தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி

இன்று நாட்டில் மாட்டு ஆட்சியே நடைபெறுகின்றது: தயாசிறி ஜயசேகர
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 08:49.03 AM GMT ]
இன்று நாட்டில் மாட்டு ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹெட்டிபொல கட்சிக் காரியாலயத்தில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் எவரும் கிடையாது. வடமத்திய மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைகளை நாமே அங்குரார்ப்பணம் செய்து வைப்போம்.
எங்களது பாடசாலைகளுக்கு எவராவது கை வைத்தால் அதிபர் அல்லது பிரதி அதிபரை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே வெற்றியீட்டியது.
தற்போதைய அரசாங்கம் ஒவ்வொருவரினதும் குப்பையை சேகரித்து வருவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார் ஜெயக்குமாரி
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 08:53.12 AM GMT ]
மனித உரிமை செயற்பாட்டாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்ப உதவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் ஜெயக்குமாரி மீது குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஜெயக்குமாரியை விடுதலை செய்ய வேண்டும் என அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
எனினும் சட்டமா அதிபரின் எழுத்து மூலமான ஆலோசனை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார். அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனை என்ன என்பதை நீதிமன்றத்திற்கு அறியத் தருமாறு நீதவான், பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் ஜெயக்குாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq6B.html

Geen opmerkingen:

Een reactie posten