தலைமன்னார் - மடுவிற்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார் மோடி !
[ Mar 14, 2015 05:19:14 PM | வாசித்தோர் : 4740 ]

இலங்கைக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று(13)வெள்ளிக்கிழமை வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(14) சனிக்கிழமை மதியம் 12.27 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து தலைமன்னாரில் இருந்து மடுவிற்கான புகையிரத வேவையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இந்தியப் பிரமதர் நரேந்திரமோடி, 26 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இன்று சனிக்கிழமை காலை தலைமன்னார் பியர் பகுதிக்கு விசேட வானூர்தி மூலம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் திரண்டு அமோக வரவேற்றை வழங்கினர்.பின் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்திற்குள் வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12.27 மணியளவில் கொடி அசைத்து வைபவ ரீதிர்கு புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார். -புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட போது திடீர் என மழையும் பெய்ய ஆரம்பித்தது.
புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதன் பின் மன்னார் மாவட்டம் மற்றும் வடமாகாண மக்கள்,மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.-குறித்த மகஜரை மன்னார் மறைமாவட்ட ஆயர்,வடமாகாண அமைச்சர்,வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கையளித்தனர்.

மோடியின் பயணத்தை முன்னிட்டு யாழில் வரலாறு காணாத பாதுகாப்பு !
[ Mar 14, 2015 06:12:27 PM | வாசித்தோர் : 7200 ]
இந்தியப்பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற நிலையில் என்றும் இல்லாதவாறு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதற்கான பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தப் பாதுகாப்பு கடமையில் இலங்கை மற்றும் இந்திய பொலிஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய மோடியின் நிகழ்வு இடம்பெறும் இடங்கள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியோ அல்லது பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வரும்போது கூட இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும் அது மட்டுமல்ல யாழ்ப்பாணத்திற்கு சென்ற இரண்டாவது வெளிநாட்டுப் பிரதமர் என்ற பெருமையினையும் மோடி பெற்றுள்ளார். மோடியின் பயணத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் இந்தியக் கொடி பறக்கவிடப்பட்டு உள்ளது.
இன்று காலை அநுராதபுரத்திற்கு செல்லும் இந்திய பிரதமர் மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் தலைமன்னாருக்கு செல்லவுள்ளார். அங்கு தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினை ஆரம்பித்து வைப்பார். அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு இந்திய விமான படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி மூலம் செல்லும் மோடி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இறங்கவுள்ளார். பின்னர் யாழ். பொதுநூலகத்தில் கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லை நாட்டவுள்ளார். இளவாலைப்பகுதியில் இடம்பெறவுள்ள இந்தியன் வீடுகளைக் கையளிக்கும் நிகழ்விலும் மோடி கலந்து கொண்டு வீடுகளை மக்களிடம் கையளிப்பார். அத்துடன் வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களையும் மோடி சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய 3 மணித்தியாலங்களே மோடி யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2579.html

http://www.athirvu.com/newsdetail/2579.htmlஎங்களை தோற்கடித்தது "றோ" உளவுப் பிரிவு தான்: மகிந்த மோடியோடு காட்டம் !
[ Mar 15, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 1065 ]
இலங்கை சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , இலங்கையில் பலரை சந்தித்துள்ளார். அதில் முக்கியமான சந்திப்பு என்று கருதப்படுவதும் நரேந்திர மோடி மகிந்தரை சந்தித்தது தான். அதற்கு சற்று முன் அவர் நமால் ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். அதாவது நரேந்திர மோடிக்கு ஒரு பாடம் கற்பிக்க மகிந்த திட்டம் ஒன்றை தீட்டி நிறைவேற்றியும் உள்ளார். மகிந்த -மோடி சந்திப்பு நிகழவுள்ள நேரத்தில் அவ்விடத்திற்கு திடீரென வந்த நமால் ராஜபக்ஷ ,அவரை வரவேற்பது போல் வரவேற்று தனது தந்தையிடம் அழைத்துச் சென்றுள்ளார். நூலகம் போன்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஒரு அறையில் மகிந்த உட்கார்ந்து இருக்க அவரை மோடி சென்று சந்தித்தது போல உருவாக்கப்பட்டுள்ளது.
மோடி மிகவும் அமைதியாக காணப்பட்டுள்ளார். ஆனால் மகிந்த ராஜபக்ஷ வழமைபோல வட கிழக்கு மக்களாளே தமது தோல்விக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதுபோக இந்திய உளவுத்துறையின் செயல்பட்டுகள் குறித்தும் விமர்சித்துள்ளார் என்று தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கின்றன. இருப்பினும் புன்முறுவலோடு மோடி எதனையும் பேசவில்லை. தோற்றுப்போன ஒரு அரசியல்வாதியின் வலியை உணர்ந்தவர் போல அவர் அமர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது. மகிந்தர் வழமையான புராணத்தை பாடி முடித்துள்ளார்.
இவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு தான் என்கிறார்கள் கொழும்பில் உள்ள விடையம் அறிந்த வட்டாரத்தினர்.
http://www.athirvu.com/newsdetail/2583.html
Geen opmerkingen:
Een reactie posten