[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 09:52.04 AM GMT ]
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீற் லோகீன் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கண்டி வீதி, அரியாலையில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் பகுதியில் நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசு தொடர்பாக ஆராய்வதற்கு வடக்கு மாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தரையை ஊடுருவும் ரேடார் கருவியை வழங்கி உதவுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் கேட்டிருந்தது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்தி வரும் ரேடார் உபகரணம் நோர்வே நாட்டால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும்.
இதன் அடிப்படையில், கடந்த வாரம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் நோர்வே நிபுணர்களும் வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்து இதுதொடர்பாகக் கலந்துரையாடியதோடு, நிபுணர் குழுவையும் சந்தித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாகவே நோர்வே நாட்டுத் தூதுவரும் வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, தரையை ஊடுருவும் டேராரை விரைவில் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருவதற்கு ஆவன செய்வதாகத் தெரிவித்த நோர்வே தூதுவர், நிபுணர் குழுவாலும் தூய நீருக்கான விசேட செயலணியாலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விபரமாகக் கேட்டறிந்து கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq6F.html
மக்கள் கொண்டுள்ள பற்றுதலை வெளிப்படுத்தவே 2012ல் தேர்தலில் போட்டியிட்டோம்: த.தே.கூ உறுப்பினர் நடராசா
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 09:55.22 AM GMT ]
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்திற்கு நேற்றய தினம் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பிரிக்கப்படாத தீவில், எமது தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படாத சமஸ்டி முறையிலான தீர்வு இந்த அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலை ஏற்பட்டால் நாம் இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படலாம் என்பதே எமது தலைவர் சம்மந்தன் ஐயாவின் கொள்கை.
இந்த மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் போராட்டத்தினால் தோற்றுவிக்கப்பட்டது. எமது மக்கள் உயிர் உடைமைகளை இழந்து, இந்திய அரசின் அனுசரணையுடன் தோற்றுவிக்கப்பட்டதே இந்த மாகாண சபை முறைமை.
எமது மக்கள் சிந்திய இரத்தத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்ட மாகாண சபையை இன்னுமொரு சமூகம் அனுபவித்து வருவதும் எம்மை அதிலிருந்து புறம் தள்ளுவதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
நாம் இந்த மாகாண சபையில் போட்டியிட்டது வெறுமனே அபிவிருத்திக்காகவோ அல்லது அரசு அமைப்பதற்காகவோ அல்ல எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீது வைத்திருக்கின்ற பற்றுதலை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 2012ம் ஆண்டு தேர்தலில் நாம் போட்டியிட்டோம்.
கடந்த மஹிந்த அரசின் நெருடலுக்குள் எமது மக்களால் எமக்கு பூரண ஆதரவைத் தர முடியாமல் முடக்கப்பட்டிருந்த காலத்திலும் எமது மக்களால் நாம் தெரிவு செய்யப்பட்டோம். இவ்வாறான நிலையில் அப்போதிருந்த அரசு அவர்களது பக்கமும் தமிழர் ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்பதைக் காட்ட சூழ்ச்சி மூலம் சந்திரகாந்தனைத் போட்டியிட செய்தனர்.
ஜனநாயக விழுமியங்களைப் பேணுகின்ற அரசில், பெரும்பாண்மை அங்கத்தவர்களைப் பெற்ற கட்சியே ஆட்சியமைப்பது வழமை, ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் எந்தவொரு இனமும் தனித்து ஆட்சி அமைப்பது என்பது முடியாத விடயமே.
மத்தியில் புதிய ஆட்சி மாற்றம் இடம்பெற்றதுடன் கிழக்கில் ஏற்படவிருந்த ஆட்சி மாற்றத்தில் தமிழர் முதலமைச்சராக வரக்கூடாது அதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து முதலமைச்சர் ஒருவர் வருவதைத் தடுக்க வேண்டும் என்ற சூழ்ச்சியே கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் விடயத்தில் இடம்பெற்றது.
இதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாக சோரம் போன எமது மாகாணத்தின் எட்டப்பர்களே இருந்தார்கள். அவர்களின் சூழ்ச்சியினாலேயே நாம் ஏமாற்றப்பட்டோம். இருப்பினும் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த மாகாண சபை ஆட்சியில் இணைந்தோம்.
