தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 maart 2015

மகிந்தவை மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்த துரோகம்: இளங்கோவன்



தமிழர் பிரச்சினைக்கு காலம் தாழ்த்தாது மைத்திரி அரசு தீர்வு வழங்க வேண்டும்: த.கலையரசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 08:11.00 AM GMT ]
இந்த நாட்டில் நடைபெற்ற போர்ச்சூழல் காரணமாக கிழக்கு மாகாணம் பல அழிவுகளை சந்தித்துள்ளது அந்தவகையில், இங்கு இன்னும் பல பாடசாலைகள் வளப்பற்றாக்குறையுடன் இயங்கமுடியாத நிலையில் காணப்படுவதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் விசனம் தெரிவிக்கின்றார்.
சம்மாந்துரை விவேகானந்தா வித்தியாலயத்தில் ரன்யோ தனியார் வைத்திய நிறுவனத்தினூடாக பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது நேற்று பாடசாலை அதிபர் பி.பேரானந்தம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், சம்மாந்துரை வலயக்கல்வி பணிப்பாளர் நஜிம், ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி, மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஒரு பாடசாலையின் கல்வி வளர்ச்சியென்பது அந்தக்கிராமத்தில் உள்ள இளைஞர்கள் முதற்கொண்டு பெற்றோர்கள், நலன்விரும்பிகளினது அயராத உழைப்பின் மூலமே உச்சநிலையடையும், இதற்கு சிறந்த உதாரணமாக இப்பாடசாலையை குறிப்பிடலாம்.
1990ஆம் ஆண்டிற்கு பிற்பாடு இப்பாடசாலையானது படிப்படியாக வளர்ச்சி கண்டு பெரும் உச்சநிலையை அடைந்து பல்கலைக்கழகம் செல்லக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் கண்டுவந்திருக்கின்றது இதற்கு இங்குள்ள அதிபரினதும், ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் அயராத முயற்சியே காரணமாகும்.
ஒரு பாடசாலையின் வளர்ச்சியானது ஒற்றுமை, ஒழுக்கம், விட்டுக்கொடுப்பு, ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, சகிப்புத்தன்மை என்பனவற்றை கருத்தில் கொண்டு தனது கல்விச்செயற்பாட்டை கொண்டு நடத்துகின்றபோதுதான் கல்விக்குரிய பெறுபேறு மிக உன்னத இடத்தினை அடையும்.
தற்போதைய அரசியல் சூழலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சானது கூட்டமைப்பின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் தண்டாயுதபாணிக்கே கிடைத்திருக்கின்றது. இந்தப்பொறுப்பானது மிகவும் காத்திரமான பொறுப்பாகவே எம்மக்களிடையே பார்க்கப்படுகின்றது. முன்னர் கிழக்கு மாகாணத்தின் கல்விப்பணிப்பாளராக இருந்த ஒருவருக்கு இப்பொறுப்பு கிடைத்திருப்பது ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களுக்கும் கிடைத்த ஒரு பாரிய வெற்றியாகும்.
முன்னைய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் கல்வித்திணைக்களத்தில் நியமனங்களில் கூட பல மோசடிகள் நடைபெற்றிருக்கின்றது. இனிவரும் காலங்களில் அவ்வாரான மோசடிகளை தவிர்த்து சிறந்த ஒரு நல்லாட்சியை கொண்டு நடத்துவார் என்பதில் எமக்கு எந்தச்சந்தேகமும் இல்லை.
எமது தேசிய அரசியல் என்பது நீதிக்கும், நியாயத்திற்கும் அத்தோடு எங்களுடைய மக்களின் இருப்பு என்ற விடயத்தில் இருந்து எள்ளளவேனும் பின்னிற்கப்போவதில்லை. எமது இனம் பட்ட அனைத்து துன்பதுயரங்களுக்கும் தீர்வை பெற்று இணைந்த வடகிழக்கில் சகல உரிமைகளுடனும் கூடிய ஆட்சியதிகாரத்தினையே எமது கூட்டமைப்பு பன்னெடும் காலமாக கேட்டு நிற்கின்றது.
