தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 maart 2015

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நீதிக்கான நடைப்பயணமும் பேரணியும்!

ஒரு வருடத்தின் பின் மகளைச் சந்தித்தார் ஜெயக்குமாரி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 11:08.01 AM GMT ]
பிணையில் விடுதலையான ஜெயக்குமாரி பாலேந்திரன் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த தனது மகளை நேற்று சந்தித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரி கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், அவர் கைது செய்யப்படும் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் விடுதலைத் தினத்தில் அவரிடம் வழங்கப்படவில்லை.
இதனால், உடனடியாக கிளிநொச்சிக்கு வருகைதர அவரால் முடியவில்லை. இந்தநிலையில், தனது ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை அவரது ஆவணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட ஜெயக்குமாரி உடனடியாக கிளிநொச்சிக்கு வருகை தந்து தனது மகளைச் சந்தித்தார்.
அண்மையில் விபூசிகாவின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு ஜெயக்குமாரியை அனுமதிக்குமாறு கோரிய போதும் பிணை மறுக்கப்பட்டிருந்தது. அத்துடன் தனது தாயாரை விடுவிக்குமாறு சிறுமி விபூசிகா இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பௌத்த பிக்குவை அவமதித்த ஈரானிய பிரஜை கைது!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 11:22.26 AM GMT ]
ஊவா மாகாணம், வெல்லவாயவில் உமாஓயா அபிவிருத்தித்திட்டத்தில் பணியாற்றி வரும் ஈரானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரக்கிஹித்தகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதி மீது நேற்று வாசனை திரவம் ஒன்றை விசிரினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பௌத்த பிக்குவை அவமதித்த ஈரானியரை கைது செய்யுமாறு கோரி, உள்ளூர் தொழிலாளர்களும்,கிராம மக்களும் விகாரைக்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று பேருடன் வந்த ஈரானிய பிரஜை விகாராதிபதி முகத்தில் வாசனை திரவத்தை விசுரச் செய்துள்ளார். விகாராதிபதி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொரு ஈரானியர் சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அனைத்து வகையிலும் நீதி வேண்டும்! ஜெனீவாவுக்கு அணி திரளுங்கள் - சத்தியராஜ்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 11:51.41 AM GMT ]
தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்த புலம்பெயர் தமிழ் உறவுகள் அணிதிரண்டு வலிமை சேர்க்க வேண்டும்.
போர்குற்ற விசாரணைகளைத் தள்ளிப்போடுவது என்னவென்றால் தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது '' ஆறின கஞ்சி பழங்கஞ்சி '' கஞ்சி பழையதாகி விடும். அந்த உத்தி தான் இது. விசாரணையைத் தள்ளிப் போட்டு வரும்போது நீதி கேட்கும் வேகம் அடங்கி விடும் என்று நினைக்கிறார்கள் என தமிழீழ ஆதரவாளரும் நடிகருமான சத்தியராஜ் அவர்கள் கூறியுள்ளார்.
உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் - ஓவியர் சந்தானம்
தமிழர்களுக்கான பரிகார நீதியினை வலியுறுத்துவோம்! ஐ.நா முன்றலில் அணிதிரள தமிழீழ அரசாங்கம் அறைகூவல்!
தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் எமக்கான பரிகாரநீதியினை அனைத்துலகத்திடம் வேண்டுவதோடு, தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியில் நீதீமன்றத்திடம் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி,ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் அணிதிரளுமாறு என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
மார்ச்16ம் நாள் திங்கட்கிழமை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் இடம்பெறவுள்ள நீதிக்கான ஒன்றுகூடலுக்கு வலுவூட்டி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுசன விவகாரங்கள் அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஆட்சியொன்றின் ஊடாக, இலங்கைத்தீவில் இயல்புநிலை வந்துவிட்டதான தோற்றப்பாட்டடை ஏற்படுத்த, புலம்பெயர் தமிழர்களின் வருகையினை எடுத்துக்காட்ட முனையும் சிறிலங்காவின் வியூகத்தினை முறியடிக்க சிறிலங்காவைப் புறக்கணிப்போம் என்ற உறுதிப்பாட்டையும் ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில்எடுத்துக் கொள்ள அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை ஆறு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரசாங்கம் புதிய ஆட்சி என்ற ஒப்பனையுடன் தனது குற்றங்களில் இருந்து தப்பிக்கின்ற வியூகங்களை வகுத்து செயற்பட சிறிலங்கா அரசு முனைகின்றது.
