[ பி.பி.சி ]
இந்தியாவில் குஜாரத் மாநிலத்தில் பூகம்ப அழிவு ஏற்பட்டதன் பின்னர் வடிவமைக்கப்பட்ட வீடுகள், இலங்கையின் சுனாமி பேரழிவின் பின்னர் பயன்படுத்தப்பட்டு இப்போது முழுமையடைந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, இளவாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் சனியன்று வடமத்திய மாகாணத்தின் புராதன நகராகிய அநுராதபுரத்திற்குச் சென்று போதி மர வழிபாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் வடக்கே தலைமன்னாருக்குச் சென்று அங்கு ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்.
அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற அவர், யாழ் பொது நூலகத்தில் கலாசார நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துதன் பின்னர் இளவாலையில் வீடுகளைக் கையளிப்பதற்காகச் சென்றிருந்தார்.
அங்கு பொதுமக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அங்கு பொதுமக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
'இந்த வீடுகள் வெறும் செங்கற்களாலும், சுவர்களாலும் நிர்மாணிக்கப்பட்டவையல்ல. வளர்ச்சியின் அடிப்படையில் கொண்டு செல்லக்கூடிய இலங்கை மக்களின் துயரங்களை நீக்கக் கூடிய, யாழ்ப்பாணத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் சீரமைத்துக் கொடுக்கக் கூடிய வகையில் இவை அமைந்துள்ளன'என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை பாதுகாப்பானதாகவும், சுகம் நிறைந்ததாகவும் அமைவதுடன், இலங்கை மக்களின் வாழ்க்கை பாதுகாப்புடன், அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன் என இந்தியப் பிரதமர் வாழ்த்தினார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSYSUmxyA.html
Geen opmerkingen:
Een reactie posten