அந்தத்தீர்வினை எந்த காலதாமதமும் காட்டாது இந்த நாட்டிலே புதிதாக ஆட்சியதிகாரத்தினை கைப்பற்றியிருக்கும் மைத்திரி அரசு செய்து தர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx0H.html

அவுஸ்திரேலியாவில் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் நடைபயணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 08:14.24 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணம் தாயகமக்களின் வலிகளை சுமந்தவாறு மெல்பேணின் இரு இடங்களிலிருந்து ஆரம்பமாகியது.
இன்று காலை 9.30 மணிக்கு கிளேன்வலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்தும் ஆரம்பமான நடைபயணம் மாலை 3 மணிக்கு மெல்பேண் மத்தியை சென்றடையும். அங்கு நீதிக்கான பேரணி நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
சிறிலங்கா பேரினவாத அடக்குமுறைகளுக்குள் தொடர்ச்சியாக அவல வாழ்வை எதிர்நோக்கும் எம்முறவுகளின் வாழ்வில் எந்தமாற்றமும் இன்னும் ஏற்படவில்லை. பறிபோன தமிழர் நிலமும் காணாமல் போன உறவுகளின் கண்ணீரும் சிறையில் வாடும் எம் சொந்தங்களின் ஏக்கங்களும் இன்னும் ஒரு மாற்றத்தையும் பெற்றுக்கொடுக்கவில்லை.
ஐநா விசாரணையாளர்களை அனுமதிக்கபோவதில்லை என்றும் சனல் 4 வெளியிட்ட நோ பயர் சோன் என்ற ஆவணப்படத்தையும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் இலண்டனில் இருந்து மைத்திரிபாலா அறிவிக்கின்றார்.
ஆண்டுக்கணக்கில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்குமாறு கோரினால் விபரங்களை திரட்டுகின்றோம் எனச்சொல்கின்றது சிறிலங்கா அரசு. மாற்றங்களை கொண்டுவரும் என மக்கள் நம்பி வாக்களித்தும் மீண்டும் ஏமாற்றமே வாழ்வாகிப்போகின்றது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச்சபையாவது உருப்படியான அறிக்கையை இம்மாதம் சமர்ப்பிக்கும் அதன்பிறகாவது ஏதாவது மாற்றங்கள் வரும் எனக்காத்திருந்த மக்களை இன்னும் காத்திருக்க சொல்கின்றனர்.
அன்பான உறவுகளே,
சர்வதேச கவனம் திரும்பியுள்ள சூழலில் அதனை சரிவர பயன்படுத்தி எமது உறவுகளுக்கான சுதந்திரமான தீர்வினை பெற்றுக்கொள்ளாமல் போனால் எமது மக்களின் குரல்களுக்கான நியாயத்தை எப்போதுமே பெற்றுக்கொள்ளமுடியாமல் போய்விடும்.
இன்று தாயகம் எங்கும் உறவுகளைத்தேடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். நெருக்கடியான சூழலிலும் தங்கள் உறவுகளைத்தேடி அவர்கள் எழுப்பும் குரல்களோடு எமது கரங்களையும இறுகப்பற்றிக்கொண்டு தமிழின அழிப்புக்கு நீதிகோருவோம்.
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் நீதிக்கான பேரணி பற்றிய விபரம்
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் இரண்டு இடங்களில் ஆரம்பமாகும் நீதிக்கான நடைபயணம் பிற்பகல் 3 மணியளவில் மெல்பேண் மத்தியில் உள்ள ளுவயவந டுiடிசயசல முன்பாக நடைபெறும் நீதிக்கான பேரணியுடன் இணைந்துகொள்ளும்.
நீதிக்கான பேரணியில் மனிதவுரிமைவாதியும் பிரபல சட்டவாளருமான றொபேட் ஸ்ராறி மற்றும் தமிழ் அகதிகளுக்கான செயற்பாட்டாளர் றெவர் கிரான்ட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
உலகம் பரந்துவாழும் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுநின்று எம்முறவுகளுக்கான நீதிக்கான குரலில் இணைந்துகொள்வோம்.
