[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 03:54.27 AM GMT ]
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் அந்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கை இம்மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வில் சமர்ப்பிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையகம் இலங்கைக்கு வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது அது மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmp6B.html
நாடு முழுவதும் வை-பை சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 04:46.31 AM GMT ]
இந்நடவடிக்கை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்கள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் இரண்டாம் கட்ட பணிகள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 750 இடங்களுக்கு இலவச ‘வை-பை’ இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
மோடியின் இலங்கை விஜயத்திற்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 04:08.13 AM GMT ]
இந்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் 3 அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன.
இனப்படுகொலை நீதிக்கான போராட்டத்தில் ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கை தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் ஈழத் தமிழர்களின் நீதிக்காக குரல் எழுப்பாமல் இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவு பேணும் வகையில் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையிலேயே இலங்கை விஜயத்தை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி இளந்தமிழகம் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் இயக்கம் ஆகியன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இந்திய அரசே! இலங்கையைப் புறக்கணித்திடுக! பிரதமர் மோடியே, இலங்கை பயணத்தை இரத்து செய்க!
இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலை என அங்கீகரித்து, வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தை அங்கீகரித்து இந்திய நாடாளுமன்றத்திலும் ”இலங்கையில் நடப்பது தமிழினப்படுகொலை” என தீர்மானம் நிறைவேற்றுக!
ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் வலியுறுத்துக!
சர்வதேச அரங்கில் இலங்கையின் மதிப்பை உயர்த்தி நோக்கத்திலும் இலங்கையைப் பாதுகாக்கவும் எதிர்வரும் 13ம் திகதி தனது பிரதமரை இலங்கைக்கு சுற்றுலா பயணத்திற்கு இந்தியா அனுப்புகின்றது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார் என்பதைவிட அன்று போலவே இன்றும் சிங்களப் பேரினவாத அரசுடனான உறவை வலுப்படுத்தவே போகிறார் மோடி என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் பன்னாட்டு புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
7 கோடி தமிழர்களின் கோரிக்கையை காலில் போட்டு மிதித்துவிட்டு இலங்கையோடு கும்மாளம் போடும் இந்திய அரசை நாம் எச்சரிக்கின்றோம் என அவ் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
சிங்கள பேரினவாத அரசை உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தனிமைப்படுத்த இலங்கையை புறக்கணிப்போம் என்பதே நமது முழக்கம். குறிப்பாக, இந்திய அரசு இலங்கையுடனான அரசியல் பொருளாதார பண்பாட்டு உறவுகளை துண்டித்து கொள்ள வேண்டும்.
இதன் அடிப்படையிலேயே இந்திய அரசின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கொழும்பு பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லக் கூடாதென போராட்டம் நடத்தப்பட்டமையால் அவரின் இலங்கை விஜயத்தை தடுக்க முடிந்தது.
ஆனால் இன்று இன்னும் வெளிப்படையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு செல்வதை தடுக்க வேண்டிய தேவை முன்னிருந்ததை விட அதிகமாகவுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmp6C.html
Geen opmerkingen:
Een reactie posten