இருப்பினும் நாம் அவர்களிடம் எதனையும் கெஞ்சிக் கேட்கவில்லை. மிஞ்சியே எமது வாதத்தினை முன்வைத்தோம். எமது உரிமைகளையும் தனித்துவத்தினையும் விட்டுக் கொடுக்காமலேயே இந்தப் பதவிகளைப் பெற்றோம். இவை நாம் விரும்பிப் பெறவில்லை காலத்தின் கட்டாயத்தால் பெறப்பட்டவையே. கிழக்கு மாகாண சபை அமர்வு தொடர்பில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
மூன்று மாவட்டங்களிலும் விகிதாசார முறையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தான் நாம் இந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். நாம் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திற்காகவே இந்த பதவிகளை ஏற்றுள்ளோம். எம்மால் அவ்வாறு செய்ய முடியாது போனால் அந்த பதவிகளையும் துறக்கத் தயங்க மாட்டோம் என்றார்.
வடக்கு, கிழக்கு இணைந்திருந்தால் எமது ஆட்சி எப்போதோ நிலையான ஆட்சியாக பரிணமித்திருக்கும்: பிரசன்னா இந்திரகுமார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என சூழ்ச்சி செய்தவர்கள் எம்மை ஆட்சியில் இருந்து துரத்த எத்தனித்தவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பது நிலையானதாக இருக்காது என்ற காரணத்தினாலேயே நாம் உடன்படிக்கையின் பிரகாரம் முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்திருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்திற்கு நேற்று பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் இந்த மூன்று மாதத்திற்குள் பலர் கபடத்தனமாக ஆட்சி அதிகாரத்தினைப் பெற முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையில் எமது நடவடிக்கை புதிய பரிணாமம் பெற்றுள்ளது.
இதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் மறுபடியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் மண்டியிட்டார்கள்.
அவர்கள் எங்களுடன் வந்து இணைவதாகவும் எமக்கு முதலமைச்சுப் பதவியைத் தருவதாகவும் தெரிவித்து கபட நாடகத்தினை நிகழ்த்தினார்கள். இதன் போது எமது தலைவர் சம்மந்தன் ஐயா, அவர்கள் தான் இது தொடர்பில் முடிவினை மேற்கொள்ள முடியாது. எமது மாகாண சபை உறுப்பினர்கள் பதினொரு பேரும் தான் இதனைத் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவித்து விட்டார்.
இதுதான் எமது தலைமையின் பண்பு. தமிழ் தேசியக் கூட்டமைப்பினை மாகாண சபை ஆட்சியில் இருந்து துரத்த எத்தனித்தவர்களுடன் நாம் கூட்டுச் சேரும் போது அது எமக்கு நிலையானதாக இருக்காது என்பதால் நாம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
நாங்கள் அதிகாரப் பரவலாக்கத்தினைக் கேட்பவர்கள். அப்படி ஒரு கொள்கையுடன் இருக்கும் நாங்கள் இன்று ஒரு தமிழ் பேசும் சமூகத்துடன் தான் இணைந்துள்ளோம். அவர்கள் எமக்கு பல தடவைகள் துரோகங்களைச் செய்திருந்தாலும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் இருப்பதால் நாம் அவர்களுடன் சேர்ந்திருக்கின்றோம்.
ஆனால் அவர்களிடம் மண்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயாரில்லை. நாங்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆனால் ஏதோவொரு வகையில் இன்று எமக்கு இந்த மாகாண சபை முறைமை கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
இந்த முறையில் வடக்கு கிழக்கை பிரித்ததன் பின்னர் ஆட்சியமைப்பது தொடர்பில் நாம் கூட்டிணைய வேண்டி இருக்கின்றது. இதனால் தான் நாம் பலரினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்திருந்தால் எமது ஆட்சி எப்போதோ நிலையான ஆட்சியாக பரிணமித்திருக்கும்.