தமிழர் நீதிக்கான பேரணி மையத்தினால் நடைபெறும் இந்நிகழ்வு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஆதரவுடன் நடைபெறுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx0I.html

மோடியின் இலங்கை விஜயம்! ஒரு வரலாற்றுப் பதிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 09:27.18 AM GMT ]
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்ட அந்தப் பயணத் தின் போது தான், இந்திய, இலங்கை சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
அதுமட்டுமன்றி, ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையின் போது, கடற்படைச் சிப்பாய் ஒருவர் அவர் மீது நடத்திய தாக்குதலும், வரலாற்றில் முக்கிய பதிவாகியது.
அதற்குப் பின்னர், நேற்று முன்தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில், இந்தியப் பிரதமர் எவரும் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987ம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்துக்குப் பின்னர், கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து, இந்தி யப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அரசுமுறைப் பயணம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கி, நேற்றிரவு இங்கிருந்து புறப்பட்டுச் சென்றது வரையான அவரது இரண்டு நாள் இலங்கைப் பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கும், அதையடுத்து, 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கைக்கும் இடையில், நீண்டகாலமாகவே நெருக்கமான உறவும் வரலாற்றுத் தொடர்புகளும் இருந்து வந்துள்ளன.
மிக அருகருகாக, சிறியதொரு நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கும், இந்தியப் பெரு நிலப்பரப்பும், இலங்கைச் சிறுதீவும், சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலத்தில், அரசியல், பொருளாதார, வர்த்தக, கலாசார உறவுகளால் எப்போதும், பிணைந்தே இருந்து வந்துள்ளன.
இலங்கையில் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள், இந்தியாவிலும், இந்தியாவில் நிகழும் மாற்றங்கள் இலங்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில், நெருக்கம் காணப்பட்டிருக்கிறது.
இந்தியாவும் இலங்கையும் பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த ஆறு தசாப்த காலத்தில், இந்தியத் தலைவர்களின் இலங்கைப் பயணங்கள் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக விளங்கியிருக்கின்றன.
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே, இந்தியத் தலைவர்களின் இலங்கைப் பயணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதில், இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு மேற்கொண்ட பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவரது முதலும், கடைசியுமான பயணம் அது. அப்போது அவர் மூன்று வாரங்கள் இலங்கையில் தங்கியிருந்தார்.
அவர் இலங்கையில் இருந்த போது, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், நுவரெலிய, காலி, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, ஹற்றன், பருத்தித்துறை, சிலாபம் ஆகிய இடங்களுக்குச் சென்று 31 கூட்டங்களில் உரையாற்றியிருந்தார்.
இந்தியாவிலும், இலங்கையிலும், சுதந்திரத்துக்கான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவரது அந்தப் பயணம் அமைந்திருந்தது. அதையடுத்து, 1931ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு, இலங்கைக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.
மனைவி கமலா, மகள் இந்திராவுடன் அவர் நுவரெலியாவில், விடுமுறையைக் கழிப்பதற்காக அப்போது வந்திருந்தார். அப்போது, நேரு பிரதமராகவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியப் பிரதமர் பதவிகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், அதுவே முதல் இலங்கைப் பயணமாக அமைந்தது. எனினும், அது ஒரு அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணம் அல்ல.
இந்தியாவும், இலங்கையும் சுதந்திரம் பெற்ற பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல்முறையாக இந்தியப் பிரதமர் ஒருவரின் அரசுமுறை இலங்கைப் பயணம் இடம்பெற்றது 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆகும்.
இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு மேற்கொண்ட அந்தப் பயணத்தின் போது, பல்வேறு இடங்களில் உரையாற்றியிருந்தார். பின்னர்,
1957 ஆம் ஆண்டு மே மாதம், புத்தபெருமான் அவதரித்த 2500 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி. இலங்கையில் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, மீண்டும் இலங்கை வந்திருந்தார். அப்போது அவருடன் கூடவே, இந்திராகாந்தியும் இலங்கை வந்தார்.
அநுராதபுரத்தில் நடந்த வெசாக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர்கள் சிறப்பு ரயிலில் அங்கு பயணம் செய்தனர். அநுராதபுரத்தில் புத்த ஜெயந்தியை முன்னிட்டு அமைக்கப்பட்ட புதிய நகரமான ஜெயந்தி மாவத்தையையும் அப்போது இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்திருந்தார்.
