[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 08:34.21 AM GMT ]
உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்வைத்து நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சு பதவிக்கே தகுதியற்றவர் என ஐ.நா சபையின் இலங்கைக்கான முன்னாள் பிரதிநிதி தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமாரா குணநாயகம் 1980ம் ஆண்டு இறுதி பகுதிகளில் புலிகளின் ஆதரவு அமைப்பொன்றுடன் இணைந்து செயற்பட்டதுடன், புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களையும் முன்வைத்தார் என வெளிவிவகார அமைச்சர் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காலப்பகுதியில் மங்கள சமரவீர மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து முன்னெடுத்த அன்னையர்கள் அமைப்புடன் அனுசரணையாக செயற்பட்டு வந்தேன் எனவும்,
குறித்த அமைப்பினால் மாத்தறையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டேன் எனவும் தமாரா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இச்சந்தர்ப்பங்களின் போதும் தான் புலிகள் சார்பு அமைப்புக்களுடன் இணைந்து எதுவித தொடர்புகளையும் பேணாத போதும், குறித்த அமைப்புக்களினால் எனக்கெதிரான மிரட்டல் கடிதங்களும், விமர்சனங்களுமே எழுந்தன என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் குறித்த ஒப்பந்தம் தொடர்புடைய உண்மையை திரைமறைவிற்குள் கொண்டு செல்லும் நோக்கிலேயே என் மீது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை முன்வைக்கிறார் எனவும்,
ஒரு வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் எனவும் தமாரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை தன்மீது சுமத்திய அமைச்சருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து வருவதாக தமாரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr2G.html
19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை?
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 09:13.55 AM GMT ]
19ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனினும் இதனை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதனால் 19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற கால தாமதம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் திருத்தங்களுடனேயே 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.
சுதந்திரக் கட்சியின் இணக்கப்பாடு இன்றி சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் கிடையாத போதிலும் சுதந்திரக் கட்சியின் எந்தவிதமான பரிந்துரைகளும் இதில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள நடவடிக்கை
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, அந்த திருத்தம் சட்டம் தொடர்பில் இறுதி இணக்கத்திற்கு வரமுடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால், வெளியிடப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் திருத்தப்பட உள்ளது.
வெளியிடப்பட்டுள்ள திருத்தச் சட்டத்திற்கு ஜாதிக ஹெல உறுமய கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், ஜே.வி.பி திருத்தங்களை முன்வைக்க தீர்மானித்துள்ளது.
எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளதாலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாலும் எதிர்பார்த்தப்படி 19வது திருத்தச்சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டது எனவும் அதற்கு மேலும் காலம் செல்லும் எனவும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
19வது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் கூடி ஆராய்ந்துள்ளனர்.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் 30(1) இல் ஜனாதிபதி, நாட்டின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் முப்படைகளில் சேனாதிபதியாகவும் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அதில் அரசாங்கத்தின் தலைவர் என வார்த்தை நீக்கப்படும் என தெரியவருகிறது. இதற்கு பதிலாக பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் அமைச்சரவையில் தலைவர் என்ற வார்த்தை சேர்க்கப்பட உள்ளது.
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் சகல நிறைவேற்று அதிகாரங்களும் இரத்துச் செய்யப்பட மாட்டது.
எனினும் நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடு என அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் இடைக்கால ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்திற்கு பின்னர் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்ற யோசனை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் போது சந்தர்ப்பத்தில் இந்த திருத்த யோசனை முன்வைக்கப்படும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRVSUlr2J.html

Geen opmerkingen:
Een reactie posten