தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 maart 2015

ஜெனீவாவில் சிவாஜிலிங்கம் அதிரடி: லீ ஸ்காட் எம்.பி மூலமாக பரப்புரை !

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28ஆவது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள் , ராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என்று பலருடனும் தொடர்ச்சியான சந்திப்புக்களை நடாத்தி வருகின்றது. கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல் செயலவை ( United States Tamil Political Action Council), ஆகிய அமைப்புக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவே இந்த சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறது.
தாயகத்தில் இருந்து ஐ .நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு மகாலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள் திரு Lee Scott அவர்களை சந்தித்து தாயகத்தின் தற்போதைய நிலைமைகளை எடுத்துக் கூறியதுடன் 2009 இறுதி யுத்தத்தில் கைதானவர்களின் கதி என்ன? போன்ற பல விடையங்களையும் கலந்து ஆலோசித்தார். கடந்த 67 வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடைபெற்றுக் கொண்டிருப்பது இன அழிப்பே என்ற தீர்மானம் வடமாகாண சபையால் கொண்டு வரப்பட்டது அத் தீர்மானத்தின் ஒரு பிரதியை திரு Lee Scott அவர்களிடம் கையளித்தார் சிவாஜிலிங்கம். 
http://www.athirvu.com/newsdetail/2644.html

Geen opmerkingen:

Een reactie posten