மீண்டும், 1962ம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இலங்கைக்கு மற்றொரு அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தின் போது, இலங்கை பாராளுமன்றத்தில் அவர் 1962 ம் ஆண்டு, ஒக்ரோபர் 23ம் திகதி உரையாற்றினார். அதுவே இலங்கை பாராளுமன்றத்தில் இந்தியத் தலைவர் ஒருவர் நிகழ்த்திய முதலாவது உரையாகும்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பின்னர், இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற இந்திராகாந்தி, இலங்கைக்கு இரண்டு முறை அரசுமுறைப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். 1967ம் ஆண்டு செப்ரெம்பர் 18ம் திகதி தொடக்கம், 21ம் திகதி வரையான, காலப் பகுதியில், இந்திரா காந்தியின் முதலாவது அரசு முறைப் பயணம் இடம்பெற்றிருந்தது.
இரண்டாவது முறையாக, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை இலங்கையில் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, 1973 ஏப்ரல் 28ம் திகதி, இலங்கை பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் உரை இடம்பெற்றது.
இந்திராகாந்தியை அடுத்து, இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற மொராய்ஜி தேசாய் 1979ம் ஆண்டில் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அப்போது, 1979 பெப்ரவரி, 06ம் திகதி அவர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அதற்குப் பின்னர், 1987ம் ஆண்டு தான், இந்தியப் பிரதமர் ஒருவரின், இலங்கைக்கான அரசுமுறைப் பயணம் இடம்பெற்றது.
இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி 1987ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்ட அந்தப் பயணத்தின் போது, தான், இந்திய, - இலங் கை சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
அதுமட்டுமன்றி,  ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையின் போது, கடற்படைச் சிப் பாய் ஒருவர் அவர் மீது நடத்திய தாக்குதலும், வரலாற்றில் முக்கிய பதிவாகியது.
அதற்குப் பின்னர், நேற்று முன்தினம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் காலடி எடுத்து வைக்கும் வரையில், இந்தியப் பிரதமர் எவரும் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.
ராஜீவ் காந்திக்குப் பின்னர், வி.பி.சிங், சந்திரசேகர், தேவகௌடா, பி.வி.நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் போன் றவர்கள் இந்தியப் பிரதமராகப் பதவியில் இருந்த போதும், அவர்கள் இலங்கைக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டிருக்கவில்லை.
சார்க் மாநாட்டுக்காக இந்தியப் பிரதமர்கள் இலங்கைக்கு வந்திருந்த போதும், அது இருதரப்பு அரசுமுறைப் பயணமாக இருக்கவில்லை. அயல்நாடாக இருந்த போதிலும், இந்தியப் பிரதமர்களால் 28 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த இலங்கைக்கான அரசுமுறைப் பயணத்தை, மீண்டும் ஆரம்பித்து வைத்திருக்கிறார் நரேந்திர மோடி.
அதுமட்டுமன்றி, 1979 ஆம் ஆண்டுக்கு, மொராய்ஜி தேசாய் இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைக்குப் பின்னர், நரேந்திர மோடியின் உரை கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் பல்வேறு வரலாற்று அத்தியாயங்களை எழுதி வைத்திருக்கிறது. இலங்கையில் அதிக இடங்களுக்கு சென்ற இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றையும் அவர் எழுதியிருக்கிறார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்த ஒரு இந்தியத் தலைவர் என்ற பெருமையை மகாத்மா காந்தி ஒருவர் மட்டும் தான், வைத்திருந்தார். அவர் அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும், ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, இலங்கைத் தீவின் பல பகுதிகளையும் சுற்றி வந்திருந்தார்.
அதற்குப் பின்னர், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள், அரசுமுறைப் பயணத்தின் போதும், தனிப்பட்ட பணயத்தின் போதும், அனுராதபுரம் நுவரெலியா, கண்டி போன்ற இடங்களுக்குச் சென்றிருந்தாலும், வடக்கிற்குச் சென்றதில்லை.
