வடக்கு மாகாண அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் 180 நாள் வேலையை பூர்த்தி செய்தவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வடமாகாண சுகாதார அமைச்சிள் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
விசேட அதிதிகளாக பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மாகாண பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகளும் புனர்வாழ்வும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கலாநிதி.ப.சத்தியலிங்கம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார, அமைச்சர் த.குருகுலராசா, சுகாதார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வரவேற்புரையினை மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் ஆற்றினார்.
இந்த நிகழ்வில் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர்,
வடக்கு மாகாணத்தின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் தங்கள் நிரந்தர நியமனத்திற்காக காத்திருந்த பணியாளர்க்கு நிரந்தர நியமனங்களை வழங்கி வைப்பதில் எமது வடமாகாண சபை மகிழ்ச்சி அடைகின்றது.
போராலும் பல்வேறு இடர்களாலும் பாதிக்கப்பட்ட உங்களுக்கு இந்த நிரந்தர நியமனங்கள் ஆறுதல் தரும் என்று நினைக்கின்றேன்.
இந்த நியமனங்களின் மூலம் நீங்கள் நிறைந்த அளவு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென விரும்புகின்றோம்.
மக்களுக்கு இடையூறாக அல்லாமல் நேர்மையுடன் மக்களை நீங்கள் கவனிக்க வேண்டும். நாம் எம் மக்களை அரசியல் பேதங்களுடன் பார்க்கவில்லை.
நீங்கள் யாவரும் எமது மக்கள் என்ற அடிப்படையில்தான் நாங்கள் பணி செய்ய விரும்புகின்றோம்.
எனவே ஊழலற்ற, பேதமற்ற ஆட்சியை, மக்கள் பணியை வழங்குவதற்கு நீங்கள் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq2G.html
Geen opmerkingen:
Een reactie posten