எனவே எமது தாயகம் வடகிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் பிரிவினை இல்லாமல் உள்ளக சுயாட்சி முறைமையினை ஏற்று, எமது மக்கள் தங்கள் ஆதரவினை வழங்க வேண்டும் என்ற பல எண்ணப்பாடுகளுடனேயே நாம் தற்போது அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றோம்.
இந்த நாட்டினைப் பிரிக்க கூடாது என்ற நோக்கமே எம்மிடமும் இருக்கின்றது. நாம் ஒற்றுமையாக செயற்படுவதற்கு எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவினை வழங்க வேண்டும். இந்த கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் 40 சதவீதமாக இருக்கின்றோம்.
ஆனால் இந்த மாகாணத்தில் 36 வீதமாக இருக்கின்ற சகோதர முஸ்லீம் இனத்தவர்கள் எம்மை விட அதிகமான உறுப்பினர்களை பெறுகின்றார்கள். இது எவ்வாறு நிகழ்கின்றது என்று எமது மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே எமது ஒற்றுமையும் எமது பலமும் சேரும் பட்சத்திலே தான் நாம் யாரிடமும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்று தெரிவித்தார்.
கசப்பான விடயங்களை நாம் மறக்க வேண்டும்- கி.துரைராஜசிங்கம்
கிழக்கு மாகாண சபை விடயம் தொடர்பில் பல கசப்பான விடயங்கள் இடம்பெற்றன தான். ஆனால் நாம் நடந்து முடிந்த கசப்புகளை மறந்து, எமது மக்களுக்கு இனி நடக்கவிருக்கும் இனிப்பான விடயங்களையே தெளிவுபடுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் விவசாய கால்நடைகள் அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முனைத்தீவு மேன்பவர் விளையாட்டுக் கழகத்திற்கு வியாழக்கிழமை பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது!
கடந்த மூன்று மாதங்களாக நான் மாகாண சபை தொடர்பிலும் சரி ஏனைய அரசியல் விடயமாகவும் சரி நான் பேசவில்லை. ஏனெனில் இந்த மூன்று மாதங்களும் தமிழ் மக்கள் பல்வேறு விதமாக செய்திகளால் திக்குமுக்காட்டப்பட்டனர். செய்திகள் செய்தீக்களாக வடிவெடுத்தமையால் மக்கள் அதிகமாக கலங்கிக் கொண்டிருந்தனர்.
நாம் ஒரு விடயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அதுவும் வழமைக்கு மாறாக வித்தியாசமானதொரு செயற்பாடு முழுமை பெறாத போது அதனைத் துண்டு துண்டாக காட்டுவது எமது மக்கள் மத்தியில் குழப்பத்தினையே ஏற்படுத்தும். எனவே அவ்விடயம் முழுமை பெற்றதும் இது தொடர்பில் பேசலாம் என்றே எண்ணியிருந்தேன்.
எமது மாகாண சபை விவகாரம் தொடர்பில் ஊடகங்களும் பல உத்திகளை கையாண்டிருந்தமையை காணக் கூடியதாக இருந்தது. அதிலும் அவ்வுத்திகள் ஒரு தரப்பினை மாத்திரமே வெளிப்படுத்துவனவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சில ஊடகங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்மாறான விளைவினைத் தோற்றுவிக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டமையும் காணக் கூடியதாக இருந்தது. ஒரு செய்தி வெளிப்படுத்தப்படும் போது இரு தரப்பிலிருந்தும் உண்மைத் தண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஊடகங்கள் செய்தி ஒன்றினை அதன் உச்ச நிலைக்கு எடுத்துச் சென்று அதற்கு மக்கள் மத்தியில் ஆர்வத்தினை ஏற்படுத்தி ஒரு தொடர்த்தன்மையினை ஏற்படுத்தி விடுகின்றார்கள் அப்படித்தான் குறிப்பிட்ட காலத்தில் செய்திகள் வெளிவந்தன.
இருப்பினும் ஊடகங்கள் பல உத்திகளைப் பயன்படுத்தி மக்களுக்கு நியாய பூர்வமான செய்திகளையும் வெளியிட்டிருந்தார்கள். தற்போது எல்லா விடயங்களுக்கும் மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
எதுவாக இருந்தாலும் எமது அரசியல் பயணத்தில் புதிய புதிய அத்தியாயங்கள் திறக்கப்பட்டதுடன் அவை முன்னையவற்றை விட சில வித்தியாசங்கள் தோற்று விக்கப்பட்டுள்ளனன.