எனினும், 1959 ம் ஆண்டு ஜுன் 16ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த, இந்திய ஜனாதிபதியாக இருந்த டாக்டர் இராஜேந்திர பிரசாத், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவருக்குப் பின்னர் மோடி தான், யாழ்ப்பாணத்துக்குச் சென்ற முதல் இந்தியத் தலைவராவார். வடக்கு மாகாணத்தின், யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களுக்கு பயணம் மேற்கொண்ட ஒரே இந்தியப் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடியையே சாரும்.
ராஜீவ் காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்திய - இலங்கை உறவுகளிலும் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இந்தக் காலகட்டம் தான் இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த காலமாகும்.
போரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களித்த இந்தியா, போருக்குப் பிந்திய இலங்கையில், பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் மூலம், இலங்கையுடன் இந்தியா தனது நெருக்கத்தை மட்டும் வலுப்படுத்திக் கொள்ளவில்லை.
அதற்கும் அப்பால், இலங்கை மீதான சீனாவின் செல்வாக்கையும் உடைப்பதிலும் வெற்றி கண்டிருக்கிறது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், சீனாவின் செல்வாக்கு வெகுவாக அதிகரித்திருந்தது.
அதன் விளைவாக, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு திடீரென அதிகரித்ததுடன், இந்தியா எதையும் செய்ய முடியாததொரு நெருக்கடிக்குள்ளும் சிக்கியிருந்தது. ஆனால், ஜனவரி 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையும், இந்த நிலையை முற்றாகவே மாற்றியமைத்திருக்கிறது.
இரு தரப்பு உறவுகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது நரேந்திர மோடியின் இந்தப் பயணம். இது இருநாடுகளுக்குமே நன்மையளிப்பதாக இருந்தாலும், இந்தியா அடையப்போகும் அனுகூலங்கள் தான் அதிகமாக இருக்கும்.
அதனைக் காலப்போக்கில் அனைவரும் உணரமுடியும்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx1D.html



மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோரி கையெழுத்து வேட்டை- இனந்தெரியாதோர் கல்வீச்சுத் தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 09:38.00 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன ஜக்கிய முன்னணி ஆகியவற்றின் பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை நியமிக்குமாறு கோரி பத்து இலட்சம் கையொப்பம் இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தில் இன்று ஹற்றன் பஸ் தரிப்பிடத்தில் ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது சிலர் கையொப்பம் இட்டு தங்களின் ஆதரவுகளை வெளிப்படுத்தினர். இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
மகிந்தவிற்கு ஆதரவாக கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வில் கல்வீச்சு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்களை பிரதம வேட்பாளராக தேர்தலில் நியமிக்குமாறு கோரி ஹற்றன் பஸ் தரிப்பிடத்தில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மக்கள் கையொப்பம் இடும் போது இனந்தெரியாதவா்களால் கையொப்பம் இடும் இடத்திற்கு கல் எறியப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இன்று ஜக்கிய தேசிய கட்சிக்கு உறுப்பினர்கள் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட அக்கட்சியின் ஆதரவாளா்களே இக்கல்வீச்சில் ஈடுப்பட்டிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினா் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.

மகிந்தவை மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்த துரோகம்: இளங்கோவன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 10:43.27 AM GMT ]
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச, இந்தியாவின் எதிரி, சீனாவின் நண்பர். இலங்கையில் வாழ்கிற தமிழர்களுக்கு எதிராக கொடிய அரசியலை நடத்திய மகிந்த ராஜபக்சவை, நரேந்திர மோடி சந்தித்தது தமிழர்களுக்கு செய்கிற துரோகம். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.
1987ல் இந்திய–இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொழும்பு சென்றார். அப்போது அதிபர் ஜெயவர்தனவோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே தமிழ் தாயகப் பகுதி உருவாக்கப்பட்டது.
அப்படி உருவான பகுதியின் இடைக்கால நிர்வாக கவுன்சிலின் முதலமைச்சராக வரதராஜ பெருமாள் தேர்வு செய்யப்பட்டார். சிங்கள மொழிக்கு இணையாக தமிழும் ஆட்சிமொழி என்ற தகுதி பெற்றது.