தமது நலன்கள் சார்ந்து சிறிலங்கா அரசாங்கத்தை தம்முன்னே பணியவைக்கும் நோக்கில், அன்று சிறிலங்கா மீது யுத்தக்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களைக் கொடுத்த பலமிக்க பல அரசுகளும், சிறிலங்காவில் புதிய அரசாங்கம் புதிய ஆட்சி என மந்திரச்சொற்களாக உலக அரங்குகளில் உச்சரிக்கின்றனர்.
இத்தகைய போக்குகளை நாம் அனைவரும் விழிப்புடன் எதிர்கொண்டு, சகலமட்டங்களிலும் எமது செயற்பாடுகளை கூட்டாகவும் , தனித்தும் தீவிரப்படுத்த வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.
இச்சூழலில், வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தொடர்பிலான தீர்மானம், யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்னெடுகப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், காணாமல் போனவர்கள் தொடர்பிலான சிறிலங்கா ஜானதிபதி ஆணைக்குழுவினை காணாமல்போனவர்களின் உறவுகள் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவு மற்றும் சிவில் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் ஆகியன சிறிலங்காவின் உண்மையான முகத்தினை அம்பலப்படுத்தி வருகின்றன.
தமிழீழத் தாயகத்தின் இச்செயல்முனைப்புக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தேசங்களில் வாழும் நாமும் எமது பங்கினை ஆற்ற வேண்டிய தருணமிது.
முக்கியமாக, தாயகம் செல்லுகின்ற புலம்பெயர் தமிழர்களின் வருகையினை புள்ளிவிபரங்களுடன் அனைத்துலகத்தின் முன் அடுக்கி, இலங்கைத்தீவில் இயல்புநிலை தோன்றிவிட்டதென்ற தோற்றப் பாட்டையும், ஒற்றையாட்சி ஒன்றுபட்ட இலங்கை, இலங்கையர்கள் என தனது சிங்கள பௌத்த மேலாண்மையின் கீழ் தமிழர்களை அடக்கி ஓடுக்குவதனை நியாயப்படுத்தவும் சிறிலங்கா அரச இயந்திரம் முனைகின்றது.
சிங்களத்தின் இச்சூழ்ச்சிகளை விழிப்புடன் நாம் எதிர்கொள்வதோடு, "சிறிலங்காவைப் புறக்கணிப்போம் " என்ற உறுதிப்பாட்டை ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலில் நாம் உறுதியெடுத்துக் கொள்வோம்.
தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலகத்திடம் வலியுறுத்துவதோடு, தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியில் நீதீமன்றத்திடம் பாரப்படுத்துமாறும் ஐ.நாவை கோருவோம்.
மனித உயிர்களை விட தங்களது நலன்களை பெரிதென மதிக்கும் இந்த சர்வதேச ஒழுங்கின் அறமுறை அற்ற அணுகுமுறைகள், நமது மக்கள் கொல்லப்படுவதனை அனுமதித்தே நின்றன.
நமது மக்கள் கொல்லப்படுவதை அனுமதித்த அதே உலக சமுதாயத்திடம் நமது மக்களுக்கான நீதியனை கோருவதற்கு நமக்கு எல்லாவித தார்மீக உரிமைகளும் உள்ளன.
இந்தத் தார்மீக உரிமையின் அடிப்படையில், நீதியின் அடிப்படையில், நியாயத்தின் அடிப்படையில், தர்மத்தின் அடிப்படையில் எமது கோரிக்கைகளை உரக்க ஒலிப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx2F.html


அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நீதிக்கான நடைப்பயணமும் பேரணியும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015, 11:52.31 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணியும் அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும் இப்பேரணி நடைபெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளன்வேவலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தில் 30 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டனர். மாலை 3 மணிக்கு மெல்பேணின் மத்தியிலுள்ள State Library என்ற இடத்தையடைந்த நடைபயணம் அங்கு நடைபெற்ற நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டனர்.
ஏழு வயதான சிறுமி ஒருவரும் தனது தாயாருடன் இணைந்து 25 கிலோமீற்றர்கள் தூரத்தை ஐந்து மணித்தியாலத்தில் நடந்து முடித்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டு மனிதவுரிமைவாதியும் பிரபல சட்டவாளருமான றொப் ஸ்ராறி தமிழ் அகதிகள் அவையைச் சேர்ந்த றெவர் கிராண்ட் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சூ வோல்ற்றன் உட்பட பலர் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச்செயற்பாட்டாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
மாலை நான்கு மணிக்கு நிகழ்வு சிறப்புற நிறைவுபெற்றது
http://www.tamilwin.com/show-RUmtyDSZSUmx2G.html

Geen opmerkingen:

Een reactie posten