தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 maart 2015

நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் இடம்பெற்ற அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்!- வடமாகாண முதலமைச்சர்

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது: ராஜித சேனாரத்ன
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 06:16.02 AM GMT ]
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நாமல் ராஜபக்சவிற்கு சொந்தமானதல்ல என்றால், அது யாருக்கு சொந்தமானது என்பதை தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி குறித்து நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த தொலைக்காட்சி குறித்து இதுவரை காலமும் எதனையும் அவர்கள் கூறவில்லை. அவர்களின் அரசாங்கம் இல்லாத காலத்தில் அவர்கள் இவற்றை கூறுகின்றனர்.
குறித்த தொலைக்காட்சியை எப்படி வாங்கினர்?. அவர்கள் அதனை வாங்கவில்லை என்றால், அது யாருடையது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
அந்த நபர் தொலைக்காட்சியை வாங்க பணம் எப்படி கிடைத்தது. எங்கு அவர் வருமான வரி செலுத்தினார் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
நாமல் ராஜபக்ச தனது சட்ட நிறுவனத்தை ஏற்படுத்த எங்கிருந்து பணம் கிடைத்தது. அவற்றில் இருந்து கிடைக்கும் வருமானம் என்ன?, அப்படியான எந்த தகவல்களும் இல்லை எனவும் ராஜித சேனரத்ன குறிப்பிட்டுள்ளார்.


தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதியினை வென்றெடுப்போம்: சுவிசின் இருவேறு இடங்களில் நா.க.த.அரசாங்கத்தின் பொதுக்கூட்டங்கள்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 06:57.11 AM GMT ]
தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதியினை வென்றெடுக்கும் செயல்முனைப்பில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் சமகால அரசியற் பொதுக்கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் புலம்பெயர் தேசங்களெங்கும் முன்னெடுத்து வருகின்றது.
இதனொரு அங்கமாக சுவிசின் சூரிச் நகரினைத் தொடர்ந்து USTER, WINTERTHUR ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களை நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
புதிய ஆட்சி புதிய அரசாங்கம் என்ற ஒப்பனையுடன் தமிழின அழிப்பின் இரத்தம் தோய்ந்த தனது கரங்களை அனைத்துலக அரங்கில் சிறிலங்கா ஏமாற்றி வரும் நிலையில்,
சிறிலங்காவின் தந்திரோபாய வியூகங்களை முறியடிக்கவும் மக்களுக்கு அரசியல் விழிப்பூட்டவும் இப்பொதுக் கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் (08-03-2015) மார்ச் 8ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 14h30 மணிக்குZurcher strasse,106 8406 WINTERTHUR இடத்திலும், 17h30 மணிக்கு Asylstrasse,24 8610 USTERஇடத்திலும் இப்பொதுக் கூட்டங்கள் இடம்பெறுகின்றன.
பொதுமக்கள் தமிழ் அமைப்புக்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள், ஊடகர்கள் என அனைவரையும் இப்பொதுக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு கோரியுள்ளது.

இலங்கை மீனவர்கள் ஆறு பேர் இந்திய கடற்படையினரால் கைது
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 08:16.37 AM GMT ]
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் தமிழக கடற்பரப்பின் தென்கிழக்கே கோடிய கரைக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே இன்று காலை இவர்களை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களுடைய படகுகளையும் இந்தியக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இவர்கள் ஆறு பேரையும் காரைக்கால் மார்க் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் இடம்பெற்ற அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்!- வடமாகாண முதலமைச்சர்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 08:22.58 AM GMT ]
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிற்கும், நோர்வே நாட்டில் தூதுவர் கிறீட்ட லோஷனுக்குமிடையில் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றிருக்கின்றது. 
இன்றைய தினம் காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணிவரையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பின் நிறைவில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் சூழ்நிலை மாற்றம் எவ்வாறுள்ளது? என்பது தொடர்பாக அவர் எம்மிடம் வினவியிருந்தார். அதில் குறிப்பாக சில மாற்றங்கள் உருவாகியிருக்கின்றமையினை நாங்கள் ஒத்தக் கொண்டிருப்பதுடன், ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் மாற்றம் மற்றும் அவர்கள் எம்மோடு இணைந்து செயற்படும் தன்மை ஆகியவற்றை நாங்கள் வரவேற்றிருப்பதனை தெரிவித்திருக்கின்றோம்.
தொடர்ந்து ஜெனீவா தீர்மானம் பிற்போடப்பட்டமையினால் எவ்வகையான பாதிப்புக்கள் வரும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் எனவும், தமிழர்களுக்கு சாதகமான போக்கே தொடர்ந்தும் இருக்கும் நிலையில் பிற்போடப்பட்டதனை எதிர்ப்பதன் நோக்கம் என்ன? என அவர் எம்மிடம் வினவியிருந்தார்.
இதன்போது நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் சில இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் கைநழுவிப் போகும் என நாங்கள் நம்புவதால் அதனை உரியகாலத்தில் வெளியிடுங்கள் என கேட்டிருப்பதாக கூறினோம்.
அதற்குப் பதிலளித்த அவர் ஐ.நா ஆணையாளரின் கருத்தைச் சுட்டிக்காட்டி காலம் தாழ்த்தப்பட்டாலும் அது உரியவகையில் வரும் என்பதை எடுத்துக்காட்டியிருந்தார்.
தொடர்ந்து இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எதற்காக? என அவர் எம்மோடு வினவியிருந்தார். அதற்கு நாம் கூறியிருந்தோம். அந்த தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும். எனவே அதனை குறைத்துப் பார்க்கத் தேவையில்லை. மேலும் அதில் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
அதற்கும் இடமில்லை. என்றே நாங்கள் நம்புகின்றோம். எதற்காகவெனில் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் அவ்வப்போது வெளிப்படுத்திய அறிக்கைகளிலிருந்தே நாம் அந்த தீர்மானத்தை உருவாக்கினோம்.
மேலும் இனங்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் இடம்பெற்ற அநீதிகளை ஒத்துக்கொள்ளவேண்டும். அதனை கருத்தில் கொண்டுமே இதனை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq5I.html

Geen opmerkingen:

Een reactie posten