ஒப்பந்தப்படி, முதலில் ஒப்புக்காக ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப் புலிகள் பொருந்தாத காரணங்களைக் கூறி மீண்டும் ஆயுதமேந்தி இந்திய அமைதி காக்கும் படை மீது போர் தொடுத்தனர். அதன் விளைவாக ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் தடைப்பட்டது.
ஆனால், இந்திய பிரதமர் வலியுறுத்தலின் பேரில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதே ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்ட உரிமைகளை உறுதி செய்யும் வகையில் செய்யப்பட்டதுதான் 13–வது அரசமைப்புச் சட்டத் திருத்தம். அதுதான் இன்றைய இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்புக் கவசம்.
அதன் அடிப்படையில் தான் அதிகாரப் பகிர்வு நடைபெற வேண்டும். ஆனால், அது நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அன்றைய பிரதமர் ராஜபக்ச அதை செயலுக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், அதை அசட்டையுடன் புறந்தள்ளியது அவரது பேரினவாத ஆணவப் போக்கையே வெளிப்படுத்தியது.
இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஆணவ அரசியல் நடத்திய ராஜபக்சேவும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதற்கு பல கருத்தொற்றுமைகள் உள்ளன. பெரும்பான்மையினரை, சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டி ஆதரவை பெருக்குவதுதான் இவர்களது செயல்முறை திட்டம். இவர் மதத்தின் பேரால் செய்கிறார். அவர் இனத்தின் பேரால் செய்கிறார். இவர்கள் இருவரும் நேற்று உதவியாளர்கள் துணையில்லாமல் தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள்.
அதுவும் இந்த சந்திப்பு இந்திய அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது என செய்திகள் கூறுகின்றன.
இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு முன்னால், ராஜபக்ச அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தமது தேர்தல் தோல்விக்கு ‘‘ரா’’ இந்திய உளவுத்துறைதான் முழுக்காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அமைப்பு சதி செய்து, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றுள்ளது’’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜபக்ச கூறிய குற்றச்சாட்டு மூலம் இந்தியாவின் பாதுகாப்பையே கண்காணித்து உறுதி செய்கிற உளவுத்துறையையே களங்கப்படுத்தி, இழிவுபடுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து எவரும் கடுமையான முறையில் மறுக்கவோ, ஆட்சேபனையோ தெரிவிக்க வில்லை.
ராஜபக்சவுக்கு எதிர்த்துக் கருத்துக் கூறுவதில் இந்திய அரசுக்கு என்ன தயக்கம். நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் நெருக்கமான நண்பர்கள் என்பது தான் காரணமா? இதை விட இந்தியாவிற்கு தலைகுனிவும், அவமானமும் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
125 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பையே, அண்டையில் உள்ள 2 கோடி மக்கள் வாழ்கிற இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச கொச்சைப்படுத்திப் பேச எங்கேயிருந்து வந்தது துணிச்சல்? இதைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவரோடு தனிமையில் கூடிக் குலாவுவது ஏன்? அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே, ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக் கூறியவர் தான் நரேந்திர மோடி.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சவை தோற்கடித்தது அங்கே வாழ்கிற 25 லட்சம் தமிழ் பேசுகிற மக்களின் வாக்குகள் தான். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உடமைகளை, உரிமைகளை பறித்த ராஜபக்சவை, நரேந்திர மோடி ஆதரிப்பது ஏன்? அரவணைப்பது ஏன்?
முன்னாள் அதிபர் ராஜபக்ச, இந்தியாவின் எதிரி, சீனாவின் நண்பர். இலங்கையில் வாழ்கிற தமிழர்களின் ஒட்டு மொத்த எதிரி. அங்கே வாழ்கிற தமிழர்களுக்கு எதிராக கொடிய அரசியலை நடத்தி இலங்கை மக்களால் தேர்தலில் வீழ்த்தப்பட்டு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ராஜபக்சேவை, நரேந்திர மோடி தாங்கி பிடிப்பதன் ரகசியம் என்ன? இதைவிட தமிழர்களுக்கு செய்கிற துரோகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx1G.html


Geen opmerkingen:

Een reactie posten