[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 06:36.05 AM GMT ]
தான் தாக்கல் செய்த இந்த வழக்கில், சட்டமா அதிபர் திணைக்களமும், நீதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவுக்கு ஆதரவாக நேர்நிலையானதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா தனது கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார். தனது சட்டத்தரணியுடன் வருவதற்கு ஜயந்த கெட்டகொடவுக்கு உரிமை உள்ளது. அவர் சட்டத்தரணிகளுடன் வந்தார்.
அந்த சட்டத்தரணிகள் குழுவை பார்த்ததும் நான் ஆச்சரியமடைந்தேன். ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா , கெட்டகொட சார்பில் இலவசமாக ஆஜராகி வாதாடினார்.
ஸ்ரீநாத் பெரேராவின் அரசியல் மற்றும் கொள்கை தொடர்பில் எமக்கு கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் ஒரு வஞ்சகமான சக்தி, நான் நாடாளுமன்ற உறுப்பிராகிவிடக் கூடாது என்ற பயத்திலும் பொறாமையிலும் செயற்பாடுகிறது என்பது இந்த தலையீடு மூலம் தெரியவந்துள்ளது.
புதிய அரசாங்கத்தில் இருக்கும் சிலர் மக்களின் நம்பிக்கை சிதைக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் இந்தியாவுக்கு சொந்தமானதா?:அதிருப்தியில் சீனா
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 06:52.53 AM GMT ]
இலங்கையின் கொழும்பு காலி துறைமுக நகர திட்டம் இந்தியாவுக்கு சொந்தமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நேற்று கொழும்பிலுள்ள சீன தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனக் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடுவது தொடர்பாக இந்தியப் பிரதிநிதிகள் அண்மைக்காலமாக தெரிவித்து வரும் கருத்துகள் தொடர்பில் தாம் வியப்படைந்ததாக அவர் கூறியுள்ளார்.
சீனாவைப் போன்று இந்தியா, அமெரிக்கா, உள்ளிட்ட பல தரப்பட்ட நாடுகளின் கப்பல்களும் கொழும்புக்கு செல்கின்றன.
ஒரு நாட்டின் துறைமுகத்தை இன்னுமொரு நாட்டின் இராணுவ மையமாக பயன்படுத்த முடியுமா எனவும் சீனத்தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
குரங்குகளின் வதிவிடமாக மாறிவரும் இந்திய வீட்டுத்திட்டம்?
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 07:19.49 AM GMT ]
குறிப்பாக வேட்டையன் முறிப்பு,மாளிகை திடல்,மினுக்கன்,கட்டைக்காடு இக்கிராமத்தில் வசிக்கும் பல மக்களுக்கு இன்றுவரை இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.
ஆனால் புத்தளம், சிலாபம் பகுதிகளில் வாழும் மக்களுக்கு இப்பகுதியில் இந்திய வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இக் கிராமத்தில் வாழும் மக்கள் பலர் வீடுகள் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வரும் நிலையில் இக்கிராமத்தில் வசிக்காது புத்தளம் மற்றும் சிலாபம் பகுதியில் வாழ்ந்துவரும் மக்களுக்கு குறித்த வீட்டுத்திட்டம் அரசியல் செல்லாக்கு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால் இக்கிராம மக்கள் விசனமடைந்துள்ளனர்.
புத்தளம்,சிலாபம் பகுதியில் வசித்துவரும் மக்கள் குறித்த வீட்டுத்திட்டத்தை பெற்றுள்ள போதும் அவர்களில் அனேகமானோர் குறித்த கிராமங்களில் வாழவிரும்பாத நிலையில் புத்தளம்,சிலாபம் பகுதியிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
அரசியல் தலையீடு காரணமாக வழங்கப்பட்ட வீடுகளில் மனிதர்கள் வாழாமல் குரங்குகள் வதிவிடமாக மாறிவருகிறது.
குறித்த கிராமத்தில் வழங்கப்பட்ட வீடுகளில் பல இன்று வரை மனித நடமாட்டம் அற்ற வீடுகளாகவே காணப்படுகிறது.
இவ் வீட்டு உரிமையாளர்களுக்கு புத்தளம் மற்றும் சிலாபம் போன்ற பகுதிகளில் வீடுகள் உள்ளதால் அவர்கள் இன்றுவரை இங்கு குடியோறமல் தவிர்த்து வருகின்றனர்.
ஆனால் இக் கிராமத்தில் வாழ்ந்து வரும் பல மக்கள் வீடுகள் இன்றி இன்றுவரை தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இந்திய வீட்டுத்திட்டத்தை தமக்கும் பெற்று தரும்படி வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அதிகாரிகள் இந்திய வீட்டுத்திட்டத்தை பெற்று வருவதாக இம்மக்களுக்கு கூறியிருந்த போதும் இன்று வரை அவ் வீட்டுத்திட்டம் அம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கபடவில்லை என தெரிவிக்கின்றனர்.
எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டுத்திட்டத்தை பெற்றுத்தர வேண்டும் என மக்கள் வேண்டுகொள் விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2D.html
மோடியின் வருகை தமிழர்களுக்கு நன்மை பயக்க வேண்டும்: சிவாஜி லிங்கம்
[ புதன்கிழமை, 11 மார்ச் 2015, 07:27.56 AM GMT ]
வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் இந்திய பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வகையில் 2002ம் ஆண்டு நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்,
இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனவும் வடமாகாண சபை கேட்டு கொண்டுள்ளது.
அத்துடன் தமிழகத்திற்கும், தமிழ் மக்கள் செறிந்து வாழும் வட, கிழக்கு மாகாணங்களுக்கிடையிலும் பொருளாதார ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
தலைமன்னார், ராமேஸ்வரம் படகு சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், திருகோணமலை, தமிழகம் இடையிலான விமான போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் இந்திய பிரதமரிடம் கேட்டு கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyDSVSUmu2E.html
Geen opmerkingen:
Een reactie posten