தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 maart 2015

ஒத்திவைக்கப்பட்ட அறிக்கை மேலும் வலுவடைய வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்து



கிழக்கில் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றது புதிய அத்தியாயம்- அமெரிக்க மற்றும் கிழக்கு ஊடகவியலாளர்களின் உறவை பலப்படுத்த கோரிக்கை
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 03:13.49 AM GMT ]
கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றது தமிழர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை வவுணதீவில் நடைபெற்ற கோட்டமட்ட விளையாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும் அந்த அத்தியாயம் பல விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் இதனைப்பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொள்கையில் இருந்து சற்று பரிணமிக்கின்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாகவே அமைச்சர் என்ற நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் அதன் போது சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணத்தின் தேவையின் அடிப்படையில் அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டு அவற்றினை மக்களுக்கு கொண்டுசெல்லும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்க, இலங்கை ஊடகவியலாளர்களின் உறவை பலப்படுத்த கோரிக்கை
மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும், அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடகம் மற்றும் கல்விக்கான பணிப்பாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது அமெரிக்க தூதுவராலயத்தின் ஊடக, கலாச்சார மற்றும் கல்வி அலுவல்கள் பணிப்பாளர் நிக்கோலி சூலீக் மற்றும் தூதுவராலயத்தின் தொடர்பாடல் உதவி இணைப்பாளர் ஒமர் இராஜரெட்ணம் ஆகியோர் ஊடகவியலாளர்களின் தேவைகள், பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்தனர்.
இதன்போது அச்சு, இலத்திரனியல், ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன் அமெரிக்க நாட்டு ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான உறவினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதற்கு பணிப்பாளர், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதிபர், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலை
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 03:43.42 AM GMT ]
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மாணவர்கள் இருந்தும் அதிபரும், ஆசிரியர்களும் இல்லாமல் கரப்புக்குத்தி அ.த.க.பாடசாலை இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் அமரர்.ச.பரமகுரு கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகிவிட்டதையடுத்து, இப்பாடசாலை இவ்வாறு இயங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமை தொடர்பாக வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு தெரிவித்தும், இன்றுவரை அதிபரோ, ஆசிரியரோ நியமிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் மரணமடைந்ததும் புதிய அதிபரை நியமிப்பதற்கான வழிமுறைகளை வலயக் கல்விப் பணிப்பாளர் கைவிட்டு விட்டு, இம்முறை தரம்.5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பத்தை அருகில் உள்ள பாடசலைக்கூடாக அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட அறிக்கை மேலும் வலுவடைய வேண்டும்: பிரித்தானியா வலியுறுத்து
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 03:54.27 AM GMT ]
இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் ஹுகோ ஸ்வைர் அந்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கை இம்மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி எதிர்வரும் செப்டெம்பர் மாத அமர்வில் சமர்ப்பிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையகம் இலங்கைக்கு வழங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது அது மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmp6B.html

Geen opmerkingen:

Een reactie posten