எமது அரசியல் பயணம் 1949ம் ஆண்டு தொடக்கம் 1965ம் ஆண்டு வரை ஒரு ஓட்டமான அரசியல் பயணமாக இருந்தது. எமது குரல் ஓங்கி ஒலித்த காலம், அதன் பின் 1965 தொடக்கம் 1970ம் ஆண்டு காலப்பகுதியில் எமது கட்சி தேசிய அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தது. பின்னர் 1970 தொடக்கம் 2014 வரை ஒரு விதமான வீச்சு அரசியல் நிலை இடம்பெற்றது.
அதிலும் 2014 இறுதி ஒன்றரை மாதங்களும் ஒரு அரசியல் மாற்றத்தினை வேண்டி எமது அரசியல் பயணம் நிகழ்ந்தது. பின் 2015.01.08ம் திகதிக்கு பின்னர் தற்போதைய சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு நாம் பங்காளிகள் அந்த மாற்றத்தில் பங்கு பெற வேண்டியவர்கள் என்ற உணர்வோடு செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நாம் தற்போது பல விடயங்களில் சிந்தித்து செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். நாம் சேர்ந்து ஆதரவு கொடுத்து மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தினை வீழ்த்திப் பெற்ற இந்த அரசை தற்போதைய நிலையில் சங்கடத்திற்குள் ஆழ்த்த முடியாது. நாம் எமது வரலாறுகளை திரும்ப பார்த்தது காலத்தின் தேவைக்கேற்ப நாம் மேற்கொள்ளாத நடைமுறைகளை தற்போதைய நிலையில் அவ்வாறான விடயங்களை மேற்கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தோம்.
தற்போது நல்லிணக்க அரசியல் என்ற வகையில் கிழக்கு மாகாண சபையிலும் நாம் பேசுகின்ற அரசியல் நல்லிணக்கம் இருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் சில விடயங்களை நாம் அவதானித்து மேற்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த கசப்புகளை மறந்து மக்களுக்கு இனி நடக்கவிருக்கும் இனிப்பான விடயங்களையே தெரிவிக்க வேண்டும். இதுதான் நல்ல தலைமைக்கு அழகு.
இந்த விடயத்தில் எமது தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் கிழக்கு மாகாண விடயத்தில் மாகாண சபை உறுப்பினர்களிடமே முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்தார். ஏனெனில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு தான் தற்போதைய மக்களின் நிலைமையும் அவர்களின் எண்ணப்பாடுகளும் புரியும்.
எனவே அவர்கள் கலந்தாலோசித்து மக்கள் எதிர்பார்க்கும் முடிவினை எடுக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். இதனை தலைமை தீர்மானிக்க முடியாது என்றும் தெரிவித்தார். இவ்வாறு எதிர்காலம் பற்றி உறுப்பினர்களின் கருத்துக்களை கோரும் தலைமைத்துவம் வேறு எங்கிலும் நாம் அவதானிக்க முடியாது.
அந்த வகையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பங்காளிகள் நாம் என்பதனால் எமது உரிமைகளை நாம் விட முடியாது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாகிய நாம் முன்வந்தமையை அடிப்படையாகக் கொண்டே எமது தலைவர் எமது முடிவுகளுக்கு பச்சைக் கொடி காட்டினார். அவர் இது தொடர்பில் மிகச் சிறப்பான வழிகாட்டியாக இருந்திருந்தார். இந்த நேரத்தில் எமது தலைமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
சம்மந்தன் ஐயாவின் வழிகாட்டலில் தான் நாம் கிழக்கு மாகாண சபையில் இந்த உயர்வுக்கு வந்திருக்கின்றோம். கிழக்கு மாகாண சபை ஆட்சியில் பங்குபெற வேண்டும் என மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டே ஆட்சிப் பொறுப்பை பெற்றோம். அதற்கு எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அமைச்சுப் பதவி பகிர்வின் போதே சில முரண்பாடுகள் ஏற்பட்டது ஆனால் அது தற்போது இல்லை.
