தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 5 maart 2015

நவ்ரூ தீவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சிறுவர்கள் கைது

கைதான காரீய நிறுவனத்தின் 4 பணிப்பாளர்களும் பிணையில் விடுதலை
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 05:20.12 AM GMT ]
காரீய மோசடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை காரீய நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர்கள் நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலையிலுள்ள லக்விஜய அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட காரீயத்தில் மோசடி இடம்பெற்றதினால் இலங்கை மின்சார சபைக்கு ஆயிரத்து 536 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது என செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் நால்வரும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் 18ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மோசடியுடன் தொடர்புடைய மேலும் இரு குழுமப்பணிப்பாளர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு விசாரணைக்கு தயார் என்கிறார் சரத் பொன்சேகா
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 04:20.57 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஒரு உள்நாட்டு விசாரணை நடப்பதை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் இராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை ஒன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதே தமது நிலைப்பாடு என்கின்ற போதிலும், குற்றச்சாட்டு முன்வைக்கப்படுமிடத்து அதனை விசாரிக்காமால், குற்றச்சாட்டை நிராகரிப்பது தவறு என்றும் அவர் கூறினார்.
2 லட்சத்துக்கும் அதிகமான சிப்பாய்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தில் ஒரு சிலர் குற்றங்களை புரிந்திருந்தால், அதனை விசாரித்து அவர்களை தண்டிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்ட போது, அதனை மறுத்த சரத் பொன்சேகா அவர்கள், இதற்கு முன்னரும், குற்றச்சாட்டுக்கள் வந்த போது பொது விசாரணைகள் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இராணுவத்தினருக்கு எதிரான எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர்!– கடற்படை
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 12:28.20 AM GMT ]
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என வடக்கு கடற்படை நிறைவேற்று அதிகாரி ரியர் அட்மிரால் சரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
கடல் எல்லைகளைத் தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இரு நாட்டு மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை.
இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சில ரோந்து படகுகள் பழுதடைந்திருந்த காரணத்தினால் அண்மைய நாட்களில் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் மந்த நிலைமை காணப்பட்டது.
எனினும், தற்போது ரோந்துப் பணிகளில் ஈடுபட படகுகள் காணப்படுகின்றன.
எனவே தொடர்ச்சியாக அத்து மீறல்களில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மீனவர்களை கைது செய்வது தொடர்பில் இலங்கை அல்லது இந்திய அரசாங்கம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என ரியர் அட்மிரால் திஸாநாயக்க அண்மையில் கச்சதீவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


நவ்ரூ தீவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த சிறுவர்கள் கைது
[ வியாழக்கிழமை, 05 மார்ச் 2015, 12:39.06 AM GMT ]
நவ்ரு தீவில் அகதிகளின் அடிப்படை உரிமைக்காவும் அவுஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கையை கண்டித்தும் தங்களது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாமல் தடுமாறிய சிறுவர்கள் கடந்த 3 தினங்களாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும், சிறுவர்கள் நிறுத்த மறுத்த காரணத்தினால் 150க்கும் மேற்பட்டோர் நவ்ரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த 13 வயதுடைய தலைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான இரு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நவ்ரு தீவு பொலிசார் தாக்கியமை, சிறுவர்களை கைது செய்தமை மனித உரிமை மீறல் என அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் வன்மையாக கண்டித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDTZSUmp5C.html



Geen opmerkingen:

Een reactie posten