தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 maart 2015

சுமந்திரனின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம் ?

ஒரு காலத்தில் தங்கத் தட்டில் சாப்பிட்டவர் தற்போது கட்டாந் தரையில் !

[ Mar 19, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 20055 ]
அரசனும் காலநிலை சரியில்லை என்றால் ஆண்டி ஆவான் என்பார்கள். ராஜபக்ஷர்களுக்கு இது நன்றாகவே பொருந்துகிறது. பணம் இருக்கிறது ஆனால் எந்த நாயும் மதிப்பதே இல்லை என்ற நிலைதான். தமது இருப்புக்காக அவர்கள் , எதனையாவது செய்து காட்டவேண்டிய நிலையில் உள்ளார்கள். நேற்று (18) மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பதவிவிலகுமாறு வலியுறுத்தி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்பாட்டம் செய்தார்கள். அங்கே கட்டாந்தரையில் உட்கார்ந்து நமால் ராஜபக்ஷ கூக்குரல் இட்டுக்கொண்டு இருந்தார்.
ஏதோ பிச்சைக்காரர்கள் போல அவர்கள் அமர்ந்திருந்தார்கள் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2628.html

மோடியுடன் கைகுலுக்கிய மாணவன் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது !

[ Mar 19, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 22125 ]
யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கைகுலுக்கிய பல்கலைக்கழக மாணவன் ஒருவர் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை கையளிக்க கீரிமலைக்குச் சென்றிருந்தார்.வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வுக்குப் பின்னர், இளைஞர் ஒருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கியிருந்தார்.
நரேந்திர மோடி அங்கிருந்து சென்ற பின்னர், இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரைக் கைது செய்து, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட இளைஞர் ரஜரட்ட பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் என்றும், தேசிய இளைஞர் சேவைகள் குழுவின் செனட் உறுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது. சிறிலங்கா காவல்துறையினரால் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த இளைஞரை வரும் 23ம் நாள் மீண்டும் முன்னிலையாகுமாறு கூறி, நீதிவான், லெனின்குமார் பிணையில் விடுவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2626.html

சுமந்திரனின் அடுத்த திருட்டுத்தனம் அம்பலம் ?

[ Mar 19, 2015 06:22:53 PM | வாசித்தோர் : 8095 ]
சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின் வாசல் வழியாக உள்ளே நுளைந்து MP யான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தவுடன் கூட்டம் ஒன்றைப் போட்டுள்ளார் என அதிர்வு இணயம் அறிகிறது. அதாவது முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு , மற்றும் தமிழ் துரோகி டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியையும் ஒன்றாக இணைக்க சுமந்திரன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார். இதற்கு ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கியுள்ளார் என்றும் அறியப்படுகிறது. குறித்த இந்த சந்திப்பை ரவூப் ஹக்கீம் அவர்களே ஏற்பாடு செய்திருந்தார். டக்ளஸ் தேவானந்தா வருவதாக இருந்தால் இதில் நாம் கலந்துகொள்ளத் தேவையில்லை என்று சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால் வழமைபோல அவர்கள் கருத்து எதனையும் கணக்கில் எடுக்காது , தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பதுபோல இவர் நடந்துகொண்டுள்ளார். மகிந்தர் போடும் எலும்புத்துண்டை நக்கிப் பிழைப்பு நடத்திய டக்ளஸ் தற்போது அரசியல் அனாதையாகியுள்ளார். இவருக்கு என்று ஒரு மேடை கிடையாது. ஒரு அந்தஸ்த்து இல்லை. அதனை மீண்டும் பெற அவர் தற்போது முஸ்லீம் காங்கிரசோடு டீல் பேசி வருகிறார். இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக ஏன் சுமந்திரன் கலந்துகொள்ளவேண்டும் ? இன்றுவரை மகிந்தவின் தீவிர ஆதரவாளராக உள்ள டக்ளஸ் கலந்துகொள்ளும் சந்திப்பில் சுமந்திரனுக்கு என்ன வேலை இருக்கிறது என்று தெரியவில்லை.
அதுபோக சந்திப்பு மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் படலம் முடிவடைந்த பின்னர் சுமந்திரன் டக்ளசோடு பேசியும் உள்ளார். அந்த இடத்தில் கமரா எடுக்க தடைவிதிக்கப்பட்டும் உள்ளது. மேலும் அங்கே நின்ற நபர் ஒருவர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) தனது கையடக்க தொலைபேசியில் புகப்படம் ஒன்றை எடுக்க முற்பட்டவேளை கூட அதனை சுமந்திரன் தடுத்துள்ளார் என்றும் மேலும் அதிர்வு இணையம் அறிகிறது. சுமந்திரன் தான் தோன்றித்தனமாக இப்படியான காரியங்களில் ஈடுபட, சம்பந்தரே இடம் கொடுத்து வருகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை முதலில் மாறவேண்டும் என்பதே அனைத்து தமிழர்களின் கருத்தாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2632.html

Geen opmerkingen:

Een reactie posten