 AM GMT ]
மஸ்கெலியா பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பயணித்த 14 பேர் படுங்காயமடைந்த நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பிரதான வீதியில் சிவனொளிபாதமலையிலிருந்து ஹற்றன் நோக்கி குறித்த வான் பயணித்த போது மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வான் சாரதி தூக்க கலக்கத்தினால் இவ்வாகனத்தை அவருக்கு கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேரிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி பகுதியிலிருந்து நேற்று சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்று மீண்டும் இன்று வீடு திரும்பும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதில் சில பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDTYSUmp3D.html

Geen opmerkingen:

Een reactie posten