[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:01.55 PM GMT ]
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய நிறைவேற்று சபை ஒன்றுகூடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருடன் தானும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எவன்கார்ட், ரக்னா லங்கா ஆயுதக் களஞ்சியம் மற்றும் பரிவர்த்தனை குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர், அவரது சகோதரர் மற்றும் உறவினர்களை பாதுகாக்கும் நோக்கில் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனாலேயே தான் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், அடுத்த வாரம் தொடர்பில் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu5G.html
13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்கும் பொறுப்பு இந்தியாவிடமே உள்ளது: சீ.வி.விக்னேஸ்வரன்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 12:15.07 PM GMT ]
இதேவேளை குறித்த திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் எதாவது செய்யப்படுமாயின், அதனை இந்திய அரசாங்கத்தின் உதவியுடனேயே செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுவரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களுக்கு பாதகமான கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை. ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் போனோர் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ் மக்களை புண்படுத்துவதாய் அமைந்துள்ளன.
இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விஜயத்தின் போது அவரை சந்தித்து, தமிழ் மக்களின் உண்மையான நிலவரங்களை தெளிவுபடுத்தவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu5H.html
Geen opmerkingen:
Een reactie posten