தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

ராஜபக்ஷேக்களின் தமிழர்களை அழிக்கும் திட்டம்: நாமலும் பங்குதாரர்

ராஜபக்சேக்கள் தமிழர்களை திட்டமிட்டு அழித்தார்கள், திட்டமிட்டு நாட்டை விட்டு வெளியேற்றினார்கள், முடக்கினார்கள் என்பதே தமிழர்களின் வரலாறெங்கும் அழிக்க முடியாத வடுவாக இருக்க போகின்றது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்தமகனான நாமல் ராஜபக்ச தனது எதிர்கால அரசியல் வாழ்க்கையை மனதில் கொண்டு அநேக தமிழ் அரசியல் மாமேதைகளுடன் நட்புறவாடியுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள் வட்டாரத்தில் மின்னல் ரங்கா, மட்டகளப்பு அருண்தம்பிமுத்து, யாழ்ப்பாணம் அங்கஜன் இராமநாதன், பதுளை செந்தில் தொண்டமான் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இவர்கள் நாமலுக்காக உயிரையும் கொடுக்க துணிந்த உற்ற நண்பர்கள் என்பதுடன் நாமலை மயக்கி தமது காரியங்களை சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள்.
அவர் ஒரு குறித்த கால கட்டத்தில் கிளிநொச்சியில் முக்கிய அரசியல் தலைவராக திகழ்ந்துள்ளார்.
குறித்த பகுதியில் முன்னாள் ஜனாதிபதிக்கோ, அவரது பாரியாருக்கோ எவ்வித தொடர்புகளும் காணப்படவில்லை எனினும் நாமல் ஆங்கு சுதந்திரமாக உலாவி வந்தமை எப்படி சாத்தியம் என அரசியல் வல்லுனர்கள் கேள்வி தொடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு திடீரென படையெடுத்த இளைஞர், யுவதிகள் பலர் கவனமாக சென்றதுடன், சிலர் நடுக்கடலிலேயே மாண்டுபோயினர்.
இவ்வாறான சட்டவிரோத பயணங்களுக்கு இலங்கை, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் முகவர்கள் காணப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வா சாவா எனும் கேள்விக்கு அர்த்தம் தெரியாமல் சட்டவிரோத கடல் பயணங்களை மேற்கொண்டனர்.
சில சந்தர்ப்பங்களில் கடற்படையினரே ஒரு தொகை பணத்தை வாங்கி கொண்டு தொடர்ந்தும் பயணிக்க அனுமதித்ததுடன், படகுகளையும் மடக்கி பிடித்து அவர்கள் கடமை தவறாத பணியாளர்கள் என்பதை காட்டிகொண்டார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளன.
நூறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பயணிக்க கூடிய படகுகளை கொள்வனவு செய்து ஒருவருக்கு 10 இலட்சம் முதல் 6 இலட்சம் வரை பணத்தை வாங்கி அப்பாவி தமிழ் மக்களை நடுக்கடலிலேயே கொன்று குவித்தனர்.
இது தாயகத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையாகவும், வருமானம் தர கூடிய மனித கடத்தல் தொழிலாகவும் செய்தவர்களின் பின்னணியில் நாமல் செயற்பட்டுள்ளார் என தமிழ் மக்களிடையே சந்தேகங்கள் வெளிப்பட்டுள்ளன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்று கொள்ளமுடியுமாக இருக்கலாம் எனவும், குறைந்த செலவில் வெளிநாடொன்றில் தஞ்சம் கோர இது நல்ல சந்தர்ப்பம் எனவும் தெரிவித்தே குறித்த மனித கடத்தல் நாடகம் அரங்கேறியுள்ளது.
இவ்வாறு பயணம் மேற்கொண்டவர்களில் கடலிலேயே பாலியானவர்கள் எத்தனை பேர் என இதுவரை கணக்கிடவில்லை எனவும், படகு பயணம் மேற்கொண்டவர்கள் கடலில் சந்தித்த அவலங்கள் எத்தகையவை என்பன இதவரை தெிரைக்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்.
இவற்றுக்கெல்லாம் காரணம் ராஜபக்சேக்களின் திட்டமிட்ட சதியே என தமிழ் மக்கள் மத்தியில் ஆணித்தரமாக பதியப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr2E.html

Geen opmerkingen:

Een reactie posten