[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 05:11.50 PM GMT ]
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நாவின் அறிக்கை ஒத்தி வைக்கபட்டாலும் தமிழர்களுக்காகன பரிகார நீதிக்கான செயற்பாட்டில் தமிழர் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் தீவிரமாகவுள்ளனர்.
தமிழீழத் தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் உட்பட புலம்பெயர் தேசங்களை மையமாக கொண்டு இயங்குகின்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரத்தானிய தமிழர் பேரவை, தமிழர் மனித உரிமைகள் மையம் - பிரான்சு மற்றும் பல தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் இச்செயற்பாட்டில் உள்ளனர்.
பிரென்சு மொழி பேசுகின்ற ஆபிரிக்க நாடுகளை மையப்படுத்தி பிரான்சு தலைமையகமாக கொண்டு 23 நாடுகளில் இயங்குகின்ற CNRJ அமைப்பின் தலைவர் Federic Paprpani அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான வளஅறிஞர் குழுவில் இணைந்து பங்கெடுத்துள்ளார்.
பிரென்சு மொழி பேசுகின்ற ஆபிரிக்க நாடுகளை மையப்படுத்தி பிரான்சு தலைமையகமாக கொண்டு 23 நாடுகளில் இயங்குகின்ற CNRJ அமைப்பின் தலைவர் Federic Paprpani அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான வளஅறிஞர் குழுவில் இணைந்து பங்கெடுத்துள்ளார்.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையப்படுத்திய கையேடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மூத்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கரண் பார்கர் அம்மையார் அவர்கள் முதற்கையேட்டினைப் பெற்றுக் கொள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான ஒருங்கிணைப்பாளர் முருகையா சுகிந்தன் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.
இதேவேளை தமிழர்களுக்கான நீதியினை வலியுறுத்தி தமிழர் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்திருந்த உப மாநாட்டில், சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றத்திடம் நிறுத்துமாறு கோரும் கையெழுத்துப் போராட்ட மனு, நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி சுதன்ராஜ் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq3B.html
இலங்கையில் இன்று முதல் தேனீருக்கும் அப்பத்துக்கும் நிலையான விலை
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 03:04.48 PM GMT ]
இதன்படி பால் தேனீர் 25ரூபாவாகவும், தேனீர் 10 ரூபாவாகவும் அப்பம் 10 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டது.
இதனையடுத்தே நியாய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவும் பாகிஸ்தானும் காஸ்மீர் பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும்: சரத் பொன்சேகா
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 03:48.23 PM GMT ]
இந்திய ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், இன்று இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
பரஸ்பர தப்பபிப்பிராயத்தையும் சந்தேகங்களையும் கைவிட்டு இரண்டு நாடுகளும் காஸ்மீர் பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும். இதன்மூலம் சர்வதேச விடயங்களை இரண்டு நாடுகளுக்கும் கவனிக்க முடியும்.
இதன்மூலம் இரண்டு நாடுகளும் அயலவர் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும் என்று பொன்சேகா கேட்டுக்கொண்டார்.
தீவிரவாதிகள் பல்வேறு பெயர்களில் செயற்பட்டாலும் உலகை தமது கட்டுக்குள் கொண்டு வரவே அவர்கள் முயற்சிக்கின்றனர்.
எனவே ஒவ்வொருவரும் தமக்கிடையிலான பிரச்சினைகளை அவசரமாக முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்று பொன்சேகா கோரினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி குறிப்பிட்ட பொன்சேகா, முஸ்லிம் நாடுகள் இந்த இயக்கத்தின் வலையில் வீழ்ந்து விடாது என்று நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை சரத் பொன்சேகா எதிர்வரும் 22ஆம் திகதியன்று இலங்கை வரலாற்றில் முதல் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்படவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq2H.html
தேசிய கீதத்தை தமிழில் பாடுவது பிரஜைகளின் உரிமை: அரசாங்கம் - தமிழில் பாட முடியாது: உதய கம்மன்பில, பொதுபல சேனா எதிர்ப்பு
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 02:18.27 PM GMT ]
தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட வேண்டாம் என்று கூறும் எந்த சட்டமும் நாட்டில் அமுலில் இருக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபையில் தமிழில் தேசிய கீதத்தை பாட இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் ஒன்றை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தை தமிழிலும் பாட முடியும். அதற்கு ஜனாதிபதியின் அனுமதி அவசியமில்லை.
கடந்த அரசாங்கத்தில் இது சம்பந்தமாக பிரச்சினை இருந்த போதிலும் அமைச்சர் என்ற வகையில், வடக்கு மாகாணத்தில் நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் தேசிய கீதத்தை தமிழில் பாட இடமளித்தேன்.
முந்தைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் தேசிய கீதத்தை சிங்களத்தில் பாட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதில் இராணுவத்தினர் தலையிட்டனர். எனினும் நான் அதற்கு இடமளிக்காது அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயற்பட்டேன்.
வடக்கில் நடைபெறும் அப்படியான நிகழ்வுகளின் போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடினால், எங்களில் 5 பேருக்கு புரியும். அதில் என்ன கூறப்படுகிறது என்பது மக்கள் அனைவருக்கும் புரியாது.
தமிழில் பாடினால், அனைவருக்கும் புரியும். அந்த மக்கள் தமிழில் நமது தேசிய கீதத்தை பாடுவது குறித்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டாமா?.
தமிழில் தேசிய கீதம் பாடுவது பற்றி ஜனாதிபதி எந்த புதிய சட்டத்தை பிறப்பிக்கவில்லை.
புதிதாக அனுமதி வழங்க தேவையில்லை. இருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி ஒருவர் புதிதாக அனுமதி வழங்க தேவையில்லை.
தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSdSUlq2D.html
Geen opmerkingen:
Een reactie posten