இது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குரிய பெருமை எமக்குள் எத்தனை முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தேசியம் என்ற ரீதியில் எமது கசப்புகளை மறந்து இணைவோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை எந்தவகையிலும் நலிவடைய செய்ய முடியாது.
இந்த புதிய அத்தியாயம் கொண்ட பாடத்தினை எமது மக்களை நினைவில் வைத்தே மேற்கொள்வோம் அத்துடன் எமது ஏனைய உறுப்பினர்களுடனும் இணைந்து குழு செயற்பாடாகவே இந்த ஆட்சி அமையும் என்று தெரிவித்தார்.
தேசிய ஒளடதங்கள் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 10:11.57 AM GMT ]
தேசிய ஒளடதங்கள் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனநாயக தேசிய கூட்டனியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார். மேலும் சுகாதார அமைச்சரினால் இந்த சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
கண்டி பேரணிக்கு செல்வோர் மீது கல்வீச்சு தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 10:26.51 AM GMT ]
சற்று நேரத்தில் மகிந்தவுடன் நாட்டை வெற்றிபெற செய்வோம் என்ற தலைப்பில் கண்டி நகரில் பேரணி இடம்பெறவுள்ளது.
குறித்த பேரணி இடம்பெறும் இடத்திற்கு செல்வோர் மீது கல் வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பேரணியில் கலந்து கொள்ள வருகை தருகின்ற பஸ்கள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் காலத்தில் ஜே.வி.பி நடுநிலைமை வகிக்க தவறியது: அனுரகுமார திஸாநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 10:32.41 AM GMT ]
சுயாதீன தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அல்லி மலர் அமைப்பு, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் கனரக ஆயுதங்களில் தாக்குதல் நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தது போன்ற காரணங்களினால், யுத்தம் தொடர்பில் கட்சி கொண்டிருக்க வேண்டிய நடுநிலைமையை பேண தவறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை குறித்து ஜே.வி.பியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற்குழு ஆகியவற்றில் விரிவாக கலந்துரையாடி சுயவிமர்சனத்தி்ல் ஈடுபட்டதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவல்களை வழங்கும் அமைச்சரவை பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 10:51.46 AM GMT ]
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனை கூறியிருந்தார்.
எனினும் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு தயாரித்துள்ள தேர்தல் முறை திருத்தத்திற்கு சகல அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய முடியும் என்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
தற்போதைய அரசாங்கத்திற்கு 100 நாட்களுக்கு மாத்திரமே மக்கள் ஆணையை வழங்கியிருப்பதாகவும் ஏப்ரல் 23 ஆம் திகதி நிச்சயமாக நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் பிரதமர் கூறியிருந்தார்.
தேர்தல் முறையில் மாற்றம் குறித்து இரண்டு பிரதான கட்சிகள் இடையில் பிரச்சினைகள் இல்லை. சிறிய கட்சிகள் மாத்திரமே பிரச்சினைகளை எழுப்பியுள்ளன. எனினும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவை பற்றி எதுவும் பேசப்படவில்லை.
அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று வெளியிட்ட பொய்யான தகவல் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனாரத்ன இதுவரை மூன்று முறை புதிய அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என அவர் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். எனினும் ஜனாதிபதி அப்படியான எண்ணத்தை கொண்டிருக்கவில்லை.
இதனை தவிர கொழும்பு துறைமுக நகரம் குறித்து அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பதாக ராஜித கூறியிருந்ததுடன் அப்படியான தீரமானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. கே.பி வெளிநாடு சென்று விட்டதாக ஒரு முறை தெரிவித்திருந்தார். ஆனால் கே.பி வெளிநாடு செல்லவில்லை.
அத்துடன் முன்னாள் பிரதமர் நீதியரசர் மொஹான் பீரிஸ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக ராஜித சேனாரத்ன கூறியிருந்தபோதும் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன வெளியிடும் தகவல்களை ஊடகவியலாளர்களை வேறு அமைச்சர்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTaSUmq7B.html
Geen opmerkingen:
Een reactie posten